குழந்தைக்கு தடுப்பூசி அட்டவணை ..!

பிறந்த குழந்தை தடுப்பூசி அட்டவணை :-

பெரும்பாலும் குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்றுநோய்களில் 90% குழந்தை பராமரிப்பில் சரியான கவனம் இல்லாததால் ஏற்படுகிறது.

புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்குத் தொற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். எனவே குழந்தைகளுக்கு என்னென்ன தொற்று நோய்கள் பரவுகின்றன. அதில் இருந்து பிறந்த குழந்தைகளை எப்படிப் பாதுகாப்பது ? என்று இவற்றில் காண்போம்.

newகுழந்தை தடுப்பூசி போட்ட பிறகு எப்படி பராமரிக்க வேண்டும்..!

அரசு தடுப்பூசி அட்டவணை

1.பிறந்த குழந்தை தடுப்பூசி அட்டவணை ..!

2. குழந்தைக்கு தடுப்பூசி அட்டவணை ..!

குழந்தைக்கு தடுப்பூசி அட்டவணை – முழுமையான விவரங்கள்

குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்றுகள்:

சளி, இருமல்:

வைரஸ் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் நம் உடலில் இருக்கின்ற நோய் எதிர்ப்பு சக்திக்கு எதிராகப் போராடுவதால் ஏற்படும் பாதிப்பு தான் சளி மற்றும் இருமல்.

இது காற்று மற்றும் தண்ணீரில் உள்ள மாசு, கைகளைச் சரியாகச் சுத்தம் செய்யாமல் உணவு ஊட்டுதல் போன்ற காரணங்களால் தொற்று நோய்கள் குழந்தைகளுக்கு ஏற்படுகின்றன. இதனால் நுரையீரல் பாதிப்புக்கு உள்ளாகும்.

காய்ச்சல்:

இது தொற்று மூலமாகவும் அல்லது தொற்று அல்லாமலும் பரவும். ஆனால் 90% இந்த தொற்று, காய்ச்சல் மூலமாவே பரவுகிறது.

குறிப்பாக மூக்கடைப்பு மற்றும் மூக்கில் தொடர்ந்து நீர் வடிதல், தொடர்ந்து அழுது கொண்டு இருப்பது போன்ற அறிகுறிகளோடு, இந்த காய்ச்சல் சில குழந்தைகளுக்கு வலிப்பை கூட ஏற்படுத்தும்.

வயிற்று போக்கு:

பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றினால் ஏற்படும் பாதிப்பு இது.

அதுவும் சரியாகக் காய்ச்சி வடிகட்டப்படாத குடிநீர், மூடி வைக்காத உணவு போன்றவற்றைக் குழந்தைக்குக் கொடுப்பதனாலும், கைகளைக் கழுவாமல் உணவு ஊட்டுவதாலும் குழந்தைக்கு கிருமித் தொற்று ஏற்பட்டு வயிற்றுப் போக்கு ஏற்படும்.

சில சமயங்களில் வயிற்றுப் போக்குடன் வாந்தியும் இருக்கும்.

இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு டைபாய்ட் வரலாம்.

குழந்தைகளை தாக்கும் நோய் தொற்றுகள்:

சின்னம்மை:

இந்த தொற்று வேரிசெல்லா வைரஸால் ஏற்படக் கூடியது.

சிறு சிறு கொப்புளங்கள், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் காணப்படும்.

கோடை காலங்களில் இது குழந்தைகளை அதிகமாகத் தாக்கும்.

மணல் வாரி அம்மை:

மணல் வாரி இதுவும் வைரஸ் தொற்று தான். குழந்தையின் முகம், கண்கள் சிவந்து காணப்படும், மூக்கில் நீர் வடியும், தோலில் மணலை அள்ளித் தெளித்தது போல பொரிப் பொரியாகக் காணப்படும், வாய்ப்புண், வயிற்றுப் போக்கு, நிமோனியா போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

இது தவிர விட்டமின் ஏ சத்துக் குறைபாடும் காசநோய் பாதிப்பும் கூட உருவாகலாம்.

மஞ்சள் காமாலை:

பிறந்து 10 முதல் 15 நாட்கள் ஆன பிறகே குழந்தையின் கல்லீரல் முழுமையான செயல் திறன் பெறும்.

எனவே, குழந்தையின் உடலில் ஏற்படும் மஞ்சள் நிறமாற்றமானது இரண்டு வாரங்களுக்குள் சரியாகிவிடும்.

ஆனால் இரண்டு வாரங்களுக்கும் மேலாகத் தொடர்ந்தால் அது மஞ்சள் காமாலை நோயாக இருக்கலாம்.

குழந்தை நல மருத்துவரிடம் சென்று இந்த பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டும்.

சிறுநீரக பிரச்சனை:

குழந்தைகள் சிறுநீர், மலம் கழித்த பின்னர் சரியாக சுத்தம் செய்யவில்லை எனில், சிறுநீர்த் தாரையில் கிருமித் தொற்று ஏற்படும்.

இதனால் குழந்தைகளின் சிறுநீர் வெளியேறும் அளவு குறையும்.

சிறுநீர் கழிப்பதற்காக உள்ளாடையைக் கழற்றுவதற்கு முன்பாகவே சிறுநீர் கழித்து விடுவார்கள்.

மேலும் சிறுநீர் கழிக்கும் போது அந்தப் பகுதியில் வலி மற்றும் எரிச்சல் ஏற்படும்.

இது அதிகமானால் சிறுநீரோடு இரத்தமும் கலந்து வரும்.

ஆண் குழந்தைகளாக இருந்தால் அவர்களின் ஆண் உறுப்பைச் சுற்றி இருக்கும் போர் ஸ்கின் இறுகிக் காணப்படும்.

ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை மூலமாக ஆண் உறுப்பின் நுனியில் இருக்கும் போர் ஸ்கின்னை அகற்றிவிடுவோம்.

ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குத் தண்ணீர் அதிகமாகக் கொடுக்கச் சொல்வோம்.

குழந்தை தடுப்பூசி அட்டவணை ..!

தடுப்பூசி வகைகள் 1 – குழந்தையின் வயிற்று போக்கு:

குழந்தைக்கு தடுப்பூசி அட்டவணை :1 குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் போக்கைத் தடுக்க ரோட்டா வைரஸ் என்கிற தடுப்பு ஊசியை குழந்தை (vaccination for babies) பிறந்த ஆறு மாதங்களுக்குள் இரண்டு முறை போட வேண்டும்.

பின்பு குழந்தை பிறந்த ஒன்றரை மாதம், இரண்டரை மாதம், மூன்றரை மாதம் கால அளவில் தொண்டை அடைப்பான் , கக்குவான் இருமல், ர ண ஜன்னிக்கான முத்தடுப்பு ஊசி, இன்ஃப்ளூயன்சா பி தடுப்பு ஊசி, ஹெபடைடிஸ் பி, தடுப்பு ஊசி போட்டுக் கொள்வதோடு போலியோ சொட்டு மருந்தும் கொடுக்க வேண்டும்.

மேலும் ஒன்றரை வயதில் முத்தடுப்பு முதல் ஊக்க ஊசி மற்றும் இன்ஃப்ளூயன்ஸா பி ஊக்க ஊசி போட வேண்டும்.

தடுப்பூசி வகைகள் 2 – குழந்தை பிறந்த ஒன்பதாவது மாதத்தில்:

குழந்தைக்கு தடுப்பூசி அட்டவணை :2 குழந்தையின் ஒன்பதாவது மாத (vaccination for babies) முடிவில் மணல் வாரி அம்மைக்கான முதல் டோஸ் தடுப்பு ஊசி போட வேண்டும். 15 ஆவது மாதத்தில் எம்.எம். ஆர். ஊசி போட வேண்டும்.

தடுப்பூசி வகைகள் 3 – ஒரு வயது முடிந்த குழந்தைக்கு:

குழந்தைக்கு தடுப்பூசி அட்டவணை :3 ஒரு வயது முடிந்த பின் (vaccination for babies) மஞ்சள் காமாலை ஏ மற்றும் சின்னம்மைக்கான தடுப்பு ஊசி போட வேண்டும்.

தடுப்பூசி வகைகள் 4 – குழந்தையின் இரண்டாவது வயதில்:

குழந்தைக்கு தடுப்பூசி அட்டவணை :4 இரண்டு வயதில் (vaccination for babies) டைபாய்ட் தடுப்பு ஊசி போட வேண்டும்.

நாலரை வயதில் முத்தடுப்பு இரண்டாவது ஊக்க ஊசி போட வேண்டும். 10 வயதில் டெட்டானஸ்டொக்ஸைட் ஊசியும் 16 வயதில் டெட்டானஸ் டொக்ஸைடுக்கான இரண்டாவது ஊக்க ஊசியும் போட வேண்டும். பெண் குழந்தைகளுக்கு 16 வயதில் ரூபெல்லா ஊசி போட வேண்டும்.

குறிப்பு:-

மேற்காணும் தடுப்பூசி அட்ட‍வணை பகிர்ந்திருப்ப‍து விழிப்புணர்வு ஏற்படுத்தவே, குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுமுன் மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையின் பேரில் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போட்டு வரவும்.

குழந்தைக்கு தடுப்பூசி அட்டவணை பற்றி பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை..!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.