குழந்தைக்கு தொப்புளில் ஏற்படும் வீக்கம் சரியாக..! Baby Hernia Belly Button..!
Baby Hernia In Belly Button: வணக்கம் நண்பர்களே..! இன்றைய பொதுநலம்.காம் பதிவில் குழந்தைக்கு தொப்புளில் உண்டாகக்கூடிய வீக்கத்தை எப்படி சரி செய்யலாம்னு இந்த பதிவில் அனைவரும் படித்து தெரிந்துக்கொள்ள போகிறோம். குழந்தைக்கு தொப்புளில் காற்று போவதினால் தான் இந்த மாதிரியான தொப்புள் வீக்கங்கள் ஏற்படுகிறது. சரி வாங்க இப்போது தொப்புளில் உள்ள வீக்கத்தை சரி செய்ய எளிமையான டிப்ஸ்களை முழுமையாக படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..!
குழந்தை நலன் – தொப்புள் கொடி பற்றிய நம்பமுடியாத தகவல்கள்..! |
குழந்தைக்கு தொப்புள் வீக்கம் குணமாக:
குழந்தைக்கு தொப்புளில் வீக்கம் ஏற்படுவதற்கு 2 காரணங்கள் உள்ளன. பிறந்த குழந்தைக்கு தொப்புள்கொடியை அகற்றிய பிறகு கிளிப் போடுவார்கள். குழந்தைக்கு போடும் அந்த தொப்புள்கொடியின் கிளிப்பானது சரியாக இல்லையென்றால் அதன் வழியாக குழந்தையின் தொப்புள்கொடிக்கு காற்று போய்விடும்.
குழந்தை தொப்புள் வீக்கம் நீங்க:
குழந்தைக்கு இதுபோன்று கிளிப் தொப்புளில் போடுவதால் தொப்புளில் வீக்கம் வர ஆரம்பம் ஆகும். இந்த வீக்கத்தை வளரவிடாமல் உடனே மருத்துவரிடம் அணுகி பிரச்சனையை சரிசெய்து கொள்ளலாம்.
குழந்தைக்கு ஏற்படும் தொப்புள் வீக்க பிரச்சனையை ஆரம்பத்திலே பார்த்து மருத்துவரிடம் சென்று சரிசெய்து கொள்ளவேண்டும். இல்லையென்றால் இந்த வீக்கமானது குணமாக நாள் ஆகும். தொப்புளில் காற்று போவதினால் வரும் வீக்கத்தை உடனே மருத்துவரிடம் சென்றால் குழந்தைக்கு கண்டிப்பாக இந்த தொப்புள் வீக்கமானது நீங்கிவிடும்.
குழந்தைக்கு ஏற்படும் டயப்பர் ரேஷஸ் சரியாக டிப்ஸ்..! Diaper Rashes Home Remedies..! |
குடலிறக்கம்:
குழந்தைக்கு தொப்புள் வீக்கம் வர இரண்டாவது காரணம் குடலிறக்கம். இந்த குடலிறக்கம் அனைத்து குழந்தைகளுக்கும் இருக்காது. சில குழந்தைக்கு மட்டுமே வரும்.குடலிறக்கம் பிரச்சனையால் தொப்புளில் வீக்கம் ஏற்பட்டால் குழந்தைக்கு கண்டிப்பாக அறுவை சிகிச்சை செய்யவேண்டும்.அறுவை சிகிச்சையை குழந்தைக்கு 4 வயது ஆன பிறகுதான் செய்ய முடியும்.
இந்த தொப்புள் வீக்கம் சில குழந்தைகளுக்கு தொடர்ச்சியாக இருந்தாலும் எந்த வித பிரச்சனைகளும் நேரிடாது. ஆனால் சிலருக்கு இதனால் எதிர்காலத்தில் செரிமான கோளாறுகளை ஏற்படுத்தி வயிற்று வலியை உண்டாக்கிவிடும்.
குடலிறக்கம் எதனால் வருகிறது:
குடலிறக்கம் எதனால் வருவது என்றால் குழந்தைகள் வயிற்று பகுதிக்கு அதிக அழுத்தம் கொடுப்பதனால் தான் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.
முக்கியமாக குழந்தைகள் வயிற்று பகுதியை அழுத்திக்கொண்டு அலுவதனால் கூட இந்த தொப்புள் வீக்க பிரச்சனை வரும்.
குழந்தைகளை பராமரிக்க உதவும் அடிப்படை டிப்ஸ் !!! |
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | குழந்தை நலன் |