பல் வலி & பல் சொத்தை பாட்டி வைத்தியம்..!(Teeth Problems And Solutions In Tamil)..!
பொதுவாக சொத்தை பற்கள் ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணம் என்னவென்றால் எந்த ஒரு உணவுப் பொருளை சாப்பிட்ட பின்பும் வாயை நீரினால் கொப்பளிக்காமல் இருப்பது. இதன் காரணமாக பாக்டீரியாக்கள் சேர்ந்து சொத்தை பற்களை ஏற்படுத்திவிடுகிறது.
இப்படி சொத்தையான பற்களை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டால், பற்களில் பெரிய ஓட்டை உருவாகி, நாளடைவில் ஈறுகளில் நோய்த்தொற்றுகள் ஏற்பட்டு, அதுவே பல பிரச்சனைகளை உண்டாக்கிவிடும்.
இந்த பிரச்சனையை சரிசெய்ய உண்ணும் உணவினை கவனமாக மேற்கொள்வது நல்லது. ஒரு சில உணவு பொருட்களைக் கொண்டு பற்களைப் பராமரித்து வந்தால், சொத்தை பல் சரியாகிவிடும்.
பல் சொத்தை பாட்டி வைத்தியம்..! |
சரி வாங்க பல் சொத்தை பாட்டி வைத்தியம் (Teeth Problems And Solutions In Tamil) என்ன இருக்கிறது என்பதை இப்போது நாம் படித்தறிவோம்.
பல் சொத்தை பாட்டி வைத்தியம் – வேப்பிலை:-
இந்த சொத்தை பல் குணமாக வேப்பிலை மிகவும் ஒரு சிறந்த வைத்தியம். அதாவது வேப்பிலை சாற்றினை சொத்தைப் பற்களின் மீது தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் வாயை கொப்பளிக்க வேண்டும்.
முடிந்தால் தினமும் வேப்பங்குச்சி கொண்டு பற்களை துலக்கி வந்தாலும், சொத்தை பற்கள் மிக விரைவில் குணமாகிவிடும்.
பல் சொத்தை பாட்டி வைத்தியம் – நீர்முள்ளி விதை:
பல் சம்மந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் இது ஒரு சிறந்த நிவாரணமாக விளங்குகிறது.
இந்த நீர்முள்ளி விதை கஷாயம் பல் சொத்தை, பல் வலி, பல் ஆட்டம், பூச்சி பல், பல் ஓட்டை, ஈறுகளில் ஏற்படும் தொற்றுகள் என்று அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்ய மிகவும் பயன்படுகிறது.
இந்த நீர்முள்ளி விதை அனைத்து சித்த மருத்துவ கடைகளிலும் கிடைக்கும், அவற்றை வாங்கி வந்து பயன்படுத்தி கொள்ளலாம்.
சரி வாங்க இந்த கஷாயம் எப்படி தயார் செய்ய வேண்டும் என்பதை பற்றி இப்போது நாம் பார்ப்போம்.
கருப்பை நீர்கட்டி பிரச்சனையை குணப்படுத்தும் சிறந்த மருத்துவ குறிப்பு..! |
கஷாயம் செய்ய தேவையான பொருட்கள்:
- நீர் முள்ளி விதை – 20 கிராம்
- வசம்பு – ஒரு துண்டு
- குளிர்ந்த நீர் – 200 மில்லி
பல் சொத்தை பாட்டி வைத்தியம் கஷாயம் செய்முறை:
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அவற்றில் 20 மில்லி குளிர்ந்த நீரை ஊற்றி நன்றாக சூடேற்ற வேண்டும். தண்ணீர் நன்றாக சுட்டதும் அவற்றில் 20 கிராம் நீர்முள்ளி விதை மற்றும் ஒரு துண்டு வசம்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
கஷாயம் நன்றாக கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கி இந்த கஷாயத்தை வடிகட்டி கொள்ளவும். கஷாயம் மிதமான சூடு வந்தவுடன் இதனை வாயில் ஊற்றி நன்றாக கொப்பளிக்க வேண்டும்.
இவ்வாறு இந்த முறையை தினமும் மூன்று வேலை செய்து வந்தால் பற்கள் சம்மந்தமான எந்த பிரச்சனைகளும் நமக்கு வராது. இந்த பல் சொத்தை குணமாக இந்த பாட்டி வைத்தியம் முறையை பின்பற்றவும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health Tips in Tamil |