Vegetables Benefits in Tamil | Kaikarigal Payangal in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் எந்தெந்த காய்கறிகள் சாப்பிட்டால் என்னென்ன நன்மை கிடைக்கும் என்பதை ( vegetables benefits in tamil) பின்வருமாறு விவரித்துள்ளோம். காய்கறிகள் பயன்கள் – எந்தெந்த காய்கறிகளில் என்னென்ன சத்துக்கள் நிறைந்துள்ளது என்பதையும், அந்த காய்கறிகளில் உள்ள மருத்துவ குணங்களையும், என்ன நோய்க்கு என்ன காய்கறிகளை சாப்பிடலாம் என்பதை பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்வோம் வாங்க….
| பழங்களும் அதன் மருத்துவ பயன்களும் (Fruits Benefits In Tamil)..! |
காய்கறிகள் பயன்கள் (Vegetables Benefits in Tamil) –
வாழைத்தண்டு

வாழைத்தண்டில் நிறைந்துள்ள சத்துக்கள்:
- கால்ஷியம்
- பாஸ்பரஸ்
- இரும்புசத்து
- வைட்டமின் பி, சி
| நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க நாம் என்ன செய்ய வேண்டும்? |
வாழைத்தண்டு பயன்கள்:
- வாழை தண்டு வாரத்தில் ஒரு முறை சாப்பிட்டு வர சிறுநீரகத்தில் உள்ள கற்களை கரைக்க உதவுகிறது.
- சிறுநீர் எரிச்சலை குணப்படுத்தும், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்கும். குறிப்பாக வயிற்று புண்ணை குணப்படுத்தும் சிறந்த இயற்கை உணவு இந்த வாழைத்தண்டு தான்.
காய்கறிகள் பயன்கள் (Vegetable benefits in tamil) – வாழைப்பூ:

வாழைப்பூவில் நிறைந்துள்ள சத்துக்கள்:-
- கால்ஷியம்
- பாஸ்பரஸ்
- இரும்புசத்து
- புரதச்சத்து
- வைட்டமின் பி, சி
- நார்ச்சத்து
வாழைப்பூ பயன்கள்:
- வாழைப்பூவை வாரத்தில் ஒரு முறை சாப்பிட்டு வர, மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்யும்.
- பெண்கள் இந்த வாழைப்பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் கோளாறு, வெள்ளைப்படுதல், வயிற்று வலி போன்ற அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யும்.
- வாழைப்பூவை தினமும் சாப்பிட்டு வர இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து இரத்தத்தை சுத்திகரிக்கும். இரத்த அழுத்தம், இரத்த சோகை போன்றவை வராமல் தடுக்கும்.
காய்கறிகள் பயன்கள் (Vegetable benefits in tamil) – வாழைக்காய்:

வாழைக்காயில் நிறைந்துள்ள சத்துக்கள்:
- இரும்பு சத்து
- வைட்டமின் ஏ, பி, சி
- போலிக் ஆசிட்
- பொட்டாசியம்
வாழைக்காய் பயன்கள்:
- வாழைக்காயில் பலவகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், கர்ப்பிணி பெண்கள், சிறிய குழந்தைகள் என்று அனைவருமே சாப்பிடலாம்.
- குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் வாழைக்காயை வாரம் மூன்று முறை சாப்பிட்டு வருவதால் உடலில் இன்சுலின் ஹார்மோன் சுரப்பை அதிகரித்து, ரத்தத்தில் குளுகோஸின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.
காய்கறிகள் பயன்கள் (Vegetable benefits in tamil) – பீட்ரூட்:

பீட்ரூட்டில் நிறைந்துள்ள சத்துக்கள்:
மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம், நைட்ரேட், கால்சியம், காப்பர், செலினியம், ஜிங்க், இரும்புச்சத்து மற்றும் மாங்கனீசு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
பீட்ரூட் நன்மைகள்:
- அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் இந்த பீட்ரூட்டை ஜூஸ் செய்து தினமும் அருந்திவர இந்த அல்சர் பிரச்சனை உடனே சரியாகிவிடும்.
- இரத்த சோகை என்று சொல்ல கூடிய அனிமியா பிரச்சனை உள்ளவர்கள். இந்த பீட்ருட்டை சாப்பிடும் உணவில் சேர்த்துவர, இரத்த சோகை பிரச்சனை சரியாகிவிடும்.
- உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், பீட்ரூட்டை சாறு எடுத்து குடித்து வந்தால், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொள்ளலாம்.
காய்கறிகள் பயன்கள் (Vegetable benefits in tamil) – பாகற்காய்:
பாகற்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:
பாகற்காயில் வைட்டமின் ஏ,பி, சி, பாஸ்பரஸ், கால்ஷியம், பீட்டா கரோட்டின், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் போன்ற சத்துக்கள் அதிகம் நிரைந்துள்ளது.
பாகற்காய் பயன்கள்:-
- இந்த பாகற்காய் அதிகம் சாப்பிடுவதினால் பசியை தூண்டும்.
- பாகற்காய் குறிப்பாக சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவுகிறது.
- பாகற்காயில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின், கண் சம்மந்தமான நோய்களுக்கு தீர்வாக உள்ளது.
- மேலும் இதில் உள்ள வைட்டமின்-சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், கண்களுக்கு ஏற்படும் பாதிப்பில் இருந்து உங்களை பாதுகாக்கும்.
காய்கறிகள் பயன்கள் (Vegetable benefits in tamil) – கேரட்:

கேரட்டில் நிறைந்துள்ள சத்துக்கள்:
கேரட்டில் வைட்டமின் ஏ, புரதம், கொழுப்பு, தாதுக்கள், நார்ச்சத்து, இரும்பு சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின், மெக்னீசியம், சோடியம் போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது.
கேரட் பயன்கள்:
– கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ கண்பார்வை குறைபாடு மற்றும் கண் பொங்குதல் போன்ற பிரச்சனைகளை சரி செய்ய மிகவும் பயன்படுகிறது.
வைட்டமின் ஏ குறைபாட்டினால் சரும வறட்சி, நகம் உடைவது மற்றும் முடி உதிர்வது போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். எனவே கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ இந்த அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்ய மிகவும் பயன்படுகிறது. எனேவ தினமும் உணவில் அதிகளவு கேரட் சேர்த்து கொள்ளுங்கள் அல்லது ஜூஸ் செய்து குடிக்கலாம்.
| அரியவகை பழங்களும் அதன் பலன்களும் (Fruit Benefits In Tamil)..! |
| இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |














