குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த டோரா கேக் செய்வது எப்படி?

Advertisement

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த டோரா கேக் வீட்டில் எளிதாக எப்படி செய்வது என்று இந்த பகுதியில் நாம் காண்போம். இந்த வித்தியாசமான டோரா கேக் உங்கள் குழந்தைக்கு மிகவும் பிடித்ததாக இருக்கும். வாங்க இந்த டோரா கேக் ஈஸியா வீட்டில் எப்படி செய்ய வேண்டும் என்று இப்போது நாம் காண்போம்.

தேவையான பொருட்கள்:

  • முட்டை – இரண்டு
  • சர்க்கரை பவுடர் – 1/2 கப்
  • வெண்ணிலா எசன்ஸ் – சிறிதளவு
  • மைதா மாவு – ஒரு கப்
  • தேன் – ஒரு டேபிள் ஸ்பூன்
  • பேக்கிங் சோடா – 1/2 ஸ்பூன்
  • ஜாம் அல்லது சாக்லேட் ஸ்ப்ரெட் – தேவையான அளவு

செய்முறை:

ஒரு பவுல் எடுத்து கொள்ளவும், அவற்றில் இரண்டு முட்டையை ஊற்றி நன்றாக அடித்து கொள்ளவும்.

பின்பு அவற்றில் சர்க்கரை பவுடரை சேர்த்து, நன்றாக கலந்து கொள்ளவும்.

பிறகு அதனுடன் ஒரு கப் மைதா மாவை சேர்த்து கலந்து கொள்ளவும்.

மைதா மாவு சேர்க்கும் போது இந்த கலவையானது கொஞ்சம் கெட்டியாக இருக்கும், எனவே 1/2 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

பின்பு இவற்றில் ஒரு ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ், ஒரு டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1/2 ஸ்பூன் பேக்கிங் சோடா ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

இந்த கலவையானது தோசை மாவு பதத்திற்கு இருக்க வேண்டும்.

பிறகு இந்த கலவையை 20 நிமிடம் வரை நன்றாக ஊற வைத்து கொள்ளவும்.

இப்போது கேக் எப்படி செய்வது என்று பார்ப்போம்:-

ஒரு நான்ஸ்ட்டிக் டவாவை எடுத்து கொள்ளவும், நெய் அல்லது எண்ணெயை ஊற்றி நன்கு தடவி விடவும்.

பின்பு அவற்றில் இந்த கலவையை ஊற்ற வேண்டும்.

குறிப்பாக இந்த மாவை தோசை மாவுபோல் சுத்திவிட கூடாது, ஒரு கரண்டி ஊற்றி விட்டு டவாவை மூடி விடவும்.

பின்பு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, 5 நிமிடம் கழித்து இந்த கேக்கை திருப்பி போடவும்.

கேக் வெந்தவுடன் அடுப்பில் இருந்து எடுத்து விடவும்.

பின்பு இந்த கேக்கில் சாக்லேட் ஸ்ப்ரெட் அல்லது ஜாம் தடவி அதன் மேல் இன்னொரு கேக் வைத்து, உங்கள் குழந்தைக்கு பரிமாறவும்.

அவ்வளவு தான் உங்கள் குழந்தைக்கு மிகவும் பிடித்த சுவையான டோரா கேக் தயார்.

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.

Advertisement