இரத்தம் அதிகரிக்க | Blood Increase Foods Tamil.!

Advertisement

உடலில் இரத்தம் ஊற | Hemoglobin Rich Foods in Tamil 

Blood Increase Food in Tamil: நண்பர்கள் அனைவருக்கும் பொதுநலம்.காம்-ன் அன்பான வணக்கம்..! இன்றைய பதிவில் உடலில் இரத்தம் அதிகரிக்க என்னென்ன உணவு வகைகள் எடுத்துக்கொள்ளலாம் என்பதை பற்றி பார்க்கலாம். பொதுவாகவே இன்று எல்லாருக்கும் இரத்தம் சம்பந்த பிரச்னைகள் அதிகரித்து கொண்டே போகிறது. நம் உடலில் இரத்தம் குறைவாக இருப்பதற்கு முக்கிய காரணம் நாம் போதுமான இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளாததே.

நாம் தினமும் எடுத்துக்கொள்கின்ற உணவுகளில் அதிகமாக இரும்புச்சத்து இருந்தால் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கக்கூடும். இப்போது உடலில் இரத்தம் அதிகரிப்பதற்கு என்னென்ன வகையான உணவுகளை (hemoglobin increase food) நாம் எடுத்துக்கொள்ளலாம் என்பதை பற்றி ஒவ்வொன்றாக படித்தறியலாம். 

இரத்த சோகை உள்ளவர்கள் இதையும் படிக்கவும்👉👉👉  இரத்த சோகை குணமாக உடனடி தீர்வு

உலர்ந்த திராட்சை:

இரத்தம் அதிகரிக்க

  • hemoglobin increasing food list in tamil: திராட்சையில் இரண்டு வகை உள்ளன. ஒன்று பச்சை திராட்சை மற்றொன்று கருப்பு திராட்சை என்று உள்ளது. உலர்ந்த திராட்சையானது இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள், பக்கவாதம், நரம்பு தளர்ச்சி போன்ற நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கும்.
  • 100 கிராம் உலர்ந்த திராட்சையில் 23% இரும்புச்சத்து அதிகமாக நிறைந்துள்ளது. நம் உடலில் இரத்தம் அதிகரிக்க 100 கிராம் உலர்ந்த திராட்சை-யை சாப்பிட்டு வர இரண்டு மில்லிகிராம் அளவிற்கு இரும்புச்சத்து கிடைக்கும்.

கீரை வகைகள்:இரத்தம் அதிகரிக்க

  • நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் போதுமான அளவிற்கு ஊட்டசத்துக்கள் இருக்க வேண்டும் என்றால் கீரை வகைகளை கட்டாயமாக நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும். உடற்பகுதியில் இரத்த ஓட்டம் அதிகரித்து காணப்பட வாரத்தில் மூன்று அல்லது நான்கு முறை இரும்புச்சத்து நிறைந்த முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
  • உடலில் புதிய இரத்தம் உருவாகி உடல் பலத்துடன் இருப்பதற்கு பொன்னாங்கண்ணி கீரை பொரியல் செய்து பகல் உணவுடன் தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வரலாம்.
  • மேலும் புதினா கீரை மற்றும் அரைக்கீரையுடன் பருப்பு சேர்த்து சாப்பிட்டு வர உடலில் புதிதாக இரத்தம் உருவாகும்.

இரும்புச்சத்து மிகுந்த பேரீச்சை:

இரத்தம் அதிகரிக்க

  • hemoglobin rich foods in tamil: பேரீச்சையில் அதிகமாக இரும்புச்சத்து இருப்பதால் நாம் தினமும் சாப்பிடலாம். இதனால் நம் உடலிற்கு அதிகமாக நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
  • பேரீச்சம் பழத்தில் வைட்டமின் மற்றும் மினரல் சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளதால் நரம்பு தளர்ச்சி என்ற நோயை நம்மிடம் வர விடாமல் பாதுகாக்கும்.
  • 100 கிராம் பேரீச்சையில் 277 கலோரிகள் உள்ளன. இரும்புச்சத்தானது 0.90 மில்லிகிராம் அளவிற்கு உள்ளன. உடலில் இரத்த குறைபாடு உள்ளவர்கள் தினமும் பேரீச்சை எடுத்துக்கொள்ளலாம்.

ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க பீட்ரூட்:

இரத்தம் அதிகரிக்க

  • பீட்ரூட்டில் அதிகமாக இரும்புச்சத்து, போலிக் அமிலம், நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. பீட்ரூட்டில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் உடலில் இருக்கும் சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்கிறது.
  • டிப்ஸ்: இரவு படுக்கைக்கு முன் ஒரு பீட்ரூட்டினை இரண்டாக வெட்டி அதனை தண்ணீரில் போட்டு வைக்கவும். காலையில் அந்த நீரினை குடித்து வர உடலில் உள்ள இரத்த அளவு அதிகரிக்கும். 

மாதுளம் பழம்:

இரத்தம் அதிகரிக்க

  • அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய பழ வகைகளில் ஒன்றுதான் இந்த மாதுளை. மாதுளம் பழ சாற்றினில் தேன் கலந்து தினமும் காலை உணவிற்கு பின் சாப்பிட்டு வர உடல் நல்ல ஆரோக்கியமாக இருக்கும்.
  • மன அழுத்தம் அதிகம் உள்ளவர்கள் இந்த மாதுளம் பழத்தினை தினமும் சாப்பிட்டு வந்தால் மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம்.
  • மாதுளை பழத்தில் அதிகமாக இரும்புச்சத்து இருப்பதால் பாலியல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் சிறந்த மருந்து.
  • 100 கிராம் மாதுளை பழத்தில் 0.30 மி.கி அளவிற்கு இரும்புச்சத்து இருக்கிறது. இரும்புச்சத்து அதிகம் கொண்ட மாதுளையை நாம் தவறாது எடுத்துக்கொண்டால் உடலில் இரத்தம் அதிகரிக்கும்.

வேர்க்கடலை எண்ணெய்:

இரத்தம் அதிகரிக்க

  • hemoglobin rich foods in tamil: வேர்க்கடலை எண்ணெயானது சைவ உணவு வகைகளில் அதிக சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்துள்ளதாக இருக்கிறது. 100 கிராம் வேர்க்கடலை எண்ணெயில் 25% புரதம் மற்றும் இரும்புச்சத்துக்கள் அடங்கியுள்ளது.
  • உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிப்பதற்கு இந்த வேர்க்கடலை எண்ணெயை நம் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
  • பெண்களின் ஹார்மோன் வளர்ச்சி சீராக இருப்பதற்கு உணவிற்கு பிறகு இதனை சாப்பிட்டு வரலாம்.

தர்பூசணி:

இரத்தம் அதிகரிக்க

  • தர்பூசணிக்காய் கோடை காலத்திற்கு ஏற்ற பழ வகைகளில் ஒன்று. இந்த பழத்தினை சாப்பிடுவதால் நம் உடலில் இருக்கும் வெப்பம் தணிந்து, இரத்த அழுத்தத்தையும் சீராக வைத்திருக்கும்.
  • தர்பூசணியில் வைட்டமின் ஏ, தாது சத்துக்கள், நார்ச்சத்து போன்றவை அதிகமாக அடங்கியுள்ளது.
  • 100 கிராம் தர்பூசணியில் 90% தண்ணீர் சத்தும், 7% கார்போஹைட்ரேட்டும், 0.24 மி.கி இரும்புச்சத்தும் அடங்கியுள்ளது. உடலில் இரத்தம் ஊறுவதற்கு தவறாமல் தர்பூசணி பழத்தினை சாப்பிட்டு வரலாம்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in Tamil
Advertisement