நாட்கள் தள்ளிப்போய் மாதவிடாய் வருகிறதா? அப்போ இந்த தப்ப செய்யாதிங்க..!
புதிதாக திருமணம் ஆனவர்கள் ஒவ்வொரு மாதமும் எதிர்பார்க்கும் விஷயம் தான் கருத்தரிப்பு. அதுகுறித்த பதிவை தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம், அதாவது திருமணம் ஆனவர்கள் குழந்தைக்கு முயற்சி செய்யும் பொழுது சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டும், சில விஷயங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதிலுள்ள மாதவிடாய்க்கு பிறகு கருத்தரிக்க சரியான நாட்களில் உறவுகொண்டு. அதற்கான விஷயங்களையும் கடைப்பிடித்தும் சிலருக்கு மாதவிடாய் தள்ளிபோகிறுக்கும், அதனை நினைத்து அனைவருமே மகிழ்ச்சியாக இருப்பார்கள். இருந்தாலும் அதிக நாட்கள் தள்ளிப்போய் மாதவிடாய் வந்துவிடும். அப்படிப்பட்டவர்களின் நீங்களும் ஒருவர் என்றால் உங்களுக்கான பதிவு தான் இருந்து. நாட்கள் தள்ளிப்போய் மாதவிடாய் வந்துவிடும், இதற்கு என்ன காரணம் என்பதை பற்றியும். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றியும் நாம் இப்பொழுது படித்தறியலாம் வாங்க.
புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன் – Progesterone Hormone:
சரியான கருத்தரிப்பு நாட்களில் உறவு கொண்டு, பிறகு அதிக நாட்கள் தள்ளி சென்று சிலருக்கு மாதவிடாய் வந்துவிடும். இதற்கு என்ன காரணம் அப்படின்னாProgesterone Hormone தான் முக்கிய காரணம் என்று சொல்லலாம்.
இந்த Progesterone Hormone எதற்கு பயன்படுகிறது என்றால்.. கருமுட்டைகளை நன்கு வலுவாக அதாவது ஸ்டெந்தாக பாதுகாக்க பயன்படுகிறது. ஆக இந்த Progesterone Hormone உங்களுக்கு குறைவாக இருந்தாலும் கூட கருத்தரிப்பு தள்ளிப்போகலாம். ஆக ஒருவருக்கு Progesterone Hormone அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.
How to Increase Progesterone to Get Pregnant in Tamil
Progesterone Hormone Level எவ்வளவு இருந்தால் சீக்கிரம் கருப்பம் உண்டாகும்?
பொதுவாக இந்த Progesterone Hormone Level ஒவ்வொரு ஸ்டேஜில் ஒவ்வொரு விதமான அளவில் இருக்கும். அதாவது உங்களது ஓவுலேஷன் (Ovulation) ஆரம்பமாவதற்கு முன் Progesterone Hormone Level 0.89 தான் இருக்கும்.
அதுவே உங்களுக்கு ஓவுலேஷன் ஆரம்பமாகிவிட்டது என்றால் உங்களது Progesterone Hormone அளவானது 12 வரைக்கும் இருக்கும்.
தங்களுக்கு ஓவுலேஷன் முடிந்துவிட்டது என்றால் அப்போது 1.8 இருந்து 24 வரைக்கும் இருக்கும்.
கர்ப்பமாகிவிட்டால் உங்களுக்கு முதல் மூன்று மாதங்கள் வரை 11 முதல் 44 வரை Progesterone Hormone Level இருக்கும். அதன் பிறகு 4-வது மாதம் முதல் 6-வது மாதம் வரை 25 முதல் 83 வரை ஹார்மோன் அளவு இருக்கும். அதன் பிறகு 7-வது மாதம் முதல் பிரசம்வம் ஆகும் வரை உங்களுக்கு 58 முதல 214 வரை இருக்கும்.
இது தான் கருத்தரிக்க விரும்பும் பெண்களுக்கு எந்தெந்த மாதங்களுக்கு எவ்வளவு புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன் இருக்க வேண்டும் என்பதற்கான அளவு ஆகும்.
புரோஜெஸ்ட்டிரோன் பயன்கள்:
பெண்களுக்கு புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன் சரியான அளவில் இருந்தால் மாட்டும் தான் கரு கருப்பைக்கு செல்லும். இதுமட்டும் அல்லாமல் கருப்பையில் கருமுட்டைகளை பதிவைப்பதற்கும் இந்த புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன் உதவியாக இருக்கிறது.
இதுபோக நஞ்சிக்கொடி உருவாவதற்கும் இந்த ஹார்மோன்தான் உதவி செய்கிறது. குறிப்பாக கரு கலையாமல் பாதுகாப்பதற்கும் இந்த ஹார்மோன் பெரும் உதவி செய்கிறது. ஆக உங்களுக்கு புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன் அளவு சரியான அளவில் இருக்கிறதா என்பதையும் கண்டிப்பாக மருத்துவரிடம் சென்று சரி பார்த்துக்கொள்ளுங்கள்.
யாரெல்லாம் இந்த ஹார்மோன் அளவை பரிசோதனை செய்ய வேண்டும்?
நாள் தள்ளிப்போய், அனைத்து விஷயங்களையும் சரியாக செய்து மாதவிடாய் வருகிறது என்றால் நீங்கள் கண்டிப்பாக மருத்துவரிடம் சென்று இந்த ஹார்மோன் அளவை சரிபார்க்கலாம்.
ஏன் இந்த பிரச்சனை வருகிறது?
- உடல் எடை அதிகமாக இருந்தால் இந்த பிரச்சனை ஏற்படலாம்.
- ஹார்மோன் குறைவாக உங்களுக்கு சுரக்கலாம்.
- இரண்டு மூன்று முறை கர்ப்பம் தரித்து உங்களுக்கு கருச்சிதைவு ஏற்பட்டிருக்கலாம்.
இது போன்ற காரணங்களினால் தான் Progesterone Hormone Level குறைவாக இருந்திருக்கும்.
புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன் குறைவாக இருப்பதற்கான அறிகுறிகள்:
- ஒற்றைத் தலைவலி அதிகமாக இருக்கும்.
- தூக்கமின்மை.
- மன அழுத்தம் அதிகமாக இருக்கும்.
- மிகவும் சோர்வாக இருப்பீர்கள்.
- உங்கள் மார்பகம் மிகவும் மென்மையாக இருக்கும்.
- மலச்சிக்கல் பிரச்சனை இருக்கும்.
இவற்றில் ஏதேனும் அறிகுறிகள் உங்களுக்கு தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கிறது என்றால் நீங்கள் கண்டிப்பாக மருத்துவரை அணுக்க வேண்டும்.
புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?
முதலில் நீங்க மருத்துவரை தான் அணுக வேண்டும். அவர்கள் கூறும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அதனை நீங்கள் தொடர்ந்து செய்து வந்தாலே போதும் உங்களுக்கு இந்த புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன் அதிகரிக்க ஆரம்பித்துவிடும்.
புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன் அதிகரிக்க யோகா:
நீங்கள் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன்களை அதிகரிக்க கண்டிப்பாக உங்கள் உடல் எடையை சரியான அளவில் வைத்துக்கொள்ள வேண்டும். இதற்கு தினமும் நீங்கள் எளிதான யோகாசனம் குறைந்து 30 நிமிடங்கள் வரை செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதினால் உடல் எடை மெய்ட்டேன் ஆகும்.
புரோஜெஸ்ட்டிரோன் உணவுகள்:
ஜிங் உணவுகள்:
உடலில் இந்த புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன் அதிகரிக்க ஜிங் சத்து மிகவும் அவசியம். இது இனப்பெருக்க சுழற்சிக்கு முக்கிய பங்கு வகுக்கிறது. ஆக ஜிங் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ளவும். ஜிங் சத்து சுண்டல், பூசனை விதை, சிகப்பு இறைச்சி சிக்கன், மட்டன், போன்றவற்றில் இருக்கிறது.
ஒமேகா 3 கொழுப்பு அமிலம்:
புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன் அதிகரிக்க ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த கொழுப்பு அமிலம் முட்டை, பால், ஆளிவிதை, சல்மட், மத்தி, கானாங்கெளுத்தி போன்ற உணவுகளில் அதிகளவு இருக்கிறது.
வைட்டமின்:
அதேபோல் வைட்டமின் B6, C, E போன்ற சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் உடலில் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன் அதிகளவு அதிகரிக்கும். இந்த சத்துக்கள் முட்டை, சோயாபீன்ஸ், ஓட்ஸ், பழுப்பு அரிசி, ப்ராக்கோலி, உருளைக்கிழங்கு, கோதுமை, சோயா எண்ணெய் போன்றவற்றில் எல்லாம் அதிகளவு நிறைந்துள்ளது. (கருத்தரிக்க விரும்புபவர்கள் மட்டும் வைட்டமின் c உணவுகளை மட்டும் குறைவாக எடுத்துக்கொள்ளலாம்)
நார்ச்சத்து உணவு:
மேலும் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக வேர்க்கடலை, கொய்யா, வாழை (செவ்வாழை சாப்பிடுவது சிறந்தது), ஆனஞ்சு, சாத்துக்குடி இதுபோன்ற உணவுகளில் அதிகளவு உள்ளது.
இங்கு கூறப்பட்டுள்ள தகவல் கருத்தரிக்க விரும்பு பெண்கள் மற்றும் மாதவிடாய் பிரச்சனை உள்ள பெண்கள் இருவருமே பாலோ பண்ணலாம்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Natural health tips in tamil |