குழந்தைகள் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு மற்றும் அதனை தடுக்கும் முறை..!

Effect of mobile phone on child

குழந்தைகள் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு மற்றும் அதனை தடுக்கும் முறை..! Effect of mobile phone on child..!  

Effect of mobile phone on child:- இப்போது வளரும் குழந்தைகளுக்கு ஸ்மார்ட் போன் என்பது சர்வ சாதாரணமான விஷயமாக மாறிவிட்டது. அடம்பிடிக்கும் குழந்தைகளை சமாதானப்படுத்த முந்தைய காலகட்டத்தில் விளையாட்டு பொருட்களை காட்டியும், வேடிக்கை காட்டியும் சமாதானப்படுத்துவார்கள்.

ஆனால் இப்போதோ, அழுது கொண்டிருக்கும் குழந்தையிடம் செல்போனில் பொம்மை படங்களையோ, கேம்களையோ போட்டு அவர்கள் கையிலேயே கொடுத்து விடும் நடைமுறை தற்போது அதிகரித்துள்ளது.

இதனால் குழந்தைகள் சமாதானம் ஆகலாம், ஆனால் அதனால் ஏற்படும் பாதிப்புகள் அதிகம். மொபைல் போன் பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் அவற்றை தடுக்கும் வழிமுறைகளை குறித்து இங்கே காணலாம்.

குழந்தைகளுக்கு நன்றாக பசி எடுக்க என்ன செய்ய வேண்டும்?

குழந்தைகள் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு:

Effect of mobile phone on child: 1

குழந்தைகள் தொடர்ந்து செல்போன் பயன்படுத்துவதால் கண்கள், மனம், தூக்கம் என எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக குழந்தைகள் இழக்கத் தொடங்குகிறார்கள்.

Effect of mobile phone on child: 2

ஒளிரும் திரையை பல மணி நேரம் பார்ப்பதால் கண்கள் பாதிக்கப்பட்டு சிவக்கின்றன. விழிகள் உலர்ந்து போய் பார்வைத்திறன் பாதிக்கப்படுகிறது. இதனால் இளம் வயதிலேயே கிட்டப்பார்வை குறைபாடு ஏற்பட்டு விடுகிறது.

சரி இவற்றை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கு காண்போம். 

தவிர்க்கும் முறை:

ஒரே நாளில் செல்போன் பயன்படுத்தும் குழந்தைகள் பழக்கத்தை மாற்ற முடியாது. முதலில் குழந்தைகள் முன் பெரியவர்களாகிய நாம் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

அவர்களுக்கு பயன்படுத்த கொடுக்கும் நேரத்தை குறைக்கவும் தொடர்ந்து பயன்படுத்தாமல் இடைவெளி விட்டு பயன்படுத்த செய்யுங்கள். உங்களது மொபைலை குழந்தைகளிடம் கொடுக்கும் போது அதனை ஏரோ பிளைன் மோடில் போட்டு அவர்களிடம் கொடுக்கலாம்.

இதனால் அவர்களுக்கு கதிரியக்க பாதிப்பு உண்டாகாமல் தவிர்க்கலாம். வீட்டுக்கு வெளியே போய் விளையாடும் பழக்கத்தை குழந்தைகளுக்கு ஏற்படுத்துங்கள். அவர்களோடு சேர்ந்து நீங்களும் விளையாடினால் அவர்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும்.

குழந்தைகள் போனை பயன்படுத்தும்போதும் நேராக அமர்ந்து இருக்கிறார்களா, என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தலை குனிந்து போனை பார்ப்பதற்கு அனுமதிக்கக்கூடாது. இதனால் கழுத்து நரம்புகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது.

குழந்தைகளின் கல்வி சம்பந்தமான ஏராளமான அப்ளிகேஷன்கள் இருக்கின்றன. அது அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்ற எண்ணத்தில் அதிக நேரத்தை போனிலேயே செலவழிக்க அனுமதிக்கக்கூடாது.

பெற்றோர்கள் தங்கள் கையில் செல்போனை வைத்து கொண்டு குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கலாம். அவர்களிடம் செல்போனை ஒப்படைக்க வேண்டாமே!

குழந்தைகளின் ஸ்மார்ட்போன் பழக்கத்தால் சுபாவம், நடத்தையில் பெருமளவில் மாற்றம் ஏற்படும். இந்த பழக்கத்தில் இருந்து அவர்களை விடுவிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

போனில் வீடியோகேம்ஸ் விளையாடிப் பழகி, அதற்கு அடிமையாகி விடுவார்கள். ஒரே இடத்தில் உட்கார்ந்து கேம்ஸ் விளையாடுவார்கள். இயற்கையான விளையாட்டுகளின் மீது உள்ள மோகம் குறைந்துவிடும்.

பருமன் பிரச்னையும் ஏற்படும். அதனால் குழந்தைகளிடம் ஸ்மார்ட்போனை கொடுக்கும் போது ஃப்ளைட் மோட் ஆஃசனில் கொடுக்க வேண்டும். அப்போது கேம்ஸ் போன்ற சில ஆப்ஷன்களை பயன்படுத்த முடியாது.

குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும் உணவுகள்..!

குழந்தைகளை ஸ்மார்ட்போன் பழக்கத்தில் இருந்து விடுவிக்கும் வழிகள் / How to Recover a child using Mobile Phone:

Effect of mobile phone on child: 1

பெற்றோர், குழந்தைகளுக்கு நல்ல முன் உதாரணமாக ஸ்மார்ட்போன் பயன்பாட்டை முற்றிலும் குறைக்க வேண்டும்.

Effect of mobile phone on child: 2

ஸ்மார்ட்போனுக்கு பாஸ்வேர்டு போடுங்கள். குழந்தைகள் செல்லும் இணைய பக்கங்களில் ஒரு கண் வையுங்கள்.

Effect of mobile phone on child: 3

குழந்தைகள் செல்போன் பயன்படுத்தும் நேரத்தை மெல்லமெல்ல குறையுங்கள். விழிப்புணர்வு ஊட்டுவதுடன் அதிலிருந்து விலகி வரும் மனநிலையை உருவாக்குங்கள்.

Effect of mobile phone on child: 4

குழந்தைகளுடன் விளையாடும் நேரத்தை அதிகமாக்குங்கள்.

Effect of mobile phone on child: 5

ஓவியம் வரையக் கற்றுக் கொடுங்கள், கலைப்பொருட்கள் உருவாக்க நேரம் செலவிடுங்கள்.

Effect of mobile phone on child: 6

விளையாட்டு மையங்கள், பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு அழைத்துச் செல்லுங்கள்.

Effect of mobile phone on child: 7

குழந்தைகளுடன் செலவிடும் நேரமே அவர்களை அந்த அடிமைத்தனத்தில் இருந்து மீட்பதுடன், ஆரோக்கியமான எதிர்காலத்தையும் உருவாக்குகிறது என்பதை மனதில் கொள்ளுங்கள்!

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>குழந்தை நலன்