இட்லி பொடிய இப்படி செஞ்சி பாருங்க..! ரெண்டு இட்லி கூட சாப்பிடுவீங்க..!

Idli Podi Seivathu Eppadi

சுவையான இட்லி பொடி செய்வது எப்படி? | Idli Podi Seivathu Eppadi

வீட்டில் என்னதான் பல சைடிஷ் செய்து வைத்தாலும் இட்லி பொடிக்கு இணையாக எந்த சைடிஷும் இருக்க முடியாது. சிறிய குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய சைடிஷ் என்னவென்றால் அது இட்லி பொடிதாங்க.. இட்லி, தோசை பிடிக்காதவர்கள் கூட இந்த இட்லி பொடியை சைடிஷாக வைத்தால் இரண்டு இட்லி அதிகமாக சாப்பிடுவார்கள் அப்படினா பாத்துக்கோங்களேன். எந்த அளவிற்கு இதன் மகிமை இருக்கிறது என்று. ஒரு சிலர் அதிக காரமாக இட்லி பொடியை அரைத்து விடுவார்கள், ஒரு சிலர் காரமே இல்லாமல் அரைத்து விடுவார்கள். வெளியில் அவசரமாக செல்லும் போது நம்மளால் காலை உணவிற்கு சைடிஷ் செய்வதற்கு நேரம் இருக்காது. பெரும்பாலும் அந்த நேரத்தில் சைடிஷில் முதலிடத்தில் இருப்பது இட்லி பொடி. அனைவரும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு செம டேஸ்டியான அளவிற்கு இட்லி பொடியை நாம் ஈஸியா வீட்டிலே எப்படி அரைக்கலாம் என்று இந்த பதிவில் தெரிஞ்சிக்கலாம் வாங்க..

பாட்டியின் ஸ்பெஷல் குழம்பு பொடி செய்முறை

இட்லி பொடி செய்வதற்கு – தேவையான பொருள்:

  • காய்ந்த மிளகாய் – 50 கிராம் (காம்பு கிள்ளியது)
  • கருவேப்பிலை – சிறிதளவு
  • கடலை பருப்பு – 100 கிராம்
  • உளுத்தம்பருப்பு – 150 கிராம்
  • மிளகு – 1 ஸ்பூன்
  • வெள்ளை எள் – 50 கிராம்
  • பூண்டு பல் – 10 (தோல் உரிக்காதது)
  • பெருங்காயத்தூள் – 1 ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு

சுவையான இட்லி பொடி செய்முறை விளக்கம்:

ஸ்டேப்: 1

 இட்லி பொடி செய்வது எப்படி

இட்லி பொடி செய்வதற்கு முதலில் அடுப்பை ஆன் செய்து ஒரு கடாயை வைக்கவும். கடாய் நன்றாக ஹீட் ஆனதும் அதில் எண்ணெய் சேர்க்காமல் காம்பு கிள்ளிவைத்த மிளகாயினை சேர்த்து மிதமான சூட்டில் வறுத்துக்கொள்ளவும்.

ஸ்டேப்: 2

அதன் பிறகு 1 கப் அளவிற்கு கருவேப்பிலையை சேர்த்து மிளகாயுடன் பொன்னிறத்திற்கு வறுத்து ஆற வைத்து அதை தனியாக எடுத்துவைக்கவும்.

சாட் மசாலா பொடி செய்வது எப்படி?

 

ஸ்டேப்: 3

 சுவையான இட்லி பொடி செய்வது எப்படி

இப்போது கடாயில் 100 கிராம் அளவிற்கு கடலை பருப்பினை 2 நிமிடம் வறுத்துக்கொள்ளவும். இதனுடன் உளுத்தம்பருப்பு 150 கிராம் சேர்த்து வறுக்கவும்.

ஸ்டேப்: 4

 suvaiyana idli podi seivathu eppadi

அடுத்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து 1 ஸ்பூன் மிளகு, வெள்ளை எள் 50 கிராம் சேர்த்து பொன்னிறம் வரும் வரை நன்றாக வறுக்கவும்.

ஸ்டேப்: 5

 idli podi seivathu eppadi

 

 

அடுத்து தோல் உரிக்காத 10 பல் பூண்டினை சேர்த்து ஒருமுறை வதக்கிக்கொள்ளவும். மிதமான அளவிற்கு பொன்னிறத்திற்கு வறுக்க வேண்டும்.

ஸ்டேப்: 6

நன்றாக வதக்கிய பிறகு பெருங்காயத்தூள் 1 ஸ்பூன் சேர்த்துவிட்டு வதக்கிவிடவும். இப்போது அடுப்பினை அணைத்துவிட்டு சிறிது நேரம் ஆறவைக்கவும்.

ஸ்டேப்: 7

இட்லி பொடி

ஆற வைத்த பிறகு மிக்ஸி ஜாரில் வதக்கிய பருப்பினை சிறிது சேர்த்து வதக்கி தனியாக வைத்துள்ள காய்ந்த மிளகாவினையும் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

அரைத்த பிறகு இப்போதுதான் தேவையான அளவிற்கு உப்பு சேர்க்கவும். உப்பு சேர்த்த பிறகு நன்றாக பொடியினை அரைத்துக்கொள்ளவும். இட்லி தோசைக்கு ஏற்ற செம டேஸ்டியான இட்டலி பொடி ரெடியாகிட்டு..

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்!!!