ஆன்லைனில் ஃபுட் ஆர்டர் செய்து சாப்பிடுவது நன்மையா ? அல்லது தீமையா? என்பதை பற்றி நாம் இவற்றில் காண்போம்.
சிலர் என்று சொல்வதற்கு பதிலாக பலர் என்றே சொல்ல வேண்டும். அட ஆமாங்க இப்போ இருக்கிற காலகட்டத்துக்கு எதுக்கு எடுத்தாலும் வீட்டில் சமைப்பதற்கு அலுப்பு பட்டுக்கொண்டு ஆன்லைனில் உணவை ஃபுட் ஆர்டர் செய்துக்கொண்டு காலத்தை கழித்து கொண்டு வரும் நிலை தற்போது அதிகரித்துக்கொண்டே வருகிறது.
குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் பேச்சுலர்ஸ் வாழ்க்கையை வாழ்கின்றவர்கள்தான் அதிகமாக ஆன்லைனில் உணவை ஆர்டர் செய்து சாப்பிடுகின்றனர்.
பொதுவாக சொல்லவேண்டும் என்றால் ஆர்டர் செய்த உணவுகள் ருசியாக இருக்கிறதா என்று பார்க்கும் அளவிற்கு, அவற்றினால் ஏற்படும் பின் விளைவுகளை பற்றி ஏன்? தெரிந்து கொள்வதில்லை.
ஆன்லைனில் அதிகமாக ஆர்டர் செய்யப்படும் உணவுகள் குறிப்பாக அவற்றில் இருக்கும் ருசி மற்றும் சைவ, அசைவ உணவுகளில் அதிகமாக தரப்படும் மசாலா பொருட்களுக்குத்தான் ஆர்டர் செய்கின்றனர்.
அதிகமாக அவற்றில் இருக்கும் மசாலாவை விரும்பி சாப்பிடுவதால் பற்களின் ஆரோக்கியத்தை அதிகமாக பாதிக்கும் என்று அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
பொதுவாக அனைவரும் நினைப்பது டீ, காபி குடித்தால்தான் பற்களில் அதிக கரைபிடிக்கும் என்று நினைப்போம் அதுமட்டும் அல்ல. இது போன்று ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவுகளில் இருக்கும் மசாலாவினாலும் கூட பற்களில் கரைப்பிடிக்கும். இதன் காரணமாக பற்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
மேலும் ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவுகளான பாஸ்தா, பீஸா போன்ற உணவுகளை அதிகமாக விரும்பி சாப்பிடுவதன் காரணமாக அவற்றில் இருக்கும் ரசாயனப்பொருட்கள் உடல் நலத்தை அதிகமாக பாதிக்கிறது.
அதாவது நெஞ்செரிச்சல், வயிற்று பிரச்சனைகள் மற்றும் உடலில் கொழுப்பு சக்தியை அதிகரித்து உடலுக்கு புதிய புதிய நோய்களையும் உருவாக்கிறது.
குழந்தைகளுக்கு இந்த உணவுகளை கொடுத்தால் தேவையற்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.
குறிப்பாக ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவுகளானது கெட்டுப்போகாமல் இருப்பதற்காக அதிக இரசாயனங்களை சேர்க்கப்படுகிறது. இதன் காரணமாக புற்று நோய்கூட வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக சில ஆராய்ச்சி ஆய்வுகள் கூறுகிறது.
இவற்றில் இருக்கும் ராசயங்கள் உடல் எடையை அதிகரிக்க வழிவகுகிறது.
எனவே ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவுகளை சாப்பிடும் நபர்கள் இன்றுடன் கைவிடுவது மிகவும் நல்லது.
உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க சில வழிமுறைகள் !!!
மேலும் வேலைவாய்ப்பு,ஆரோக்கியம்,தொழில்நுட்பம்,குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.