சப்பாத்தி நூடுல்ஸ் செய்வது எப்படி? | Chapati Noodles Seivathu Eppadi Tamil
நூடுல்ஸ் என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவாகும். பெரும்பாலும் வீட்டில் இருக்கக்கூடிய பெரியவர்கள் டிபன் செய்ய அலுப்புப்பட்டு குழந்தைகளுக்கு ஒரு பாக்கெட் நூடுல்ஸ் வாங்கி செய்து கொடுத்து வேலையை முடித்துவிடுவார்கள். மற்ற உணவுகளை விட குழந்தைகளும் இந்த நூடுல்ஸை தான் அதிகமாக விரும்பி சாப்பிடுகிறார்கள். நூடுல்ஸை எந்த அளவிற்கு விரும்பி சாப்பிடுகிறார்களோ அதே மாதிரி சப்பாத்தியும் மிருதுவாக இருந்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இன்றைய சமையல் குறிப்பு பகுதியில் மீந்து போன சப்பாத்தியில் (chapati noodles in tamil)ஈசியாக எப்படி நூடுல்ஸ் செய்யலாம்னு பார்க்கலாம்.
வெஜ் நூடுல்ஸ் செய்முறை |
சப்பாத்தி நூடுல்ஸ் – தேவையான பொருள்:
- சப்பாத்தி – 4 (மீந்து போன சப்பாத்தியும் எடுத்துக்கொள்ளலாம்)
- எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
- கேரட் – 1 கப் துருவியது
- பச்சை குடைமிளகாய் – 1/2 மெல்லிசாக நறுக்கியது
- முட்டைகோஸ் – 1/2 கப் மெல்லிசாக நறுக்கியது
- வெங்காயம் – 1 நறுக்கியது
- இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 தேக்கரண்டி
- இஞ்சி – 1 துண்டு (பொடிதாக நறுக்கியது)
- பூண்டு 4 பல் (பொடிதாக நறுக்கியது)
- உப்பு – தேவையான அளவு
- மிளகு – 1 தேக்கரண்டி
- சோயா பீன்ஸ் – 1 தேக்கரண்டி
- டொமேட்டோ கெட்சப் – 2 தேக்கரண்டி
- கொத்தமல்லி இலை – சிறிதளவு
சப்பாத்தி நூடுல்ஸ் செய்முறை:
ஸ்டேப்: 1
முதலில் அடுப்பில் ஒரு அகலமான கடாயில் எண்ணெய் 1 மேசைக்கரண்டி அளவில் ஊற்றவும்.
ஸ்டேப்: 2
அடுத்து 1 சப்பாத்தியை எடுத்து கத்தரிக்கோலால் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
ஸ்டேப்: 3
கடாயில் ஊற்றிய எண்ணெய் நன்றாக காய்ந்ததும் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.
ஸ்டேப்:4
வெங்காயத்தை வதக்கிய பிறகு நறுக்கிய பூண்டு மற்றும் இஞ்சியை சேர்க்கவும்.
ஸ்டேப்: 5
பூண்டு மற்றும் நறுக்கிய இஞ்சியை வதக்கிய பிறகு நீட்ட வாக்கில் நறுக்கி வைத்துள்ள குடை மிளகாயை சேர்த்து வதக்கிவிடவும்.
மீந்து போன 2 இட்லியில் சூப்பரான ஸ்னாக்ஸ் ரெசிபி |
ஸ்டேப்: 6
அடுத்து நறுக்கி வைத்துள்ள முட்டைகோஸ் சேர்த்து வதக்கிக்கொள்ளவும். நன்றாக வதங்கியதும் ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து மிக்ஸ் செய்யவும்.
ஸ்டேப்: 7
இப்போது துருவி வைத்துள்ள கேரட்டை அதில் சேர்த்து வதக்கிவிடவும்.
ஸ்டேப்: 8
கேரட்டை நன்றாக வதக்கியதும் ஒரு டீஸ்பூன் சோயா சாஸ், 2 டீஸ்பூன் டொமேட்டோ கெட்சப் சேர்த்து நன்றாக கரண்டியால் கிண்டிவிடவும்.
ஸ்டேப்: 9
அடுத்து தேவையான அளவிற்கு உப்பு மற்றும் காரத்திற்கேற்ப மிளகுத்தூள் சேர்த்து கிளறவும்.
ஸ்டேப்: 10
அடுத்ததாக நூடுல்ஸ் போன்று நறுக்கி வைத்துள்ள சப்பாத்தியை கடாயில் சேர்த்து வதக்கிவிடவும். மேலே சிறிதளவு நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி இலையை தூவிவிடவும். டேஸ்டியான சப்பாத்தி நூடுல்ஸ் ரெடியாகிட்டு.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |