மருத்துவ குணம் நிறைந்த பனை நுங்கு..! Palm Fruit In Tamil..!
நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பொதுநலம்.காம் பதிவில் கோடை காலத்தில் மிக எளிமையாக கிடைக்க கூடிய பனை மரத்தில் விளையும் நுங்கின் மருத்துவ குணங்களை(palm fruit health benefits) பற்றி இன்று படித்து தெரிந்து கொள்ளுவோம். இந்த நுங்கில் அதிகமான நீர்ச்சத்து இருக்கிறது. சிலருக்கு இந்த நுங்கின் பயன்கள் பற்றி தெரியாமல் இருக்கும். அதனை முழுமையாக தெரிந்து கொள்ள இந்த பொதுநலம் பதிவில் கூறியுள்ள நுங்கில் நிறைந்து இருக்கும் மருத்துவ குணத்தை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
![]() |
உடலில் ஏற்படும் சூட்டை தணிக்கும் நுங்கு:
கோடை காலம் வந்தாலே பெரும்பாலானோருக்கு உடல் சூடாக தென்படும். உடல் சூடு பிரச்சனை வரும்போது செரிமானம் இல்லாமல் இருக்கும்.
அதோடு சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் பிரச்சனை, அதிகமாக வியர்வை வருவது, அதுமட்டும் இல்லாமல் உடல் எப்போதும் சோர்வாக இருப்பது இது போன்ற பல பிரச்சனையை சந்தித்து வருபவர்கள் நிச்சயமாக இந்த நுங்கினை சாப்பிட்டு வரவேண்டும்.
தவறாமல் நுங்கினை சாப்பிட்டு வந்தால் உடலில் இருக்கும் வெப்ப தன்மை குறைந்து உடல் நல்ல ஆரோக்கியமாக இருக்கும்.
உடலில் உள்ள எடையை குறைக்கும் நுங்கு:
சிலருக்கு உடல் எடை கூடிக்கொண்டே போவதனால் வருத்தம் அடைவார்கள். உடலை ஸ்லிம்மாக வைத்திருக்கும் சக்தியை கொண்டது இந்த நுங்கு.
பனை நுங்கில் இருக்கும் அதிகமான நீர்ச்சத்து வயிற்றை நிரப்பி பசி போன்ற உணர்வை போக்கும்.
உடல் எடையை குறைக்க சில பேர்கள் டயட்டில் இருப்பார்கள். அவர்களெல்லாம் இந்த நுங்கினை எடுத்து கொண்டால் நல்லது.
![]() |
புற்றுநோயில் இருந்து விடுபட வைக்கும் நுங்கு:
நுங்கில் ஆன்தோசயனின் என்ற பயட்டோகெமிக்கல் அதிகமாக நிறைந்திருக்கிறது. இந்த ஆன்தோசயன் உடலில் ஏற்படும் புற்றுநோய் பிரச்சனை உருவாகுறதை தடுக்கும் வல்லமை வாய்ந்தது.
குறிப்பாக மார்பகத்தில் உண்டாகும் புற்றுநோய் கட்டிகளின் செல்களை அழிக்கும்.
புற்றுநோய் பிரச்சனையை சரி செய்ய இந்த நுங்கினை தவறாமல் சாப்பிட்டு வந்தால் உடனடியாக புற்றுநோய் நீங்கும்.
அல்சர் பிரச்சனையை குணப்படுத்தும் நுங்கு:
இப்போது உள்ள காலத்தில் அல்சர் பிரச்சனை இல்லாதவர்களே இல்லை. கோடை காலத்தின் போது அதிக காரமான உணவுகளை எடுத்துக்கொள்ளும் போதும், வயிற்றில் இருக்கும் அமிலம் சீரற்று இருப்பதனால் கூட இந்த அல்சர்(வயிற்று புண்) பிரச்சனை வருகிறது.
அல்சர் பிரச்சனை உடனடியாக நீங்க நுங்குடன் தேங்காய் பால் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கண்டிப்பாக அல்சர் பிரச்சனை குணமடையும்.
சின்னம்மையை தடுக்கும் நுங்கு:
வெயில் காலத்தில் அதிகமாக இந்த சின்னம்மை(chickenpox) என்ற நோய் வருகிறது. அதோடு உடல் அதிக வெப்பநிலை காரணமாக கூட இந்த பிரச்சனையை சந்திக்க கூடும்.
அதோடு உடலில் வரும் வியர்க்குரு, சிறிய கட்டிகள், சருமத்தில் ஏற்படும் கொப்பளம், என்று பல விதமான பிரச்சனைகள் வருவது இயல்பு தான்.
இது போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்க நுங்கு சாப்பிடுவது மிகவும் அவசியம். சாப்பிடுவது மட்டும் அல்லாமல் சருமத்தில் ஏற்படும் கட்டி, கொப்பளம் போன்ற நோய்களுக்கு நுங்குவை சருமத்தில் தேய்த்து வரலாம். உடல் குளிர்ச்சியாக இருக்கும்.
குறிப்பு:
பனை நுங்கில் இருக்கும் சத்துக்கள் வைட்டமின் ஏ, பி, சி போன்ற சத்துகள் உள்ளது.
அதோடு இரும்பு சத்து, கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், மெக்னீசியம், துத்தநாகம், பொட்டாசியம், அஸ்கார்பிக் என்ற அமில தன்மையும் அடங்கியுள்ளது.
![]() |
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |