சிக்கன் போட்டு அசத்தலான சேமியா பிரியாணி | Semiya Chicken Biryani in Tamil

Semiya Chicken Biryani in Tamil

சேமியா சிக்கன் பிரியாணி செய்வது எப்படி? – Vermicelli Chicken Biryani in Tamil

சேமியா பிரியாணி செய்வது எப்படி: வீட்டில் இருக்கக்கூடிய பெருசுங்க சிறுசுங்க எல்லோருக்கும் சேமியா என்றால் மிகவும் பிடித்தமான ட்ரெண்டி உணவாகும். காலை நேரத்தில் வேலைக்கு செல்லும் பெண்மணிகள் சீக்கிரமாக காலை டிபனை செய்வதற்கு முதல் இடத்தை பிசித்திருப்பது இந்த சேமியா தான். சேமியாவில் இதுவரை நாம் எல்லோரும் கிச்சடி, உப்புமா, பாயசம், சேமியா கேசரி இது மாதிரியான டிஷ் மட்டும் தான் செஞ்சி சாப்பிட்டு இருப்போம் அல்லவா? புது வகையான சேமியாவில் சிக்கன் பிரியாணி எப்படி செஞ்சி அசத்தலாம் என்று தெரிஞ்சிக்கலாம் வாங்க..!

சுவையான சேமியா பிரியாணி செய்யலாம் வாங்க..!

சேமியா சிக்கன் பிரியாணி செய்ய – தேவையான பொருள்:

 1. சேமியா – கால் கிலோ
 2. சிக்கன் – கால் கிராம்
 3. இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
 4. பட்டை- சிறிதளவு
 5. பெரிய வெங்காயம் – ஒன்று
 6. தக்காளி – 1
 7. எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்
 8. தயிர் – சிறிதளவு
 9. பச்சை மிளகாய் – 2
 10. கொத்தமல்லி, புதினா – சிறிதளவு
 11. மிளகாய்தூள் – ஒரு டீஸ்பூன்
 12. சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்
 13. கரம் மசாலா – அரைடீஸ்பூன்
 14. மஞ்சள் தூள் – அரைடீஸ்பூன்
 15. முந்திரிப் பருப்பு – 25 கிராம்
 16. உப்பு, நெய், எண்ணெய் – தேவைக்கேற்ப

சேமியா பிரியாணி செய்வது எப்படி – தாளிப்பதற்கு தேவையான பொருள்:

 1. கிராம்பு
 2. லவங்கப்பட்டை
 3. ஏலக்காய்
 4. சோம்பு

சேமியா சிக்கன் பிரியாணி செய்ய ஸ்டார்ட் பண்ணலாமா🍜?

ஸ்டேப்: 1

முதலில் வெறும் கடாயில் சேமியாவை போட்டு நன்றாக வறுத்து கொள்ளவும். அதன் பிறகு தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி  தழையை பொடிதாக நறுக்கி கொள்ளவும்.

ஸ்டேப்: 2

இப்போது எடுத்து வைத்துள்ள சிக்கனை நன்றாக கழுவி எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும். பச்சை மிளகாயை நீட்ட வாகில் கட் செய்துக்கொள்ளவும்.

ஸ்டேப்: 3

அடுப்பில் அடிகனமான பாத்திரத்தை வைத்து நன்றாக சூடேறிய பிறகு நெய்,  சமமான அளவில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்த பிறகு முந்திரி, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சுவையான வெஜ் நூடுல்ஸ் செய்முறை !!!
ஸ்டேப்: 4

நன்றாக வெங்காயம் வதங்கிய பிறகு அதனுடன் இஞ்சி மற்றும் பூண்டு பேஸ்ட் பச்சை வாசனை போகும் வரை ஒருமுறை நன்றாக கரண்டியால் வதக்கிவிடவும். அடுத்து அதில் தக்காளி, கொத்தமல்லி, புதினா, எலுமிச்சைசாறு, தயிர் சேர்த்து வதக்கவும்.

ஸ்டேப்: 5

தக்காளி குழைகின்ற பதத்தில் நன்றாக வதங்கியதும் அதில் சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனை போட்டு வதக்கவும். சிக்கன் முக்கால் பாகம் அளவிற்கு வெந்த பிறகு சிக்கனுடன் மிளகாய்தூள், சீரகத்தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.

ஸ்டேப்: 6

அடுத்து அதில் அரை லிட்டர் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் சோமியாவை போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடி போட்டு தம் போடவும்.

ஸ்டேப்: 7

20 நிமிடம் வரை மிதமான சூட்டில் வைத்து பின் கொத்தமல்லி தழை தூவி இறக்கி விடவும். சுவையான அனைவருக்கும் பிடித்த சேமியா சிக்கன் பிரியாணி ரெடி.

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal