அரிசி வகைகளும் அதன் பயன்களும்..! Types of Rice And Benefits in Tamil..!

Arisi Vagaigal Athan Payangal

அரிசி வகைகளும் அதன் பயன்களும்..! Arisi Vagaigal Athan Payangal..!

தென்னிந்திய உணவு வகைகளில் மிக முக்கிய இடம்பிடிப்பது அரிசி உணவே. அரிசி உணவில் பலவகைகள் இருக்கிறது என்று நமக்கு தெரியும். இந்த அரிசி உணவில் மட்டும் அல்ல அரிசியிலும் பல வகைகள் உள்ளன. அவற்றுக்கு தனித்தனியாக நன்மைகளும் உள்ளன. பொதுவாக தமிழர்கள் புழுங்கல் மற்றும் பச்சரிசியை மட்டுமே உணவுக்கு பயன்படுத்துவார்கள். அதையும் தாண்டி, பிரியாணிக்கு என பாஸ்மதி அரிசி பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் தமிழர்களின் பாரம்பரிய அரிசி வகைகள் ஏராளம் உள்ளது அவற்றை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாமா..?

அரிசி வகைகள் பயன்கள்..! Types of Rice And Benefits in Tamil..!

கருங்குருவை அரிசி பயன்கள் – Karunguruvai Rice Benefits in Tamil :

கருங்குருவை

Arisi Vagaigal Athan Payangal:- கருங்குறுவை அரிசி “குஷ்டம்” எனப்படும் வெண் புள்ளி, மற்றும் விசக்கடியால் ஏற்படும் பக்கவிளைவுகள் போன்றவைகளைப் போக்கும் சக்தி உடையது. மேலும், உடலை வலுவாக்கும் காயகல்பச் சக்தியும் உள்ள, கருங்குறுவையின் அரிசி ஒரு பங்கும், தண்ணீர் மூன்று பங்கும் சேர்த்து மண்பானையில் ஆறு மாதம் வைத்திருந்தால் அது பால்போல் மாறி, ‘அன்னக்காடி’ என்றழைக்கப்படும் அருமருந்தாக உருவாகிறது. இதை உண்டுவந்தால் மிகக் கொடிய வியாதியான வாந்திபேதி (காலரா) குணமாக்கப்படுவதாக கூறப்படுகிறது.

கவுனி அரிசி மருத்துவ பயன்கள்..!

மாப்பிள்ளை சம்பா அரிசி பயன்கள் – Mappillai samba arisi payangal:-

Arisi Vagaigal Athan Payangal:- பாரம்பரிய அரிசிகளில் சிறப்பு வாய்ந்த ஒன்று மாப்பிள்ளை சம்பா. இளவயதினர்க்கு தேவைப்படுகின்ற அனைத்து சத்துக்களும் நிறைந்த அரிசி மாப்பிள்ளை சம்பா. அதனாலேயே அப்பெயர் பெற்றது. மாப்பிள்ளை சம்பா மருத்துவ குணம் உடையது. மாப்பிள்ளை சம்பா சிகப்பு அரிசி வகைகளில் ஒன்று.

மாப்பிள்ளை சம்பா அரிசி

மாப்பிள்ளை சம்பாவில் நோய் எதிர்ப்பு சக்தி (Immune power) அதிகம் உண்டு. அதனால் அடிக்கடி உடல்நல குறைபாடு ஏற்படாமல் தடுக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு (Diabetics) நன்மை தரும். எளிதில் சோர்வடையாமல் சுறுசுறுப்பாக (Increase Activeness) இருக்க வைக்கும். நரம்புகளுக்கு நல்ல வலுகுடுக்கும்.

கைக்குத்தல் அரிசி பயன்கள்:-

கைக்குத்தல் அரிசி மருத்துவ பயன்கள்

Arisi Vagaigal Athan Payangal:- கைக்குத்தல் பொன்னிபுழுங்கல் அரிசி எல்லா வயதினருக்கும், எல்லா தரத்தினருக்கும் உகந்தது. குறிப்பாகக் குழந்தைகளுக்கு இது மிகவும் ஏற்றது. அரிசியின் முழுச் சத்தும் வீணாகாமல் தருவது புழுங்கல் அரிசிதான். மேலும் நோய்வாய்ப்பட்டவர்கள் சாப்பிட உகந்தது புழுங்கல் அரிசிதான். அதேபோல் இரத்ததில் சர்க்கரை அளவினை மெதுவாக ஏற்றி சர்க்கரை நோயாளிக்கு திடீர் சர்க்கரை உயர்வைத் தடுக்கும்.

உடலுக்கு ஆரோக்கியம் தரும் சிவப்பு அரிசி மருத்துவ பயன்கள் பற்றி தெரியுமா?

அரிசி வகைகள் எத்தனை..!

காட்டுயானம் அரிசி பயன்கள் – Kattuyanam Rice Benefits in Tamil:-

காட்டுயானம்

Arisi Vagaigal Athan Payangal:- ஆன்டி ஆக்ஸிடென்ட் குணங்களால் இதய வியாதிகளுக்கு அற்புதமான மருந்தாகும். டைப் 2 சக்கரை வியாதி நோயாளிகளுக்கு உகந்தது. மேலும் ஏனையப் பாரம்பரிய நெல் வகைகளில், காட்டுயானம் கூடுதல் மருத்துவக் குணம் கொண்டது. இதன் அரிசியை மண் பானையில் சமைத்து, தேவையான அளவு தண்ணீரை ஊற்றிவைத்து மறுநாள் காலையில் சாதம், நீராகாரத்தைத் தொடர்ந்து ஒரு மண்டலத்துக்கு (48 நாட்கள்) சாப்பிட்டு வந்தால், எவ்வகை நோய்க்கும், மற்றும் நீரிழிவு நோய்க்கும் நல்ல பலன் அளிக்கக்கூடியது.

அன்னமழகி அரிசி பயன்கள்:-

அன்னமழகி

Arisi Vagaigal Athan Payangal:- அன்னமழகி (Annamazhagi) பாரம்பரிய நெல் வகைகளில் ஒன்றான இது, புல் வகையைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். மிகவும் இனிப்பு சுவையுள்ள‌ இந்த நெல் (அரிசி), சகல சுரங்களையும், பித்த வெப்பத்தையும் போக்க கூடியதாகவும், மனித உடலுக்கு சுகத்தை கொடுக்க வல்லதாகவும் உள்ளது.

மேலும், இந்த அரிசியைச் சமைத்து மோர் சேர்த்து உண்டால் சிறுநீர் கழிப்பதால் ஏற்படும் எரிச்சல், தண்ணீர் தாகம், வயிற்றுப்போக்கு போன்றவைகளைப் போக்கும் எனக் கூறப்படுகிறது.

இரவில் நீரூற்றிய சோற்றைப் பழையது என்பார்கள். இந்தப் பழையதை விடியற்காலையில் சோற்றில் உள்ள நீரோடு சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும் என்றும், உடலில் ஒளி உண்டாகும் என்றும், மற்றும் வெறிநோய் முற்றிலும் நீங்கும் எனவும் கருதப்படுகிறது.

பழைய சோற்றில் மோர் கலந்து சாப்பிட்டால் உடல் எரிச்சல், பித்தம், மனப்பிரமை முதலியவை நீங்குமென்றும், இரவில் நன்றாகத் தூக்கம் வருமென்றும் கூறப்படுகிறது. மிகுதியாக உண்டுவிட்டால், அப்பொழுதே உறக்கம் கண்களைத் தழுவும் என்பது குறிப்பிடத்தக்கது.

மூங்கில் அரிசியின் மருத்துவ குணங்கள்..!

