வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சிக்கன் கோலா உருண்டை குழம்பு செய்வது எப்படி?

Updated On: June 18, 2022 1:04 PM
Follow Us:
கோலா உருண்டை குழம்பு
---Advertisement---
Advertisement

சிக்கன் கோலா உருண்டை குழம்பு செய்வது எப்படி?

வணக்கம் நண்பர்களே பொதுவாக பலரது வீட்டில் மட்டனில் தான் கோலா உருண்டை குழம்பு அல்லது வறுவல் செய்து சாப்பிடுவார்கள். ஆகவே இந்த பதிவில் வித்தியாசமான முறையில் அதாவது சிக்கனில் கோலா உருண்டை குழம்பு எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம். சிக்கன் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவர் ஆகவே மிகவும் ருசியான முறையில் கோலா உருண்டை குழம்பு எப்படி செய்யலாம் என்பதை பற்றி இப்பொழுது நாம் பிறக்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  • மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
  • மல்லி தூள் – 1 ஸ்பூன்
  • பட்டை – 2
  • கிராம்பு – 2
  • எண்ணெய் – தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு
  • பெரிய வெங்காயம் – 1
  • தக்காளி – 1
  • புளி – சிறிது நெல்லிக்காய் அளவு

இஞ்சி பூண்டு விழுது:

  • பூண்டு – சிறிது அளவு
  • இஞ்சி- சிறிது அளவு
  • சோம்பு – 1 டீஸ்பூன்
  • கசகசா – 1 டீஸ்பூன்

உருண்டைக்கு அரைக்க வேண்டிய பொருட்கள்:

  • சிக்கன் (எலும்பில்லாதது) – 1/4 கிலோ
  • வெங்காயம் – 1
  • பச்சை மிளகாய் – 3
  • சோம்பு – 1 ஸ்பூன்
  • மிளகு – 1 ஸ்பூன்
  • பொட்டுக் கடலை – 2 ஸ்பூன்
  • தேங்காய் துருவல் – 2 ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு

கோலா உருண்டை குழம்பு செய்முறை – Kola Urundai Kulambu:

முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

பின்பு தேங்காய் துருவல், சோம்பு, கசகசா, இஞ்சி மற்றும் பூண்டு போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்து தனியாக வைக்கவும்.

பின்பு உருண்டைக்கு அரைக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.

பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு போட்டு தாளித்த பின்பு வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு வதக்கவும்.

வதக்கிய பின்பு அதில் மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் குழம்புக்கு அரைத்து வைத்த மசாலாவை அதில் ஊற்றி கொதிக்க விடவும்.

குழம்பு கொதித்த பின்பு அதில் உருண்டைக்கு அரைத்து வைத்ததை சிறு சிறு உருண்டையாக உருட்டி குழம்பில் போட்டு சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கவும்.

இப்போது ருசியான சிக்கன் உருண்டை குழம்பு தயார்.

சிக்கன் குழம்பு இப்படி செஞ்சு பாருங்க செம டேஸ்ட்டா இருக்கும்..!

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்

 

Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now