கீன்வா அரிசி நன்மைகள் | Quinoa Benefits in Tamil
பொதுவாக நாம் உணவுக்காக நிறைய வகையான அரிசி வகைகளை சாப்பிட்டது உண்டு..! ஆனால் இந்த தானியங்களில் ஒன்று தான் இந்த கீன்வா அரிசி என்றும் சொல்வார்கள். அதேபோல் தானியம் என்றும் சொல்வார்கள். இந்த தானியத்தை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் நிறைய நன்மைகள் நமக்கு கிடைக்கிறது. அது என்ன என்பதை பற்றி தான் இந்த பதிவின் வாயிலாக பார்க்கப்போகிறோம். இதில் 9 வகையான அமினோ அமிலங்கள் கீன்வா அரிசியில் உள்ளது. இதுபோன்ற சத்துக்கள் நிறைய உள்ளது. அதனை பற்றி கீழ் பதிவில் தெளிவாக பார்க்கலாம்..!
கீன்வா அரிசியில் உள்ள சத்துக்கள்:
நிறைய தாதுக்கள் நிறைந்த பொருளாக உள்ளது. இதில் இதனை தவிர நிறைய சத்துக்கள் உள்ளது. இரும்பு, மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் பொட்டாசியம் ஆகிய தாதுக்கள் நிறைந்துள்ளன. மெக்னீசியமானது இரண்டாம் வகை நீரிழிவு நோயை சரி செய்ய உதவுகிறது. இது இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
100 கிராம் இந்த தானியத்தில் நிறைய சத்துக்கள் உள்ளது. புரதச்சத்து – 4.4 கிராம்,
கொழுப்புச்சத்து – 1.9 கிராம், கார்போஹைட்ரேட் – 19.4 கிராம், நார்ச்சத்து – 2.8 கிராம், கால்சியம் – 17 மில்லி கிராம், மக்னீசியம் – 64 கிராம். அதேபோல் மேல் சொன்ன மாதிரி இதில் 9 வகையான அமினோ அமிலங்கள் உள்ளது. உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் இதனை தாராளமாக எடுத்துக்கொள்ளலாம்.
நவதானியம் சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள்
செரிமான சக்தியை அதிகரிக்க:
இந்த கீன்வா என்ற தானியத்தில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது உடலில் செரிமானத்தை மேம்படுத்துகிறது. அதேபோல் இதை சமைப்பதற்கு முன்பு நன்றாக சுத்தப்படுத்தி பயன்படுத்துவது நல்லது. ஏனென்றால் அதில் அதிகமாக கிருமி தொற்றுகள் இருக்கும்.
ரத்த அழுத்தம் வராமல் தடுக்க:
உடலுக்கு அனைத்து சத்துக்களும் இருப்பதால் தான் நாம் வலிமையாக இருக்கிறோம். அதேபோல் ஒவ்வொரு சத்துக்களும் நிறைந்த சத்துகளை நாம் சாப்பிட்டுத் தான் வருகிறோம். இந்த கீன்வா தானியத்தில் புரத சத்துகளை உருவாக்குவதற்கு அமினோ அமிலங்கள் உள்ளது. அதேபோல் இது இரத்த அழுத்தத்தை தடுக்க மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளது. ஆகவே அதனை தடுக்கவும் கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.
இதனை தவிர நிறைய சத்துக்கள் உள்ளது. அதனை புற்றுநோயின் தாக்கத்திலிருந்து காக்குகிறது. ஏதேனும் வீக்கம் ஏற்பட்டால் மரபணுக்களை கட்டுப்படுத்தி வீக்கத்தை குறைக்கவும் உதவி செய்கிறது. அதேபோல் சரும ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. முக்கியமாக இதயத்தை பாதுகாக்க உதவுகிறது. எலும்புகள் வலிமையாக இருக்க மிகவும் உதவுகிறது. ஆகவே இனி இந்த தானியத்தை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்..!
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health Tips in Tamil |