உடல் எடை அதிகரிக்க உதவும் புரோட்டீன் உணவுகள் (protein foods list tamil)..!

Advertisement

 புரோட்டீன் உணவுகள் பட்டியல் – protein foods list tamil

உடல் எடையை அதிகரிக்க உதவுவது புரத சத்துக்களே. இந்த புரோட்டீன்கள் தான் உடலில் புதிய திசுக்களை கட்டமைக்கவும், அழிந்த திசுக்களுக்கு பதிலாக புதிய திசுக்களை உருவாக்கவும் உதவுகிறது. குறிப்பாக ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஒரு நாளைக்கு ஒரு கிலோ கிராம் எடைக்கும் ஒரு கிராம் விகிதத்தில் புரோட்டீன்கள் அவசியம் தேவைப்படும். ஆனால் நம் அனைவருக்கும் தினமும் அந்தளவுக்கு புரோட்டீன்கள் கிடைக்கின்றதா என்றால் கொஞ்சம் சந்தேகம் தான்.

10 நாளில் உடல் எடை அதிகரிக்க சில டிப்ஸ்..!

 

சரி உடல் எடை அதிகரிக்க புரோட்டீன் உணவுகள் (protein rich food in tamil) பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்வோமா…

புரோட்டீன் உணவுகள் & புரோட்டீன் பயன்கள் | protein rich food in tamil

புரோட்டீன் உணவுகள் (protein foods list tamil) – புரோட்டீன் அதிகம் உள்ள உணவுகள் – இறைச்சி உண்வுகள்:

chicken

நல்ல புரத சத்துக்கள் அதிகம் உள்ளது என்று பார்த்தால் இறைச்சி உணவுகளில் தான் அதிகம் உள்ளது. இறைச்சி உணவுகளில் தான் உடலுக்கு அத்தியாவசிய அமினோ அமிலமான ஒமேகா 3 கொழுப்பு அமிலமானது, அதிகம் உள்ளது.

எனவே உடல் எடை அதிகரிக்க நினைப்பவர்கள் தினமும் இறைச்சி உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள்.

newஒரே வாரத்தில் உடல் எடை அதிகரிக்க ஜூஸ்..!

புரோட்டீன் உணவுகள் (protein foods list tamil) – புரோட்டீன் அதிகம் உள்ள உணவுகள் – முட்டை:

முட்டையில் நிறைய புரத சத்துக்கள் காணப்படுகிறது. அதிகம் உடற்பயிற்சி செய்ப்பவர்கள், தினமும் அதிக உடல் உழைப்பு செய்ப்பவர்கள் தினம் ஒரு முட்டை சாப்பிடலாம். மற்றவர்கள் வாரத்தில் மூன்று முறை உணவில் முட்டை சேர்த்துக் கொள்ளலாம். இதனால் உடல் எடை அதிகரிக்க ஆரம்பிக்கும்.

உடல் எடை குறைய நார்ச்சத்து உணவுகள்

புரோட்டீன் உணவுகள் (protein foods list tamil) – புரோட்டீன் அதிகம் உள்ள உணவுகள் – பருப்பு வகைகள்:

புரோட்டீன் அதிகம் உள்ள உணவுகள் வகைகளில் துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, உளுந்தைப்பருப்பு போன்ற பருப்பு வகைகளில்

அதிகளவு புரத சத்து நிறைந்துள்ளது. இந்த பருப்பு வகைகளை உணவில் சேர்த்து கொள்வதினால் உடலுக்கு தேவையான புரோட்டீன்கள் கிடைக்கும்.

மேலும் முளைகட்டிய பயர் வகைகளில் அதிகளவு புரத சத்து காணப்படுகிறது.

எனவே உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் தினமும் முளைகட்டிய பயர் வகைகளை சாப்பிடுவதினால் உடல் எடையை அதிகரிக்கலாம்.

ஒல்லியா இருக்கிங்களா? ஒரு வாரத்தில் 10 கிலோ எடை கூட இதை Try பண்ணுங்க..!

புரோட்டீன் உணவுகள் (protein foods list tamil) – புரோட்டீன் அதிகம் உள்ள உணவுகள் – சோயா பீன்ஸ்:

உடல் எடை அதிகரிக்க சோயா பீன்ஸ் மிகவும் பயன்படுகிறது. இந்த சோயா பீன்ஸில் ஏராளமான ஊட்டச்சத்துக்களும், புரோட்டீன்களும் நிறைந்துள்ளது. மேலும் கால்சியம், வைட்டமின் பி12, நல்ல கொலஸ்ட்ரால் போன்றவையும் காணப்படுகிறது.

எனவே உடல் எடை அதிரகிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் சோயா பீன்ஸை உணவில் அதிகளவு சேர்த்து கொள்ளுங்கள்.

புரோட்டீன் உணவுகள் (protein foods list tamil) – புரோட்டீன் அதிகம் உள்ள உணவுகள் – பால் மற்றும் பால் பொருட்கள்:

milk and milk products

உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். இந்த உணவு பொருட்களில் அதிகளவு புரோட்டீன் சத்துக்கள் நிறைந்துள்ளது.

உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் மேல் கூறப்பட்டுள்ள உணவு பொருட்களில் ஏதேனும் ஒன்றை தினமும் உணவில் சேர்த்து வர, கூடிய விரைவிலேயே உடல் எடை அதிகரிக்க ஆரம்பிக்கும்.

நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள்

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement