அருகம்புல் அற்புதமான மருத்துவ குணங்கள்..!

அருகம்புல் மருத்துவ பயன்கள்

அருகம்புல் அற்புதமான மருத்துவ குணங்கள்..!

அருகம்புல் மருத்துவ பயன்கள்:-

அருகம்புல் வாதம், பித்தம், கபம் போன்ற நோய்களை குணப்படுத்தி உடலுக்கு ஊட்டத்தை வழங்கும். சிறுநீரை பெருக்கவும், இரத்த போக்கை தடுக்கவும், மருந்துகளின் நச்சி தன்மைகளை குறைக்கவும் அருகம்புல் சிறந்த மருந்தாக விளங்குகிறது.

சரி இப்பொழுது அருகம்புல் மருத்துவ குணங்களை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம் வாங்க.

கோவைக்காய் மருத்துவ குணங்கள் ..!

அருகம்புல் மருத்துவ பயன்கள் (Arugampul benefits): 1

தேள், பாம்பு, பூரான் போன்ற விஷச்சந்துகள் கடித்தால் உடனே அருகம் புல்லை அரைத்து ஒரு டம்ளர் கொடுக்க வேண்டும். இவ்வாறு கொடுப்பதினால் விஷம் பரவுவது தாமதப்படுத்தும் இந்த அருகம்புல்.

அருகம்புல் மருத்துவ பயன்கள் (Arugampul benefits): 2

அருகம் புல்லை ஒரு கையளவு எடுத்து, அதனுடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்து அரைத்து சொறி, சிரங்கு, புண், படர்தாமரை, அரிப்பு உள்ள இடத்தில் தேய்த்து ஒரு மணி நேரம் அப்படியே வைத்திருக்கவும்.

பின்பு குளிர்ந்த நீரால் கழுவுங்கள். இவ்வாறு தினமும் செய்து வர பிரச்சனை சரியாகும்.

அருகம்புல் பயன்கள் 3

அருகம்புல்லுடன் மஞ்சள், கிச்சிலிக்கிழங்கு, வெட்டி வேர் ஆகியவற்றை சமமாக எடுத்து இடித்து, நீர்விட்டு மைபோல் அரைத்து கொள்ளவும். இந்த கலவையை தலைக்கு தேய்த்து குளித்து வர பொடுகு பிரச்சனை சரியாகும்.

அருகம்புல் மருத்துவ பயன்கள் 4

அருகம்புல்லை ஒரு கையளவு எடுத்து அரைத்து, 200 மில்லி காய்ச்சாத ஆட்டுப்பாலுடன் கலந்து, காலை வேளையில் மட்டும் இரண்டு வாரம் தொடர்ந்து குடித்து வர மூலம், இரத்த மூலம் போன்ற பிரச்சனைகள் சரியாகும்.

குப்பைமேனி (Kuppaimeni) பலவித பிரச்சனைகளுக்கு இயற்கை தந்த வரம்..!

அருகம்புல் மருத்துவ பயன்கள் (Arugampul benefits): 5 

அருகம்புல் ஆபத்துக்கு உதவும் என்பது பழமொழி. அதாவது திடீரென்று காயம்பட்டு இரத்த பெருக்கு ஏற்பட்டாலும், மூக்கில் இரத்தம் கொட்டினாலும் அருகம் புல்லை அரைத்து பயன்படுத்தலாம்.

அதேபோல் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலி, அதிகப்படியான இரத்த போக்கு போன்ற பிரச்சனைகள் குணமாக, இந்த அருகம் புல்லை அரைத்து காய்ச்சாத பசும் பாலில் கலந்து ஒரு டம்ளர் அருந்தலாம்.

அருகம்புல் பயன்கள் 6

கண் நோய்களுக்கு அருகம்புல் சாறு சிறந்த நிவாரணம் அளிக்கின்றது. எனவே அருகம்புல்லை சிறிதளவு எடுத்து தட்டி, துணியில் வைத்து கண்களில் இரண்டு சொட்டுகள் பிழிய கண் எரிச்சல், கண் வலி, கண் சிவப்பு போன்ற பிரச்சனைகள் குணமாகும்.

அருகம்புல் மருத்துவ பயன்கள் 7

உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் தினமும் காலை எழுந்தவுடன் ஒரு கையளவு அருகம் புல்லை எடுத்து நன்றாக அரைத்து, அதனுடன் காய்ச்சாத பசும் பால் கலந்து குடித்து வர உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் அனைத்தும் கரையும். இதனால் உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.

பல பலன்களை அள்ளி தரும் அதிமதுரம் மற்றும் அதன் பயன்கள்..!

அருகம்புல் பயன்கள் 8

சில பெண்களுக்கு உடல் சூட்டினால் அதிகமாக வெள்ளைப்படுதல் பிரச்சனை ஏற்படும். அப்படி பட்டவர்கள் அருகம்புல்லை ஒரு கையளவு எடுத்து நன்றாக அரைத்து, 1 டம்ளர் பசும் தயிரில் கலந்து தொடர்ந்து 10 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை படுத்தல் பிரச்சனை குணமாகும்.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Health tips tamil