குழந்தைகளுக்கான ஹோம்மேட் செர்லாக் தயாரிப்பது எப்படி?

சத்துமாவு செய்முறை

ஹோமேட் செர்லாக் (Homemade cerelac) பவுடர் – குழந்தை சத்துமாவு செய்முறை

குழந்தை பிறந்து ஆறு மாதங்கள் முடிந்து விட்டதா… குழந்தைகளுக்கு திட உணவுகள் கொடுக்க தயாராகிவிட்டிர்களா அப்படி என்றால் உங்கள் வீட்டில் உங்கள் கைகளால் செய்ய கூடிய ஹோமேட் செர்லாக் பவுடரை உங்கள் குழந்தைகளுக்கு நீங்களே செய்து கொடுக்கலாமே.

குழந்தைகளுக்கு வீட்டிலேயே செர்லாக் பவுடரை தயாரித்தால் சுகாதாரமாக இருக்கும். குழந்தைகளுக்கு தரமான உணவைக் கொடுத்த திருப்தியும் உங்களுக்கு கிடைக்கும். குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் பெற்று ஆரோக்கியமாக வளருவர்.

இதையும் படிக்கவும்  6+மாத குழந்தை உணவு பட்டியல் சிலவற்றை காண்போம் வாங்க..!

சரி வாங்க ஹோமேட் செர்லாக் (Homemade cerelac) பவுடரை எப்படி செய்யலாம் என்று இந்த பகுதில் நாம் காண்போம் வாங்க..!

ஹோமேட் செர்லாக் (Homemade cerelac) பவுடர் – சத்து மாவு செய்முறை..!

தேவையான பொருட்கள்:

  1. அரிசி – 50 கிராம்
  2. துவரம் பருப்பு – 10 கிராம்
  3. பச்சைப் பயறு – 10 கிராம்
  4. பாசி பருப்பு – 10 கிராம்
  5. உலர்ந்த பட்டாணி – 10 கிராம்
  6. கொண்டைக்கடலை – 10 கிராம்
  7. சீரகம் – 1 டீஸ்பூன்

ஹோமேட் செர்லாக் பவுடர் – சத்துமாவு செய்முறை..!

குழந்தை சத்துமாவு செய்முறை ஸ்டேப் :1

கொண்டைக்கடலை மற்றும் சீரகத்தை தவிர, மற்ற அனைத்தையும் தனி தனியாக நன்றாக கழுவி தூசி, கல் ஆகியவற்றை நீக்கி கொள்ள வேண்டும்.

பின்பு நன்றாக தண்ணீரை வடித்துக் கொள்ளுங்கள்.

குழந்தை சத்துமாவு செய்முறை ஸ்டேப் :2

பிறகு சுத்தமான வெள்ளைத் துண்டில் இவற்றைப் பரப்பி தனி தனியாக மேற்சொன்ன பொருட்களைக் காய வைக்கவும்.
கழுவியவற்றை நன்றாக 3-4 நாட்களுக்கு வெயிலில் உலர வைக்க வேண்டும்.

குழந்தை சத்துமாவு செய்முறை ஸ்டேப் :3

நன்றாக வெயிலில் உலர்த்தப்பட்ட பொருட்களை ஒவ்வொரு பொருளாக அரிசி, துவரம் பருப்பு என அனைத்தையும் எடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றாமல் அப்படியே வறுத்துக் கொள்ளுங்கள்.

அதிக தீய விடாமல் மிதமான சூட்டில் வறுக்க வேண்டும். அருகிலே நின்று கவனமாக வறுக்கவும்.

குழந்தை சத்துமாவு செய்முறை ஸ்டேப் :4

அரிசியை வறுக்கும்போது அவை லேசாக நிறம் மாறும் வரை வறுக்க வேண்டும். பருப்புகளை வறுக்கும்போது, லேசாக பொன்னிறமாக வரும் வரை வறுக்கவும்.

இப்போது கொண்டைக்கடலை, சீரகம் ஆகியவற்றை வறுத்துக் கொள்ளுங்கள். இதன் பிறகு, அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக சேர்த்து 2-3 நிமிடங்கள் வறுக்கவும்.

குழந்தை சத்துமாவு செய்முறை ஸ்டேப் :5

வறுத்த அனைத்துப் பொருட்களையும் மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

காற்று புகாத, உலர்ந்த டப்பாவில் பாதுகாப்பான முறையில் போட்டு சேமித்து வைக்கலாம்.

குறிப்பு:

பொருட்களை வறுக்கும்போது தனித்தனியாக வறுக்க வேண்டும்.

வெயிலில் காயவைத்த பொருட்களை மறுபடியும் ஒருமுறை கற்கள் இருக்கின்றதா என்று ஒரு முறை பரிசோதித்து பார்க்கவும்.

அதேபோல் பொருட்களை வறுக்கும் போது, மிதமான சூட்டில் வறுக்க வேண்டும்.

உங்கள் குழந்தைக்கு தேவையான ஹோம்மேட் செர்லாக் பொடியை எடுத்துக்கொண்டு, தேவையான வெந்நீர் கலந்து இளஞ்சூடாக இருக்கும்போது குழந்தைக்கு ஊட்டலாம்.
பயணத்துக்கு செல்லும்போது பயன்படுத்தலாம்.

சத்துமாவு பயன்கள்:

குழந்தைகளுக்கு இந்த ஹோமேட் சத்துமாவினை கொடுக்கும் போது, தேவையான மாவுச்சத்து மற்றும் புரதச்சத்து கிடைக்கும்.

குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான சத்துகள் இதில் கிடைக்கும்.
இந்த ஹோமேட் செர்லாக் குழந்தை சாப்பிட்ட உடன், எனர்ஜி கிடைக்கும்.

குழந்தைகளின் உடல் எடை அதிகரிக்க உதவும்.

இதையும் படிக்கவும்  குழந்தைக்கு காலை வெறும் வயிற்றில் கொடுக்க வேண்டிய பானங்கள் !!!
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com