குழந்தையின் காது மற்றும் நாக்கை எப்படி சுத்தம் செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்:
குழந்தை பராமரிப்பு முறை என்பது மிகவும் அவசியமான ஒன்று. அந்தவகையில் குழந்தைகளின் ஒவ்வொரு உறுப்புகளையும் சுத்தம் செய்வது மிகவும் அவசியம். ஆனால் அனைத்து உறுப்புகளையும் சாதாரணமாக சுத்தம் செய்ய முடியாது. குழந்தையின் சில உறுப்புகளை சுத்தம் செய்யும்போது மிகவும் கவனமாக இருப்பது மிகவும் அவசியம். அந்த வகையில் குழந்தையின் நாக்கு (Baby Tongue Cleaning) மற்றும் காதுகளை எவ்வாறு சுத்தம் செய்வது என்பதை பற்றி இப்போது இந்த பகுதியில் நாம் காண்போம்.
குழந்தையின் நாக்கை சுத்தம் (Baby Tongue Cleaning) செய்வது எப்படி (Baby Care)?
பொதுவாகப் பற்கள், ஈறுகளை சுத்தம் செய்ய கவனம் செலுத்துவோமே தவிர நாக்கை விட்டு விடுவோம். தாய்ப்பால், புட்டி பால் குடிக்கும் குழந்தைகளின் நாக்கில் வெள்ளையாக மாவுப் போல படியும். அவற்றை சுத்தம் (Baby Tongue Cleaning) செய்ய எளிமையான டிப்ஸ் இதோ..!
சரி இப்போது குழந்தையின் நாக்கை எப்படி சுத்தம் செய்வது என்பதை பற்றி இப்போது நாம் காண்போம்.
குழந்தையின் நாக்கை சுத்தம் (Baby Tongue Cleaning) செய்ய (Baby Care) டிப்ஸ்:
டிப்ஸ் 1:
சுத்தமான, சாப்டான துண்டை எடுத்து கொள்ளவும், அவற்றை மிதமான சூட்டில் தண்ணீரில் நனைத்து கொள்ளவும், பின்பு அந்த துண்டை உங்கள் கை விரலில் சுற்றி கொண்டு, குழந்தையின் நாக்கை சுத்தம் செய்யவும், குறிப்பாக தண்ணீர் சூடாக இருக்க கூடாது.
டிப்ஸ் 2:
எப்போதும் குழந்தையின் நாக்கை சுத்தம் (Baby Tongue Cleaning) செய்ய எளிமையான வழி, குழந்தையின் கீழ் உதடை கீழ் நோக்கி ஹோல்ட் செய்த பின் நாக்கை சுத்தப்படுத்துங்கள்.
டிப்ஸ் 3:
சில குழந்தைகளுக்கு நாக்கில் (Baby Tongue Cleaning) மாவு போல மிக அழுத்தமாக ஒட்டி இருக்கும். அதை எடுக்க, இளஞ்சூடான நீரில் சிறிதளவு கல்லுப்பு போட்டு கரைத்துக் கொள்ளுங்கள். இந்தத் தண்ணீரில் துண்டை நனைத்து குழந்தையின் நாக்கை சுத்தம் (Baby Tongue Cleaning) செய்யலாம். அழுத்தமான மாவு போல ஒட்டியிருப்பதும் நீங்கும்.
டிப்ஸ் 4:
கவனம். குழந்தையின் நாக்கு (Baby Tongue Cleaning) மிகவும் மென்மையானது என்பதால் மிதமான அழுத்தம் கொடுத்து சுத்தம் செய்யுங்கள்.
டிப்ஸ் 5:
பால், உணவு சாப்பிட்ட பிறகு குழந்தையின் கன்னம், வாய், பற்கள், ஈறுகள், நாக்கு ஆகியவை சுத்தம் செய்யலாம்.
பிறந்த குழந்தையின் கண்களை கவனிப்பது அவசியம்!
குழந்தையின் காதை (baby ears cleaning) சுத்தம் செய்வது எப்படி?
குழந்தையின் காது (baby ears cleaning) மிகவும் சென்சிடிவ்வான உறுப்பு. காது வலி வந்தால்தான் தெரியும். அந்த வலி மிகவும் கொடுமையானது என்று. காதைத் தடவி தடவி குழந்தை அழுதால், காதில் என்ன பிரச்னை எனக் கண்டிப்பாக கவனிக்க வேண்டும். மருத்துவரிடம் அழைத்துச் செல்வது மிக முக்கியம்.
சரி இப்போது குழந்தையின் காதை (baby ears cleaning) எப்படி சுத்தம் செய்வது என்று சில குறிப்புகளை பார்ப்போம்.
குழந்தையின் காதை (baby ears cleaning) சுத்தம் செய்ய எளிதான (Baby Care) டிப்ஸ்:
டிப்ஸ் 1:
குழந்தைகளுக்கு காதை (baby ears cleaning) சுத்தம் செய்கின்ற பெயரில் பட்ஸ், ஹேர் பின், கொண்டை பின் போன்றவற்றை கொண்டு சுத்தம் செய்ய கூடாது. அதே போல் கூர்மையான பொருட்களை கொண்டும் குழந்தையின் காதை சுத்தம் செய்ய கூடாது.
டிப்ஸ் 2:
குழந்தையின் காதை (baby ears cleaning) சுத்தம் செய்ய வேண்டும் என்றால், ஒரு துண்டு (டவல்) எடுத்து கொள்ளவும் அவற்றின் ஓரத்தை மெலிதாக சுருட்டி குழந்தையின் காதில் விட்டு ஈரத்தை எடுக்கலாம், இந்த முறையை குழந்தை குளித்த பிறகு செய்ய வேண்டிய முறையாகும்.
டிப்ஸ் 3:
குழந்தையின் காது அழுக்காக இருந்தால், ஈரம் லேசாக இருக்கும் துணியை எடுத்துக்கொண்டு, அந்த துணியை கொண்டு குழந்தையின் காதை லேசாகத் தொட்டு துடைத்து எடுக்கவும்.
டிப்ஸ் 4:
அதேபோல் காதுகளில் உள்ள மடலையும், வெளி சதையும் மென்மையான ஈரத்துணியை கொண்டு துடைத்து எடுக்க வேண்டும்.
டிப்ஸ் 5:
குழந்தையை ஒவ்வொரு முறையும் குளிப்பாட்டிய பிறகு குழந்தையின் காதை ஒரு துண்டை கொண்டு மென்மையாக ஈரத்தை துடைத்து எடுக்க வேண்டும்.
டிப்ஸ் 6:
குழந்தையின் காதில் ஏதோ அசௌகரியமான உணர்வு உணர்ந்தாலோ, காதில் வலி இருப்பது போல அழுதாலோ மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்.
டிப்ஸ் 7:
குழந்தையின் காதில் சுத்தம் செய்யும்போது, குழந்தை கதகதப்பான உணர்வை உணர வேண்டும். ஆதலால், அடர்த்தியான, துணியால் குழந்தையை போர்த்திக்கொள்ளுங்கள்.
டிப்ஸ் 8:
சில குழந்தையின் காதில் இயல்பாகவே அதிகமாக வாக்ஸ் உருவாகும். அவர்களை கட்டாயமாக காது மருத்துவரிடம் கொண்டு சென்று காண்பிக்கவும்.
குழந்தைகளின் சருமத்தை ஆரோக்கியமாகவும், மிருதுவாகவும் பாதுகாக்க டிப்ஸ்..!
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | குழந்தை நலன் |