கோரோசனை பயன்கள் | Korosanai Benefits in Tamil

Korosanai Benefits in Tamil

கோரோசனை பயன்படுத்தும் முறை | Korosanai Uses

Korosanai Benefits in Tamil: வணக்கம் நண்பர்களே..! இன்றைய பொதுநலம்.காம்-ல் கோரோசனை பயன்களை பற்றி படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..! கோரோசனை சித்த மருத்துவத்திலும் சரி, மாந்திரீகத்திலும் சரி அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சளி, இருமல், காய்ச்சல் போன்றவை வருவது இயல்பு. அவற்றை முற்றிலும் குணப்படுத்தும் ஆற்றல் கோரோசனைக்கு உள்ளது. கோரோசனை பயன்படுத்துவதால் என்னென்ன நோயினை சரிபடுத்தலாம், கோரோசனையை எந்தெந்த நோய்க்கு எப்படி கொடுத்தால் குணமாகும் என்பதை பற்றி தெளிவாக படித்து தெரிந்துக்கொள்ளலாம். 

உடலில் ஆற்றலை பெருக்கும் சுண்டைக்காய் மருத்துவ பயன்கள்..!

இருமல் குணமாக:

Korosanai Benefits in Tamil

இருமல் தொடர்ச்சியாக உள்ளவர்கள் வெற்றிலை சாறுடன் அல்லது கோரோசனையுடன் தேன் சேர்த்து கலந்து குடித்து வந்தால் விடாத இருமல் குணமாகும். 

சீதளம் நோய் சரியாக:

Korosanai Benefits in Tamil

சீதளம் குணமாக 12 துளி தும்பை பூ சாறுடன் தேன் சேர்த்து கொடுக்கலாம். தேன் மட்டுமல்லாமல் கோரோசனை சேர்த்து கொடுத்து வந்தால் சீதளம் நோய் விரைவில் குணமாகும். 

விந்துக்கட்டு மூலிகை:

Korosanai Benefits in Tamil

ஆன்மார்களுக்கு உண்டாகும் விந்து, துரித ஸ்கலிதம் நீங்குவதற்கு 1 கிராம் அளவிற்கு கோரோசனத்துடன் சிறிதளவு பச்சை கற்பூரம் கலந்து கல்வத்தில் மை போன்று அரைத்து நன்றாக பூசிவர உறவு கொள்ள தம்பனம் ஆகும். 

குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, மாந்தம், இருமல் நீங்க:

Korosanai Benefits in Tamil

குழந்தைக்கு ஏற்படக்கூடிய சளி, மாந்தம் இருமல் குணமாகுவதற்கு கோரோசனை, சஞ்சீவி இவற்றில் ஏதேனும் ஒன்றை நன்றாக மசித்து தேன் சேர்த்து கொடுத்து வர சளி, மாந்தம், இருமல் போன்றவை குணமாகிவிடும். 

கீழாநெல்லி மருத்துவ பயன்கள்

கபம், மாந்தத்தினை குணப்படுத்தும் கோரோசனை:

 Korosanai Benefits in Tamil

சிறிய குழந்தைக்கு உண்டாகும் கபம், மாந்தம் சரியாக ஆமணக்கு எண்ணெய் 1/2 லிட்டர், இளங்கொழுந்து சாறு 1 லிட்டர், கருஞ்சீரகத்தூள் 15 கிராம் அளவு, கோரோசனை போன்றவையை எடுத்துக்கொள்ளவும். 

இவற்றில் கோரோசனையை தவிர்த்து மற்ற அனைத்தையும் தைலம் பக்குவத்திற்கு நன்றாக காய்ச்சி வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். கடைசியாக கோரோசனையை பொடி செய்து செய்து வைத்துள்ள தைலத்தில் சேர்த்து கலக்கி கொள்ளவும். அடுத்து இவற்றை தாய்ப்பாலுடன் 8 மிலி அளவிற்கு சேர்த்து குழந்தைக்கு கொடுக்க வேண்டும். 

ஆஸ்துமா நோயிலிருந்து விடுபட:

 Korosanai Benefits in Tamil

ஆஸ்துமா நோய் உள்ளவர்களால் மூச்சு விடுவதற்கு மிகவும் சிரமப்படுவார்கள். அவர்கள் கோரோசனா, இலவங்கம், குங்குமப்பூ 10 கிராம், வெள்ளெருக்கன் பூ 100 கிராம், மிளகு 50 கிராம் அனைத்தையும் நன்றாக சேர்த்து அரைத்து மிளகு அளவிற்கு மாத்திரையாக செய்து காய வைத்து கொள்ளவும். 

ஆஸ்துமா, காசநோய், மூச்சு இரைப்பு உள்ளவர்கள் காலை மற்றும் மாலை நேரத்தில் காய வைத்துள்ள ஒரு மாத்திரையை தேனில் கலந்து சாப்பிட்டு வர நாளடைவில் ஆஸ்துமாய் பிரச்சனை சரியாகும். 

அடிபட்ட காயம் சரியாக:

 Korosanai Benefits in Tamil

சிலருக்கு கீழே விழுந்து காயம் ஏற்பட்ட இடமானது ஆறாமலே அவதிக்கு உள்ளாவார்கள். அடிபட்ட காயமானது குணமாக கோரோசனை, ஓரிதழ்த்தாமரை, பச்சை கற்பூரம் அனைத்தையும் கலந்து பசை போன்று செய்து சிறிதளவு நெய்யுடன் கலந்து அடிபட்டுள்ள காயத்தில் தடவி வர புண்ணானது விரைவில் சரியாகும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Health Tips in Tamil