குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும் உணவுகள்..!

குழந்தையின் மூளை வளர்ச்சி

குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும் உணவுகள்..!

பொதுவாக பெற்றோர்களின் ஆசை என்னவென்றால் தன் குழந்தை திறமையாக இருக்க வேண்டும், தன் குழந்தை ஆரோக்கியமா இருக்க வேண்டும், தன் குழந்தை மற்ற குழந்தையை காட்டிலும் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள் அனைத்து பெற்றோர்களுக்கும் இருக்கும். இந்த ஆசையெல்லாம் நடக்க வேண்டும் என்றால் குழந்தையின் மூளை வளர்ச்சி சீராக இருக்க வேண்டும். எனவே குழந்தையின் மூளை வளர்ச்சியை அதிகரிக்க சத்துள்ள உணவுகளால் மட்டுமே முடியும்.

இரட்டை குழந்தை பிறக்க வேண்டுமா? அப்போ இதை டிரை பண்ணுங்க !!!

 

சரி வாங்க குழந்தையின் மூளை வளர்ச்சி திறனை அதிகரிக்க என்னென்ன உணவுகளை தினமும் தரவேண்டும் என்பதை பற்றி இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க..!

குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும் உணவுகள் ..!

மூளை வளர்ச்சிக்கு உதவும் உணவுகள் – தாய்ப்பால்:

பிறந்தவுடன் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய சீம்பாலை தாய்மார்கள் அவசியம் கொடுக்க வேண்டும். பொதுவாக பிறந்த குழந்தைகளுக்கு அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொட்டி கொடுக்கும் பொக்கிஷம் தாய் பால் மட்டுமே.

குழந்தை பிறந்த முதல் நாள் முதல் இரண்டு வயது வரை தாய்மார்கள் குழந்தைக்கு தாய் பால் கொடுப்பது மிகவும் நல்லது.

பால் மற்றும் யோகர்ட்:

குழந்தையின் மூளை வளர்ச்சி திறனை (foods for brain development) அதிகரிக்க பால் மற்றும் யோகர்ட் மிகவும் பயன்படுகின்றது.

குறிப்பாக இவற்றில் பி விட்டமின்கள் நிறைந்து உள்ளதால் மூளை திசுக்கள், நியூரோ ட்ரான்ஸ்மிட்டர், என்ஸைம் ஆகியவை சுரக்க, வேலை செய்ய உதவும்.

குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு பால் சிறந்தது. பால் குடிக்காத குழந்தைகளுக்கு யோகார்டில் பழங்கள் போட்டு கொடுக்கலாம்.

மூளை வளர்ச்சிக்கு உதவும் உணவுகள் – ஆப்பிள்:

குழந்தையின் மூளை வளர்ச்சி (foods for brain development) ஆப்பிள் பழத்தில் அதிகளவு ஆன்டிஆக்ஸிடன்ட் சத்துகள் நிறைந்து உள்ளது. குழந்தையின் மூளை வளர்ச்சி திறனை அதிகரிக்க ஆப்பிள் மிகவும் பயன்படுகின்றது.

இவை இனிப்பு சுவை கொண்ட பழங்கள் என்பதால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். லன்ச் பாக்ஸ், ஸ்நாக்ஸ் பாக்ஸில் இப்பழங்களை வைத்துக் கொடுக்கலாம்.

குழந்தைகளுக்கான தடுப்பூசி – முழுமையான விவரங்கள்..!

மூளை வளர்ச்சிக்கு உதவும் உணவுகள் – பீன்ஸ்:

குழந்தையின் மூளை வளர்ச்சி திறனை (foods for brain development) அதிகரிக்க பீன்ஸ் மிகவும் பயன்படுகின்றது. புரோட்டீன், மாவு சத்து, நார்ச்சத்து, தாதுக்கள், விட்டமின்கள் ஆகியவை உள்ளன.

உடலில் எனர்ஜி அளவு அதிகரிக்க உதவும்.  பீன்ஸில் சத்துகள் மிக மிக அதிகம். ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் நிறைந்துள்ளன. சுண்டல், கீரை, காய்கறி அவியல், வேக வைத்த சாலட் போன்றவற்றில் சேர்த்துக் குழந்தைகளுக்கு தரலாம்.

மூளை வளர்ச்சிக்கு உதவும் உணவுகள் – நட்ஸ் மற்றும் விதைகள்:

குழந்தையின் மூளை வளர்ச்சி திறனை (foods for brain development) அதிகரிக்க நட்ஸ் மிகவும் சிறந்த ஒன்று. வால்நட், பாதாம், ஃப்ளாக்ஸ் விதைகள், சூரிய காந்தி விதைகள் போன்ற பல்வேறு விதை மற்றும் நட்ஸை அவசியம் குழந்தைகளின் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக்கும். விட்டமின் இ, ஆன்டிஆக்ஸிடன்ட், தியாமின், குளுக்கோஸ் ஆகிய சத்துகள் உள்ளன. இதை ஸ்நாக்ஸாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம். ஜூஸ், ஸ்மூத்தி, இனிப்பு பண்டங்களில் சேர்த்துக் கொடுக்கலாம்.

ஆண், பெண் குழந்தை பெயர்கள் மற்றும் வைக்கும் முறை..!
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன்