டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் | Dengue Symptoms in Tamil

Dengue Symptoms in Tamil

டெங்கு அறிகுறிகள் | Dengue Fever Symptoms in Tamil

Dengue Symptoms in Tamil:- டெங்கு என்பது கொசுக்களால் பரவும் ஒரு வைரஸ் நோயாகும். இது சமீபத்திய ஆண்டுகளில் உலகின் பல்வேறு பகுதிகளில் வேகமாக பரவி வருகிறது. டெங்கு வைரஸ் குறிப்பாக ஏடிஸ் அல்போபிக்டஸ் என்ற கொசுக்கள் மூலமே பரவி வருகிறது. ஏடிஸ் இனத்தின் பெண் கொசுக்களால் இந்த டெங்கு வைரஸ் பரவுகிறது.

சரி  இந்த பதிவில் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளை பற்றி படித்தறியலாம் வாங்க.

வைரஸ் காய்ச்சல் வராமல் இருக்க இதை சாப்பிடுங்க..!

டெங்கு காய்ச்சல் அறிகுறிகள்

டெங்கு வைரஸ் தொற்று சிலருக்கு அறிகுறிகள் இல்லாத பாதிப்புகளை ஏற்படுத்துகிறது, அதே நேரத்தில் சிலர் கடுமையான காய்ச்சல் போன்ற அறிகுறிகளால் பாதிக்கப்படுகின்றனர்.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

அதாவது டெங்கு காய்ச்சல் ஏற்பட்ட ஒருவருக்கு முதல் மூன்று நாள்களுக்குக் கடுமையான காய்ச்சல் இருக்கும்.

உடலின் வெப்பநிலை 101 டிகிரிக்கு மேல் இருக்கும். தொடர்ச்சியான தலைவலி, உடல் சோர்வு, வாந்தி, கண்களை நகத்தும்போது வலி, கீழ் முதுகில் வலி, கால்கள் மூட்டுகளில் கடுமையான வலி அதிகமாக காய்ச்சலினால் கண்கள் சிவக்கும், முகத்தில் தடிப்புகள் ஏற்படுவது, காய்ச்சல் குணமடைந்து போல அதிக வியர்வை, மீண்டும் காய்ச்சல், உடலில் தடிப்பு போன்ற அறிகுறிகள் டெங்கு காய்ச்சல் இருப்பதற்கான அறிகுறியாகும்.

டெங்கு காய்ச்சலினால் ஆபத்தான அறிகுறிகள்:

இந்த முதல் மூன்று நாள்களை மருத்துவரிகள்  ஃபெப்ரைல் பேஸ் (febrile phase) என்பார்கள். இதற்கடுத்த மூன்று நாள்களை கிரிட்டிகல் பேஸ் (critical phase) என்பார்கள். இந்த கிரிட்டிகல் பேஸ் நிலையில் உடலின் காய்ச்சல் முழுவதும் குறைந்து கைகால், பாதம் எல்லாம் ஜில்லென்று இருக்கும். இந்த நிலையில்தான் உடலின் ரத்தத்தில் உள்ள ரத்த தட்டுகள் (Platelets) குறையத் தொடங்கும். டெங்கு காய்ச்சலினால் மிகவும் ஆபத்தான அறிகுறிகள் என்னவென்று கீழ் காண்போம்.

இரத்த தட்டணுக்கள் எண்ணிக்கை அதிவேகமாக குறைவது, ரத்தக்கசிவு, குறைந்த ரத்த அழுத்தம் போன்ற அறிகுறிகள் இருந்தால் அதனை டெங்கு காய்ச்சலின் மிக ஆபத்தான அறிகுறி என்று மருத்துவர்கள் குறிக்கின்றன.

நிமோனியா காய்ச்சல்

டெங்கு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

காய்ச்சலோ, டெங்குவிற்கான அறிகுறிகளோ தென்பட்டால் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகி அவரின் பரிந்துரையின் அடிப்படையில் சிகிச்சை எடுத்துக்கொள்வது சிறந்தது.

டெங்கு காய்ச்சலின் முதல் நிலையிலேயே நீங்கள் மருத்துவரிடம் சென்று அதற்கான சிகிச்சை முறையை மேற்கொண்டால் அதிலிருந்து நீங்கள் எளிதாக குணமடைந்துவிடலாம். ஆனால், டெங்குவின் இரண்டாம் நிலையில் மருத்துவமனைக்குச் சென்றாலோ, சிகிச்சை எடுத்துக்கொள்ளத் தவறினாலோ அவர்களைப் பிழைக்க வைப்பதற்கான வாய்ப்புகள் குறைந்துகொண்டே போகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆரோக்கியமும் நல்வாழ்வும்