கருவில் வளரும் குழந்தை ஆணா பெண்ணா தெரிஞ்சுக்க சூப்பர் வழிகள்

கருவிலிருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என தெரிந்து கொள்ள சில அறிகுறிகள்?

Kulanthai Aana Penna in Tamil: வணக்கம்.. பொதுவாக கர்ப்பகாலத்தில் அனைத்து பெண்ணிற்கும் தோன்றும் ஒரு விஷயம் என்னவென்றால்.. வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று அடிக்கடி ஒரு எண்ணம் அவர்களுக்கு அவ்வப்போது தோன்றிக் கொண்டே இருக்கும். பிறக்கும் குழந்தை ஆண் குழந்தையாக இருந்தால் என்ன? இல்லை பெண் குழந்தையாக இருந்தால் என்ன? பிறக்க இருக்கும் குழந்தை நினைத்து வயிற்றில் சுமக்கும் தாய் முதல் வீட்டில் உள்ள அனைவருமே மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஆனால் பிறக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்கிற பேரார்வம் மட்டும் அவர்களுக்கு இருக்கும். மருத்துவர்கள் குழந்தை பிறக்கும் வரை வயிற்றில் வளரும் குழந்தை ஆணா பெண்ணா என்கின்ற விஷயத்தை மட்டும் சொல்ல மாட்டார்கள். இருந்தாலும் அந்த காலம் முதல் இந்த காலம் வரை சில நம்பிக்கை இருந்து வருகிறது. ஆதாவது கர்ப்பகாலத்தில் கர்ப்பிணிகளுக்கு தோன்றும் சில அறிகுறிகளை வைத்து கருவில் வளரும் குழந்தை ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா? என்று நம்மால் தெரிந்து கொள்ள முடியும். அந்த அறிகுறிகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

பிறக்கப்போவது ஆணா? பெண்ணா? | Karuvil Ulla Kulanthai Aana Penna in Tamil

Kulanthai Aana Penna in Tamil

வயிற்றின் அளவு:

பொதுவாக அந்த காலம் முதல் இந்த காலம் வரை கர்ப்பிணி பெண்ணின் வயிற்றின் அளவை வைத்து அவர்களுக்கு பிறக்க இருக்கும் குழந்தை ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்பதை தெரிந்து கொள்ள முடியும். கர்ப்பிணி பெண்ணின் வயிறு கொஞ்சம் பெரிதாக இருந்தால் பிறக்க இருக்கும் குழந்தை ஆண் குழந்தையாக இருக்க வாய்ப்புள்ளது. அதே சமயம் வயிறு சற்று சிறியதாக இருக்கும் பட்சத்தில் பிறக்கப்போவது பெண் குழந்தை என்று நம்பப்படுகிறது.

சரும அழகு:

பொதுவாக நிறைய பெண்களுக்கு முகத்தில் பருக்கள் வருவது என்பது எப்போதும் உண்டு. ஆனால் கருத்தரித்த பிறகு முகப்பருக்கள் வந்தால் அது பெண் குழந்தையாக இருக்க வாய்ப்புள்ளது, பருக்கள் இல்லாமல் பளிச் முகமாக இருந்தால் அது ஆண் குழந்தைக்கான அறிகுறி என்றும் நம்பப்படுகிறது.

கூந்தல்:

கருவில் வளரும் குழந்தை ஆணா பெண்ணா தெரிஞ்சுக்க கர்ப்பிணி பெண்ணின் கூந்தலை வைத்து கூட நம்மால் தெரிந்து கொள்ள முடியும். வயிற்றில் பெண் குழந்தையாக இருந்தால் முடியின் வளர்ச்சி பாதிக்கப்படும் அதாவது முடி உதிர்வு பிரச்சனை அதிகமாக இருக்கும். ஆனால் ஆண் குழந்தையாக இருந்தால் முடி வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும். அந்த சமயங்களில் பெண்களுக்கு கூந்தல் அதிகளவு வளர்ச்சியடையும்.

இரட்டை குழந்தை பிறக்க வேண்டுமா? அப்போ இதை டிரை பண்ணுங்க !!!

இதய துடிப்பு:

குறிப்பாக குழந்தை கருவில் இருக்கும் போது ஆண் குழந்தையின் இதயத்துடிப்பு மற்றும் பெண் குழந்தையின் இதயத்துடிப்பு மாறுபடும். ஆகவே நீங்கள் மருத்துவரிடம் செல்லும்போது இந்த இதய துடிப்பின் அளவை கவனித்து கொள்ளுங்கள். அதாவது குழந்தையின் இதய துடிப்பானது 140-க்கு அதிகமாக இருந்தால் பெண் குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளது. அதேசமயம் இதயத் துடிப்பானது 140-க்கு கீழே இருக்கும் பட்சத்தில் ஆண் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது. குழந்தை ஆணா பெண்ணா கண்டுபிடிக்க இந்த டிப்ஸ் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மார்பகத்தின் அளவு

கர்ப்பிணி பெண்ணின் மார்பகத்தின் அளவை கொண்டும் கருவில் வளர்வது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்று தெரிந்து கொள்ளலாம். கர்ப்பிணி பெண்ணின் வலது மார்பகம் இடது மார்பகத்தை விட பெரியதாக இருந்தால் பிறக்க இருப்பது ஆண் குழந்தையாக இருக்கலாம். இதுவும் ஒருவிதமான நம்பிக்கை மட்டுமே தவிர மற்றபடி உறுதியாக சொல்லிவிட முடியாது.

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>குழந்தை நலன்