 

இலுப்பைப்பூ சம்பா அரிசி பயன்கள்:

இலுப்பைப்பூ சம்பா

இலுப்பைப்பூ சம்பா என்று சொல்லப்படும் இந்த நெல் வகை, பாரம்பரிய நெல் வகையாகும். இந்த நெல் 130 – 140 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியது. சரி  இலுப்பைப்பூ சம்பா அரிசி பயன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

இந்த இலுப்பைப்பூ சம்பா அரிசியில் செய்த உணவுகளை உட்கொள்வதினால் பித்தத்தினால் ஏற்படும் பிரச்சனைகளை குணமாக்கும், உடலில் ஏற்படும் உஷ்ணத்தை தணிக்கும், சர்க்கரை நோய் வராமல் தடுக்கும், பக்கவாதம், மூட்டுவலி மற்றும் நரம்பு தளர்ச்சிக்கு இலுப்பைப்பூ சம்பா அரிசி சிறந்த மருந்தாக விளங்குகிறது.

கல்லுண்டை சம்பா அரிசி பயன்கள்:-

KALLUNDAI SAMBA RICE

கல்லுருண்டை சம்பா அரிசி பாரம்பரிய நெல் வகையைச் சேர்த்தது, இந்த நெல் பயிர் தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டப் பகுதிகளில் விளையக்கூடிய நெல் இரகமாகும். 126 சென்டிமீட்டர் உயரம் வரையில் வளரக்கூடிய இந்த நெற்பயிர், 120 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியது. சரி இந்த கல்லுண்டை சம்பா அரிசி பயன்களை இப்பொழுது நாம் அறியலாமா.

கல்லுருண்டை சம்பா அரிசியில் செய்த உணவுகளை உண்பவர்களுக்கு தோள் வலிமைபெறும். அதாவது மல்யுத்தக்காரர்கள் கூட எதிர்க்க இயலாத தோள் வலிமையை தரும். கல்லுருண்டை சம்பா அரிசியில் செய்த உணவுகளை உண்பவர்களுக்கு நல்ல வார்த்தை வளமும் உண்டாக்கும்.

காடைச்சம்பா பயன்கள்:-

காடைச்சம்பா என்று அழைக்கப்படுவது ஒரு பாரம்பரிய நெல் வகையாகும். இந்த காடைச்சம்பாவில் அரிசி உணவு சாப்பிடுவதால், விந்தணு விருத்தியும், அதீத உடற்பலமும் பெருகுவதோடு, பிரமேக சுரமும், (பிரமேக சுரம் என்பது, எக்காலமும் மாதரின் புணர்ச்சி மோகத்துடன்கூடிய பசியின்மை.) மேலும் பல்வேறு நோய்களையும் குணமாக்கும் மருத்துவக்குணம் நிறைந்ததாக கூறப்படுகிறது.

காளான் சம்பா அரிசி பயன்கள்:-

காளான் சம்பாவின் அரிசி உணவு சாப்பிடுவதால், மலை போன்ற அதீத உடற்பலம், பெருகுவதோடு, சில வாத ரோக (சாத்தியரோகம், அசாத்தியரோகம், யாப்பியரோகம் என மூவகைப்பட்ட நோய்கள் உள்ளன) நோய்களை போக்கி உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை வழங்க கூடியதாக இந்த காளான் சம்பா அரிசி பயன்படுகிறது.

கிச்சிலிச்சம்பா அரிசி பயன்கள்:-

கிச்சிலிச்சம்பா அரிசி ஒரு பாரம்பரிய நெல் வகையாகும். இந்த கிச்சிலிச்சம்பா அரிசியில் செய்த உணவுகளை உட்கொள்பவர்களுக்கு உடல் பலம் பெருகும், எப்பொழுது புத்துணர்ச்சியாக இருப்பார்கள், உடல் பளபளப்பாக இருக்கும். உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் இந்த கிச்சிலிச்சம்பா அரிசியில் செய்த உணவுகளை தொடர்ந்து உட்கொள்வதினால் உடல் பருமன் அதிகரிக்கும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்