வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

பிறந்த குழந்தையின் கண்களை கவனிப்பது அவசியம்!

Updated On: December 17, 2021 12:11 PM
Follow Us:
குழந்தை பராமரிப்பு குறிப்புகள்
---Advertisement---
Advertisement

பிரசவித்த உடன் குழந்தையின் கண்களை கவனிப்பது அவசியம்

குழந்தை நம் வீட்டின் வரம், எனவே அந்த வரத்தை நாம் மிகவும் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். தற்போது பெரும்பாலான கர்ப்பிணி பெண்கள் கர்ப்பகாலத்தில் ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்ளாததால், பிறக்கும் குழந்தைக்கு எளிதாக கண்கள் சம்மந்தமான பிரச்சனைகள் ஏற்படுகிறது, அந்த பிரச்சனையை ஆரம்பத்தில் கவனிக்க வேண்டும், இல்லை என்றால் குழந்தை கண்பார்வை இழக்க கூட நேரிடும்.

பெண்களுக்கு ஆரோக்கியம் மிக அவசியம். ஆரோக்கியமான பெண்களால்தான், கண்பாதிப்பற்ற குழந்தைகளை பெற்றெடுக்க முடியும். ரத்த சொந்தம் கொண்டவர்களை திருமணம் செய்தாலும், 16, 17 வயதிலே (பெண்கள்) திருமணம் செய்துகொண்டாலும் குறைமாத குழந்தைகள் பிறக்கும் சூழ்நிலை அதிகமாகிவிடும். அதுவே கண்பாதிப்புகளுக்கும் காரணமாகிவிடக்கூடும்.

பெண்கள் பொதுவாக 21 வயதுக்கு மேல் திருமணம் செய்துக்கொள்ள வேண்டும், 28 வயதுக்குள் பிரசவித்துவிட வேண்டும். மேலும் கர்ப்பகாலத்தில் ஆரோக்கியமான உணவு முறைகளை எடுத்து கொள்ளவேண்டும். இந்த முறைகளை பின் பற்றினால் குழந்தைக்கு கண்பார்வை பிரச்சனை ஏற்படாது.

பிறந்த குழந்தையின் வளர்ச்சிப் படிநிலைகள்..! முழு வளர்ச்சி அட்டவணை இதோ 

சரி பிறந்த குழந்தையின் கண்களை கவனிப்பதன் அவசியத்தை பற்றி நாம் இங்கு காண்போம்.

கருவில் இருக்கும் குழந்தையின் சில குறைப்பாடுகளை, தாய் கருவுற்ற 32 -வாரத்தில் கண்டறிய முடியும், ஆனால் வயிற்றுக்குள் இருக்கும் போது எந்த ஒரு சிகிச்சையும் அளிக்க வாய்ப்பில்லை.

பிறந்த ஒரு வருடத்திற்குள் குறைகளை கண்டறிந்தால் அதனை விரைவில் குணப்படுத்தி விடலாம்.

குழந்தையின் பார்வைக்கு (Baby Eyes):

குழந்தை பராமரிப்பு குறிப்புகள் : பிறந்தவுடன், வண்ணமயமான விளையாட்டு பொருளை குழந்தையின் பார்வையில்படும்படி கட்டி தொங்கவிடுங்கள். அதன் மூலம் குழந்தையின் கண் இயக்கத்தை தாயால் கண்டறிய முடியும்.

விளையாட்டு பொருளின் அசைவுக்கு தக்கபடி குழந்தையின் பார்வை திரும்புகிறதா? கவனம் அதில் பதிகிறதா? என்றெல்லாம் பார்க்கலாம்.

பிறந்த இரண்டு வாரத்தில் (Baby Eyes):

குழந்தை பராமரிப்பு குறிப்புகள் : பிறந்த இரண்டு வாரத்தில் அடர்ந்த நிறத்திலான ஒரு பொருளை குழந்தையின் முன்னால் காட்டினால், அதன் கவனம் அதை நோக்கி ஒரு நிமிடமாவது திரும்ப வேண்டும்.

மூன்று வாரத்தில் (Baby Eyes):

குழந்தை பராமரிப்பு குறிப்புகள் : மூன்றாவது வாரத்தில் வெளிச்சத்தை எதிர் கொள்ள குழந்தையின் கண்கள் தயாராகிவிடும்.

ஒரு மாதத்தில் (Baby Eyes):

குழந்தை பராமரிப்பு குறிப்புகள் : ஒரு மாதத்தில் அம்மாவின் முகத்தை அடையாளங்கண்டு அம்மாவின் முகம் தென்படும்போதெல்லாம் சிரிக்கத் தொடங்கும்.

குழந்தை ஏன் அழுகிறது என்று தெரியுமா?

நான்காவது மாதத்தில் (Baby Eyes):

குழந்தை பராமரிப்பு குறிப்புகள் : குழந்தை பிறந்த நான்கு மாதம் ஆகிவிட்டால் தனக்கு எது பிடிக்கிறதோ அதில் குழந்தை முழு பார்வையையும் செலுத்தி கவனிக்கும்.

ஆறு மாதத்தில் (Baby Eyes):

குழந்தை பராமரிப்பு குறிப்புகள் : குழந்தை பிறந்து ஆறு மாதங்கள் ஆன பின்பு கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடுங்கள்.

மறைந்திருந்துவிட்டு திடீரென்று தோன்றி குழந்தையை சிரிக்கவைக்கும் இந்த விளையாட்டு மூலம் குழந்தை, குறிப்பிட்ட பொருளுக்கு அப்பால் இருந்து தோன்றுவதையும் பார்க்கத் தொடங்கும்.

ஒன்பதாவது மாதத்தில் (Baby Eyes):

குழந்தை பராமரிப்பு குறிப்புகள் : 9 மாதம் வரை தாய் மீது மட்டுமே பதியும் அதன் பார்வை, அதன் பின்பு தன்னை அடிக்கடி சந்திக்கும் மற்றவர்கள் மீதும் பதியும்.

மாறுகண், புரை ஆகியவை இருந்தால் தொடக்கத்திலே கண்டறிந்தால், இதை ஆபரேஷன் மூலம் சரிசெய்திடலாம்.

குழந்தைகளுக்கு வயிற்று வலி நீங்க..!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.

Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now