முதுகு வலி குணமாக பாட்டி வைத்தியம்..! Back pain home remedies..!

Back pain home remedies

முதுகு வலி நீங்க பாட்டி வைத்தியம்..! Back pain remedies..!

Back pain home remedies:- முன்னெல்லாம் வயதானவர்கள் மட்டுமே சந்திக்கும் பிரச்சனையாக இருந்த முதுகு வலி, இப்பொழுது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினர்களும் சந்திக்கின்ற பிரச்சனையாக மாறிவிட்டது. சரி இந்த பதிவில் முதுகு வலி காரணங்கள் மற்றும் முதுகு வலி குணமாக பாட்டி வைத்தியம் என்ன உள்ளது என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க.

எந்தெந்த வலிகளை சாதாரணமாக நினைக்க கூடாது?

முதுகு வலி காரணங்கள்:-

முதல் காரணம் நம் உடலுடைய சக்திக்கு மீறிய வேலைகளை தொடர்ந்து செய்வது. அதாவது ஒரு கடினமான பொருளை மிக நீண்ட தூரம் தூக்கி செல்வது அல்லது மாடி படிகளில் ஏறிச்செல்வது, அதிகப்படியான உடற்பயிற்சி, அதிகம் சிற்றின்பத்தில் ஆர்வமாக செயல்படுவது, உயரமான இடத்தில் இருந்து குதித்து அடிபடுவது, டூவீலரில் அதிக வேகமாக செல்வது, நாற்காலியில் கால்மேல் கால் போட்டு அமர்வது இவையெல்லாம் முதுகு வலி வருவதற்கான காரணங்கள் ஆகும்.

காரமான உணவுகள், பருப்பு வகைகள் போன்ற உணவுகளை அதிகமாக சாப்பிடுவதினால் முதுகு வலி ஏற்படும்.

உடம்பில் இருந்து வெளியேறும் காற்று, சிறுநீர், மலம், வாந்தி, தும்மல், ஏப்பம், கண்ணீர் முதலியவற்றை வெளியேற்றாமல் அடக்குவதன் காரணமாகவும் முதுகு வலி ஏற்படும். சரி முதுகு வலி நீங்க பாட்டி வைத்தியம் என்ன உள்ளது என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம் வாங்க.

குதிகால் வலி குணமாக பாட்டி வைத்தியம்..!
முதுகு வலி காரணங்கள்

Back pain remedies / முதுகு வலி குணமாக என்ன செய்ய வேண்டும்..!

முதுகு வலி குணமாக பாட்டி வைத்தியம்:-

வைத்தியம்: 1

ஒரு பாத்திரத்தில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றுங்கள் பின் அவற்றில் 5 மிளகு, 5 கிராம்பு மற்றும் 1 கிராம் சுக்கு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கொதிக்கவைத்து,

பின் அந்த நீரை பருக வேண்டும். இவ்வாறு தினமும் இந்த பானத்தை செய்து அருந்தி வருவதினால் முதுகு வலி குணமாகும்.

வைத்தியம்: 2

முதுகு வலி குணமாக இரண்டு வெற்றிலையை எடுத்து கொள்ளுங்கள் அவற்றை சாறுபிழிந்து, இந்த சாறில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் கலந்து பின் எண்ணெயை சூடுபடுத்த வேண்டும்.

இவ்வாறு சூடுபடுத்திய தேங்காய் எண்ணெயை மிதமான சூட்டில் எடுத்து முதுகு வலி ஏற்படும் இடத்தில் வைத்து நன்றாக தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து தேய்த்து வந்தால் முதுகு வலி தங்களை விட்டு நீங்கி சென்றுவிடும்.

அதேபோல் தங்களுக்கு வாத நாராயண இலை கிடைத்தால் அதனை சிறிதளவு எடுத்து விளக்கெண்ணெயில் நன்றாக வதக்கி, பின் முதுகு வலி உள்ள இடத்தில் வைத்து நன்றாக ஓத்தடம் கொடுத்தால் முதுகு வலி குணமாகும்.

வைத்தியம்: 3

முதுகு வலி உள்ளவர்கள் அடிக்கடி கொள்ளு ரசம் செய்து அருந்தலாம், இதனால் முதுகு வலி குணமாகும்.

அதேபோல் தினமும் உறங்குவதற்கு முன் ஒரு கிளாஸ் பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், நாட்டு சர்க்கரை மற்றும் சிறிதளவு ஏலக்காய் பொடி ஆகியவற்றை சேர்த்து நன்றாக காய்ச்சி பின் பருகிவரலாம். இதனால் முதுகு வலி நீங்கும்.

வைத்தியம்: 4

முதுகு வலி குணமாக பாத்திரத்தில் இரண்டு கிளாஸ் தண்ணீர் ஊற்றவும் பின் இரண்டு ஸ்பூன் பொரித்த சீரகத்தை இந்த நீரில் சேர்த்து நன்றாக காய்ச்ச வேண்டும்.

பின் இந்த நீரை வெது வெதுப்பான சூட்டில் ஆறவைத்து பின் ஒரு காட்டன் துணியில் நனைத்து முதுகு வலி உள்ள இடத்தில் வைத்து ஓத்தடம் கொடுங்கள். இவ்வாறு இரண்டு முறை செய்துவர முதுகு வலி குணமாகும்.

முழங்கால் மூட்டு வலி நீங்க பாட்டி வைத்தியம்..!

வைத்தியம்: 5

அதேபோல் ஒரு பெரிய அண்டாவில் வெது வெதுப்பான நீரை ஊற்றி நிரப்ப வேண்டும், பின் அந்த அண்டாவில் தாங்கள் சிறிது நேரம் அமர்ந்திருக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர முதுகு வலி குணமாகும்.

 

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆரோக்கியமும் நல்வாழ்வும்