ஆரோக்கியமான கஞ்சி வகைகள் | Types of Kanji in Tamil

Types of Kanji in Tamil

கஞ்சி வகைகள் | Types of Porridge in Tamil

எல்லோருமே உடம்பு சரி இல்லாத சமயத்தில் கஞ்சி வைத்து தான் குடிப்போம். ஆனால் இது காய்ச்சல் அல்லது வேறு ஏதேனும் தொற்றுக்கள் இருக்கும் போது மட்டும் பயன்படுத்த கூடிய பொருள் அல்ல நோய் பாதித்த பிறகு அதிலிருந்து மீட்க கூடிய ஊட்டச்சத்து பொருளும் கூட. கஞ்சியில் பல வகைகள் உள்ளது ஒவ்வொன்றுமே உடலுக்கு நன்மைகளை தரக்கூடியவை தான். நாம் இந்த தொகுப்பில் கஞ்சி வகைகள் மற்றும் சில செய்முறைகளையும் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

உங்கள் செல்ல குழந்தைகளுக்கான கஞ்சி உணவு செய்முறை

கஞ்சி வகைகள்:

Types of Porridge in Tamil
சாமை அரிசி கஞ்சி உளுந்தங்கஞ்சி 
வரகு பால் கஞ்சி  ரவா கஞ்சி 
அரிசி கஞ்சி  சத்துமாவு கஞ்சி 
தேங்காய்ப்பால் கஞ்சி  பூண்டு வெந்தய கஞ்சி 
வெள்ளை கஞ்சி  சிறு தானிய கஞ்சி 
பூண்டு தேங்காய்ப்பால் கஞ்சி  கீரை கஞ்சி
பச்சைப்பயிறு அரிசி கஞ்சி  சம்பா கோதுமை ரவா கஞ்சி
கொள்ளு கஞ்சி சுக்கு கஞ்சி
கருப்பு உளுந்து கஞ்சி
ஜவ்வரிசி கஞ்சி
பார்லி கஞ்சி கேழ்வரகு கஞ்சி

சத்தான கஞ்சி வகைகள்

பூண்டு தேங்காய் பால் கஞ்சி:

கஞ்சி வகைகள்

தேவையான பொருட்கள்:

 1. மாப்பிள்ளை சம்பா அரிசி – அரை கப்
 2. பூண்டு – 15
 3. வெந்தயம் – 1 டேபிள் ஸ்பூன்
 4. பாசிப்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
 5. உப்பு – தேவையான அளவு
 6. தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:

ஸ்டேப்: 1

அரை கப் மாப்பிள்ளை சம்பா அரிசி (மாப்பிள்ளை சம்பா அரிசி இல்லையெனில் வீட்டில் உள்ள எந்த அரிசியை வேணாலும் பயன்படுத்தி கொள்ளலாம்) எடுத்து அதனை சுத்தமாக கழுவி மிக்சியில் ஓரளவிற்கு (இரண்டும், மூன்றுமாக) அரைத்து கொள்ளவும். பின் இதை 15 நிமிடம் தண்ணீர் ஊற்றி ஊறவைத்து கொள்ளவும்.

ஸ்டேப்: 2

பின் குக்கரில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சூடாக்கவும், தண்ணீர் சூடான பிறகு ஊறவைத்த அரிசியை சேர்க்கவும். பின் அதில் தோல் உரித்த பூண்டு 15, வெந்தயம் 1 டேபிள் ஸ்பூன், பாசிப்பருப்பு 1 டேபிள் ஸ்பூன், உப்பு தேவையான அளவு சேர்த்து குக்கரை மூடி 8 விசில் வரும் வரை வேகவைக்கவும்.

ஸ்டேப்: 3

சாதம் வெந்தவுடன் பூண்டு முழுதாக இருந்தால் அதை மசித்து கொள்ளுங்கள், பின் அதில் ஒரு கப் தேங்காய் பால் சேர்க்கவும். இப்போது சுவையான பூண்டு தேங்காய்ப்பால் கஞ்சி தயார்.

பச்சைப்பயிறு அரிசி கஞ்சி:

Types of Porridge in Tamil

தேவையான பொருட்கள்:

 1. அரிசி – கால் கப்
 2. பச்சைப்பயறு – கால் கப்
 3. துருவிய தேங்காய் – தேவையான அளவு
 4. பூண்டு பல் – 4
 5. மிளகு தூள் – கால் டேபிள் ஸ்பூன்
 6. வெந்தயம் – அரை டேபிள் ஸ்பூன்
 7. துருவிய தேங்காய் – தேவையான அளவு
 8. சின்ன வெங்காயம் – 2
 9. சீரகம் – அரை டேபிள் ஸ்பூன்

செய்முறை:

ஸ்டேப்: 1

கால் கப் அரிசி மற்றும் கால் கப் பச்சைப்பயறு இரண்டையும் கழுவி 15 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து எடுத்து கொள்ளவும். பின் குக்கரில் 5 கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கி கொள்ளவும்.

ஸ்டேப்: 2

தண்ணீர் சூடான பிறகு ஊறவைத்த அரிசி மற்றும் பச்சைப்பயறு, தோல் உரித்த பூண்டு பல் 4, அரை டேபிள் ஸ்பூன் வெந்தயம், கால் டேபிள் ஸ்பூன் மிளகு தூள் சேர்த்து மிக்ஸ் பண்ணவும். குக்கரை மூடி 4-5 விசில் வரும் வரை வேகவைக்கவும்.

ஸ்டேப்: 3

பின் மிக்சியில் துருவிய தேங்காய் தேவையான அளவு, சின்ன வெங்காயம் 2, அரை டேபிள் ஸ்பூன் சீரகம் சேர்த்து அரைத்து கொள்ளவும் (தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்). சாதம் வெந்தவுடன் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதை சேர்த்து கிண்டவும்.

ஸ்டேப்: 4

பின் அதன் மேல் தேங்காயை சிறிதளவு துருவி போட்டு கிண்டி கொள்ளவும். சத்துள்ள பச்சைப்பயிறு அரிசி கஞ்சி தயார்.

சிறுதானிய கீரை கஞ்சி:

Types of Kanji in Tamil

தேவையான பொருட்கள்:

 1. சாமை – கால் கப்
 2. குதிரைவாலி – கால் கப்
 3. தினை – கால் கப்
 4. வரகு அரிசி – கால் கப்
 5. சின்ன வெங்காயம் – 15
 6. பூண்டு – 5
 7. தக்காளி – 1 (நறுக்கியது)
 8. மஞ்சள் தூள் – அரை டேபிள் ஸ்பூன்
 9. உப்பு – தேவையான அளவு
 10. முருங்கை கீரை – 2 கப்
 11. மிளகு – 1 டேபிள் ஸ்பூன்
 12. சிவப்பு மிளகாய் – 3
 13. சோம்பு – கால் டேபிள் ஸ்பூன்
 14. சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

ஸ்டேப்: 1

இந்த கஞ்சி செய்வதற்கு முதலில் ஒரு மசாலா தயார் செய்ய வேண்டும். அதற்கு மிக்சியில் 1 டேபிள் ஸ்பூன் மிளகு, 1 டேபிள் ஸ்பூன் சீரகம், சிவப்பு மிளகாய் 3, சோம்பு கால் டேபிள் ஸ்பூன் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

ஸ்டேப்: 2

பின்னர் கால் கப் குதிரைவாலி, கால் கப் சாமை, கால் கப் தினை, கால் கப் வரகு அரிசி, கால் கப் பாசிப்பருப்பு இவற்றை கழுவி 15 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து எடுத்து கொள்ளவும்.

ஸ்டேப்: 3

அதன் பிறகு குக்கரில் 4 கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கி கொள்ளவும். தண்ணீர் சூடான பிறகு ஊறவைத்த சிறு தானியங்களை சேர்க்கவும். பிறகு இதில் நசுக்கிய சின்ன வெங்காயம் 15, நசுக்கிய பூண்டு 5, நறுக்கிய தக்காளி 1, அரை டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு மற்றும் நாம் அரைத்து வைத்த மசாலா சேர்த்து குக்கரை மூடி 4-5 விசில் வரும் வரை வேகவைக்கவும்.

ஸ்டேப்: 4

சாதம் வெந்தவுடன் 3 கப் அளவு வெந்நீர், 2 கப் முருங்கை கீரை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைக்கவும். 10 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடலாம். உடல் எடையை குறைக்க நினைப்பவர்களும் இந்த கஞ்சியை சாப்பிடலாம்.

காலை பார்லி கஞ்சி குடிச்சி பாருங்க – உடலில் மாற்றம் உண்டாகும்..!

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal