உடலில் ஆற்றலை பெருக்கும் சுண்டைக்காய் மருத்துவ பயன்கள்..!

Advertisement

சுண்டைக்காய் மருத்துவ பயன்கள்..! Sundaikkai Benefits in Tamil..!

சுண்டைக்காய் மருத்துவ பயன்கள் வாய்ந்த காய்கறிகளில் ஒன்று. இருப்பினும் இவற்றின் கசப்பு தன்மையின் காரணமாக பலரும் இதை விரும்புவது இல்லை. பெரும்பாலும் கிராம புறங்களில் நோய் தீர்க்கும் காய்கறி வகைகளில் சுண்டைக்காய் முதல் இடத்தை பெற்றுள்ளது.

இந்த சுண்டைக்காயில் என்னென்ன சத்துக்கள் நிறைந்துள்ளது என்று பார்ப்போம். 100 கிராம் சுண்டைக்காயில் இரும்பு சத்து 22.5 கிராம், கால்சியம் 390 கிராம், பாஸ்பரஸ் 180 கிராம் இன்னும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது இந்த சுண்டைக்காயில்.

நீங்க மருத்துவமனைக்கே செல்லாமல் ஆரோக்கியமாக, நோய் நொடியின்றி வாழ வேண்டுமா??? அப்போ சுண்டைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்.

சுண்டைக்காய் மருத்துவ பயன்கள்..!

வயிற்று பூச்சி வெளியேற :

Sundakkai health benefits –  சுண்டைக்காயின் மிகப்பெரிய மருத்துவ குணங்கள் எது என்று சொன்னால், வயிற்று பூச்சிகளை வெளியேற்றுவது. எனவே வயிற்று பூச்சிகளை அழிக்க தினமும் அதிகளவு சுண்டைக்காயை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

இவ்வாறு சுண்டைக்காயை உணவில் அதிகம் சேர்த்து கொள்வதினால் வயிற்று பூச்சிகள் வெளியேறும், மேலும் வயிற்று சம்மந்தமான நோய்கள் வராமலும் காக்கும்.

காய்ச்சல் குணமாக :

சுண்டைக்காய் பயன்கள் – காய்ச்சல் உள்ளபோது அதிகளவு சுண்டைக்காய் சாப்பிட்டு வர, உடலில் இரத்த வெள்ளையணுக்கள் அதிகரிக்கும், இதனால் காய்ச்சல் விரைவில் குணமாகும்.

அலர்ஜி:

சுண்டைக்காய் பயன்கள் – சில சமயங்களில் உடலில் அலர்ஜி, அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

அந்த சமயத்தில் அதிகளவு சுண்டைக்காய் சாப்பிட்டு வர அலர்ஜி மற்றும் அரிப்புகளினால் ஏற்பட்ட காயங்கள் உடனே சரியாகும்.

வாய்வு பிரச்சனை நீங்க:

சுண்டைக்காய் பயன்கள் – சிலருக்கு அடிக்கடி வாய்வு பிரச்சனைகள் ஏற்படும், அதன் காரணமாக ரொம்பவே கஷ்டப்படுவாங்க.

இனி கவலையே வேண்டாங்க, சுண்டைக்காயை அதிகளவு உணவுல சேர்த்துக்கொள்ளுங்கள். இதன் மூலம் வாய்வு பிரச்சனைகளில் இருந்து நீங்கள் நிச்சயம் விடுபட முடியயும்.

இதையும் படிக்கலாமே–> வெங்காயம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!

குழந்தைகள் ஆரோக்கியமாக வளர:

சுண்டைக்காய் கசப்பு தன்மையுடையது என்பதால், குழந்தைகள் விரும்பி சாப்பிடமாட்டார்கள், இருப்பினும் குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்து, சுண்டைக்காயை சாப்பிட பழகவேண்டும்.

ஏன்னென்றால் சுண்டைக்காயில் அதிகளவு ஊட்டச்சத்து நிறைந்துள்ளது. குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுகள் இன்றி ஆரோக்கியமாக வளருவார்கள்.

சுவாச பிரச்சனைகள் சரியாக:

சுண்டைக்காய் பயன்கள் – சிலருக்கு ஆஸ்துமா, வறட்டு இருமல், நாள்பட்ட நெஞ்சு சளி போன்ற, பிரச்சனைகளினால் மிகவும் அவஸ்த்தை படுவார்கள், காய்ந்த சுண்டைக்காயை நல்லெண்ணையில் வறுத்து, வத்தக்குழம்பு வைத்து சாப்பிட்டு வர சுவாச சம்மந்தமான அனைத்து பிரச்சனைகளும் உடனே சரியாகும்.

மூலம் :

காய்ந்த சுண்டைக்காயை நெயில் வறுத்து, வாரத்தில் மூன்று முறை சாப்பிட்டு வர மூலம், மூலச்சூடு, மூலத்தினால் ஏற்பட வயிற்று கடுப்பு போன்ற பிரச்சனைகள் விரைவில் சரியாகும்.

மேலும் மூலத்தினால் ஏற்படும் இரத்த கசிவு பிரச்சனைகளும் உடனே சரியாகும்.

மார்புச்சளி நீங்க:

Sundakkai health benefits – முற்றிய சுண்டைக்காயை நசுக்கி மோரில் போட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து எடுத்து பத்திரப்படுத்திக்கொண்டு தினமும் எண்ணெயில் வறுத்துச் சாப்பிடலாம் அல்லது வற்றல் குழம்பாக்கிச் சாப்பிடலாம்.

இது மார்புச்சளியைப் போக்கும். குடலில் உள்ள கசடுகளை நீக்கும்.

நீரிழிவு நோய் குணமாக:

சுண்டை வற்றலை நெய்யில் வறுத்துப் பொடியாக்கி சோற்றுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயால் உண்டாகும் கை, கால் நடுக்கம், மயக்கம், உடல்சோர்வு, வயிற்றுப் பொருமல் போன்றவை நீங்கும்.

ஜீரணத் தன்மை

Sundakkai health benefits – சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி முழுத்தாவரமும் மருத்துவ குணம் உடையது. இலைகள் ரத்தக் கசிவினை தடுக்கக் கூடியவை.

கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகின்றன. முழுத்தாவரமும் ஜீரணத் தன்மை கொண்டது.

இதையும் படிக்கலாமே–> மாதுளை ஜுஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.

Advertisement