நரம்பு தளர்ச்சி குணமாக சித்த மருத்துவம்..!

நரம்பு தளர்ச்சி குணமாக

நரம்பு தளர்ச்சி குணமாக சித்த மருத்துவம்..!

ஊட்டச்சத்து குறைவான உணவுகளை சாப்பிடுவது அல்லது அதிகமாக சாப்பிடுவது இவை இரண்டும் நரம்புகளுக்கு நல்லதல்ல. ஊட்டச்சத்து உணவுகளில் உடலுக்கு சரியான அளவு கிடைக்கவில்லை என்றால் பெர்னீஷியஸ் அனிமியா எனும் ரத்தைத்தையும், நரம்பையும் நிச்சயம் பாதிக்கும் நோய் ஏற்படும்.

அதேபோல் இந்த நரம்பு தளர்ச்சி நோய் வைட்டமின் பி12 குறைப்பட்டால் ஏற்படக்கூடிய நோய். எனவே நரம்புகளில் வலுவைக் குறைய வைத்து, ஆரம்பத்தில் பாதங்கள், கை, கால்களில் எரிச்சலை ஏற்படுத்தும். பின்பு பல்வேறு விளைவுகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும்.

முழங்கால் மூட்டு வலி நீங்க பாட்டி வைத்தியம்..!

 

சரி இந்த நரம்பு தளர்ச்சி பிரச்சனையை சரி செய்ய கீழ் கொடுக்கப்பட்டுள்ள உணவு முறைகளை தினமும் கடைபிடித்தாலே போதும் இந்த நரம்பு தளர்ச்சி பிரச்சனையை சரி செய்துவிட முடியும். சரி வாங்க அவற்றை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.

நரம்பு தளர்ச்சி குணமாக சித்த மருத்துவம்..!

நரம்பு தளர்ச்சி குணமாக வைட்டமின் பி 12:

கோழியின் ஈரல் உள்ளிட்ட அசைவ உணவுகளில்தான் வைட்டமின் பி 12 அதிகம் இருக்கிறது. பால், முட்டையில் குறைவாக இருக்கிறது. பிற காய்கறிகளில் பி 12 இல்லை. இதனால்தான், தீவிர மரக்கறியாளருக்கு (வெஜிட்டேரியன்) பெர்னீஷியஸ் அனீமியா நோய் வர வாய்ப்பு அதிகம். அதற்கான அறிகுறிகள், கை, கால் எரிச்சல். இந்தப் பிரச்னையைத் தவிர்க்க, இவர்கள் பால் பொருட்களை அதிக அளவில் எடுத்துக்கொள்ளலாம்.

நரம்பு தளர்ச்சி குணமாக பழங்கள்:

நரம்பு மண்டலம் வலுப்பெற்றிருக்க பழங்கள் அதிகளவு சாப்பிட வேண்டியது மிகவும் அவசியம். தற்போது உலகமெங்கும் அதிகமாகிவரும் முதுமையில் வரக்கூடிய ‘அல்சீமர் நோய்’ எனும் மறதி, வலுக்குறைவு, தடுமாற்றம் நமக்கு வராமல் இருக்க வேண்டுமா? 40 வயதில் இருந்து தினமும் ஒரு முறை ஏதேனும் பழங்களை அவசியம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

கால் விரல் நகம் சொத்தை காரணம் மற்றும் குணப்படுத்தும் முறை !!!…

நரம்பு தளர்ச்சி குணமாக கீரை வகைகள்:

உடல் ஆரோக்கியத்தை காக்க தினமும் அதிகளவு பொன்னாங்கன்னிக்கீரை, மணத்தக்காளிக்கீரையை பகல் உணவில் சேர்த்துக்கொள்வது நரம்புகளுக்கு மிகவும் நல்லது.

நரம்பு தளர்ச்சி குணமாக ஜாதிக்காய் தூள்:

இரவில் ஒரு சிட்டிகை சாதிக்காய் தூள் சாப்பிடுவது நரம்பு வலுப்பெற உதவும்.

நரம்பு தளர்ச்சி குணமாக லவங்கப்பட்டை

தேநீரில் லவங்கப்பட்டை போட்டுக் குடிப்பது, நரம்புகளுக்கு நலம் தரும்.

நரம்பு தளர்ச்சி குணமடைய உணவுகள்

நரம்பு பாதுகாப்புக்கு, எல்லா உணவிலும் மஞ்சள் தூள், வெந்தயத்தை மறக்காமல் சிறிதளவாவது சேர்க்க வேண்டும்.

வயோதிகத்தில் நரம்பு வலுப்பெற அமுக்கிராங்கிழங்குப் பொடியை 1/2 தேக்கரண்டி அளவு பாலில் கலந்து இரவில் 45 நாட்கள் சாப்பிடவும்.

நரம்பு தளர்ச்சி குணமடைய உணவுகள்

ஓரிதழ் தாமரைப் பொடி, பூனைக்காலிப் பொடி நரம்பை வலுப்படுத்தும் மூலிகை உணவுகள். மருத்துவர் ஆலோசனையுடன் சாப்பிடுவது பார்கின்சன் நோய் உள்ளிட்ட பல நரம்பு நோய்களை ஆரம்ப நிலையிலேயே களைந்து விடும்.

குதிகால் வெடிப்பு நீங்க சில இயற்கை வைத்தியம்..!
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்