தீபாவளி பலகாரம் செட்டிநாடு ஸ்பெஷல் தேங்காய்ப்பால் சீப்புசீடை செய்முறை..!

Seepu Seedai Recipe in Tamil

சீப்புசீடை செய்முறை | Seepu Seedai Recipe in Tamil

வணக்கம் தோழிகளே தீபாவளிக்கு பலகாரம் சுட ஆரமிச்சிட்டீங்களா இல்லையா.. ஆம் என்றாலும் சரி.. இல்லை என்றாலும் சரி இந்த தீபாவளிக்கு கண்டிப்பாக தேங்காப்பாலில் செய்யக்கூடிய சீப்புசீடையை செய்து அசத்துங்கள். சுவை அருமையாக இருக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த சீப்புசீடை செய்வதற்க்கான செய்முறை விளக்கத்தை பற்றி நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  1. பச்சரிசி – இரண்டு டம்ளர்
  2. வெள்ளை உளுந்து – 1/2 டம்ளர் (அரிசிக்கு எந்த டம்ளரை பயன்படுத்தினீர்களோ அந்த டம்ளரிலேயே 1/2 டம்ளர் வெள்ளை உளுந்து எடுத்துக்கொள்ளுங்கள்.
  3. பொட்டுக்கடலை – இரண்டு டேபிள் ஸ்பூன்
  4. உப்பு – தேவையான அளவு
  5. வெண்ணெய் அல்லது நெய் – தேவையான அளவு
  6. எள்ளு – இரண்டு டீஸ்பூன்
  7. தேங்காய் – 1/2 மூடி (இவற்றில் தேங்காய் பால் எடுத்துக்கொள்ளுங்கள்)
  8. பாசிப்பருப்பு – 1/2 டம்ளர் (வறுத்து நைசாக பொடித்துக்கொள்ளுங்கள்)
  9. சர்க்கரை – 2 ஸ்பூன்
  10. எண்ணெய் – தேவையான அளவு

சீப்புசீடை செய்வது எப்படி?

இரண்டு டம்ளர் பச்சரிசியை சுத்தமாக கழுவி 1/2 மணி நேரம் தண்ணீர் ஊற்றி ஊறவைக்க வேண்டும்.

1/2 மணி நேரம் அரிசி ஊறியது தண்ணீரை சுத்தமாக வடிகட்டியபிறகு நிழலில் ஒரு காட்டன் துணியை விரித்து அரிசியை சிறிது நேரம் உலர வைக்கவும்.

தண்ணீர் முற்றிலும் அரிசியில் வற்றியதும் அதனை மிக்சியில் போட்டு அரைத்து நன்றாக சலித்துக்கொள்ளுங்கள்.

பிறகு உளுந்து, பொட்டுக்கடலை, பாசிப்பயிறு ஆகியவற்றை தனி தனியாக வறுத்து அத்தனையும் மிக்சியிலேயே அரிது சலித்துக்கொள்ளுங்கள்.

பிறகு அரைத்த மாவு அனைத்தையும் ஒன்றாக சேர்க்கவும், பிறகு அதிலில் எள்ளு, வெண்ணை அல்லது நெய், தேவையான உப்பு, இரண்டு ஸ்பூன் நெய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்துவிடவும்.

பின்பு 1/2 மூடி தேங்காயில் பால் பிழிந்து அதனை லேசாக சூடுபடுத்தவும். இந்த தேங்காய் பாலை கொண்டு மாவு பிசைய வேண்டும்.

அதாவது மாவை கொஞ்சம் கொஞ்சமாக பிசைய வேண்டும். தேங்காய் பால் பத்தவில்லை என்றால் அதன் பிறகு தண்ணீர் ஊற்றி பிசையுங்கள்.

பிறகு ஓல பக்கோடா பிழியும் அச்சில் மாவை வைத்து ஒரு துணியில் அல்லது தட்டில் வடவத்திற்கு பிழிவது போல் பிளிந்துகொள்ளுங்கள்.

பின் பிழிந்த மாவை சிறு சிறு துண்டுகளாக கட் செய்து மேல் படத்தில் காட்டியுள்ளது போல் ரிங் போல் சிறிது சிறிதாக செய்து கொள்ளுங்கள்.

பிறகு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அவற்றில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்கு சூடுபடுத்தவும்.

எண்ணெய் நன்கு சூடானதும் அதில் சிறிது சிறிதாக செய்து வைத்துள்ள சீப்புசீடையை போட்டு பொரித்து எடுக்கவும்.

அவ்வளவு தான் சுவையான சீப்பு சீடை தயாராகிவிட்டது இந்த தீபாவளிக்கு இந்த சீப்பு சீடையை செய்து அசத்துங்கள் அனைவருக்கும் அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
3 பொருள் போதும் இந்த தீபாவளிக்கு Soft ஆன மைசூர் பாக் ரெசிபி செய்திடலாம் வாங்க..!

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal kurippu tamil