குழந்தைகள் விரல் சூப்புவதை தடுக்க 6 சிறந்த வழிகள் (Six tips to stop thumb sucking in tamil)..!
குழந்தைகள் என்ன செய்தாலும் அது அழகுதான். சில குழந்தைகள் சில நாட்களில் விரல் சூப்புவதை மறந்துவிடுவார்கள். ஆனால் சில குழந்தைகள் வளர்ந்த பிறகு இந்த விரல் சூப்பும் பழக்கத்தை தொடர்ந்துக்கிட்டே இருப்பார்கள்.
அதுக்காக குழந்தைகள் விரல் சூப்புவது அப்படியே விட்டுவிட முடியாது. இந்த பழக்கத்தை நிறுத்த இங்கு அருமையான 6 (Six tips to stop thumb sucking in tamil) வழிகள் உள்ளது. அதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.
7 மாத குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம் ..! |
குழந்தைகள் விரல் சூப்புவதை தடுக்க அருமையான 6 வழிகள் (Six tips to stop thumb sucking in tamil):-
ஸ்டேப்: 1
முதலில் விரல் சூப்பும் குழந்தைகளை கடுமையாக நடத்த கூடாது. வலுக்கட்டாயமாக அவர்களது வாயில் இருந்து விரல்களை எடுத்து விடக்கூடாது.
அவர்களிடம் அன்பாகப் பேசி இந்த பழக்கம் எத்தனை தீங்குகளை விளைவிக்கும் என்பதை புரிய வைக்க வேண்டும்.
ஸ்டேப்: 2
அடுத்ததாக குழந்தைகள் எப்போதெல்லாம் அதிகமாக வாயில் கை வைக்கிறார்கள் என்பதை கவனித்து அந்த நேரத்தில் குழந்தைக்கு வரைவது அல்லது எழுதுவது இப்படி, எதில் ஆர்வம் அதிகமாக இருக்கிறதோ, அதை கண்டறிந்து, அது தொடர்பான வேலைகளைச் செய்ய பழக்க வேண்டும்.
குழந்தைக்கு மூக்கடைப்பு நீங்க பாட்டி வைத்தியம்..! |
ஸ்டேப்: 3
சிறு குழந்தைகளுக்கு கைகளில் க்ளவுஸ் மாட்டி விடலாம். வெளியிடங்களில் அல்லாமல் வீட்டில் இருக்கும் போதும் விரலை தொடர்ந்து துணி அல்லது க்ளவுஸ் மாட்டிவிடுங்கள்.
ஸ்டேப்: 4
அவர்களுக்கு பிடித்த விஷயங்களைச் செய்யும்போது, அதில் கவனம் செலுத்துவதால் விரல் சூப்புவதை அவர்களாகவே விரைவில் மறந்து விடுவார்கள்.
ஸ்டேப்: 5
இரண்டு வயது வரைக்கும் குழந்தைகளை உங்கள் அருகாமையிலேயே வைத்துக் கொள்ளுங்கள். அவர்களேடு நிறைய நேரம் செலவழியுங்கள்.
பெற்றோரின் அன்பும் அரவணைப்பும் தங்களுக்கு தனிமை தொடர்பான பிரச்சனைகள் அவர்களுக்கு வராது. அதனால் விரல் சூப்பும் பழக்கத்திற்கு அடிமை ஆவது தவிர்க்கப்படும்.
குழந்தை விரல் சப்புவதை நிறுத்த ஸ்டேப்: 6
குழந்தைகளோட மனரீதியான பிரச்சனைகளும், விரல் சூப்புவதற்கான காரணமாக இருக்கும். அதாவது ஏமாற்றம், பயம், பதற்றம், தனிமை, கவலை இந்த மாதிரி மனரீதியாக ஏற்படும் பாதிப்புகள் குழந்தைகளை விரல் சூப்பதூண்டும்.
வளர்கிற வயதில் குழந்தைகளுக்கு பெற்றோர்களுடைய அன்பும், அரவணைப்பும் தேவை.
குழந்தைக்கு வரட்டு இருமல் குணமாக 8 கைவைத்தியம்..! |
குறிப்பு:-
மேலும் விரல் சூப்பும் குழந்தைகளிடம் அந்தப் பழக்கத்தை மாற்றுவதற்காக, அந்த விரல்களில் சூடு போடுவது, குழந்தைகளை அடிப்பது போன்ற தவறான செயல்களில் ஈடுபடுவதை விட ஹோமியோபதி மருத்துவரிடம் காண்பித்து ஹோமியோ மற்றும் மலர் மருத்துவ சிகிச்சை செய்வதே சிறந்தது.
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Baby health tips in tamil |