மட்டன் சேமியா பிரியாணி செய்வது எப்படி? | Mutton Vermicelli Biryani Recipe in Tamil
சேமியா பிரியாணி செய்வது எப்படி: அறுசுவை நேயர்களுக்காக இந்த பதிவில் சேமியாவில் டேஸ்டியான மட்டன் பிரியாணி எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். சிலருக்கு மட்டன் அவ்வளவாக பிடிக்காது. அதனுடைய சுவையை பார்க்க சேமியாவில் இது மாதிரி பிரியாணி செய்து சாப்பிட்டால் மட்டன் டேஸ்ட் எல்லோருக்கும் பிடித்துவிடும். எளிமையான உணவு முறையில் முதன்மை இடத்தை பிடித்துள்ளது சேமியா. சேமியாவில் பல விதமான டிஷ்களை செய்து அசத்தலாம். நாம் இன்றைய சமையல் குறிப்பு பகுதியில் அனைவருக்கும் பிடிக்கும் சேமியா மட்டன் பிரியாணி எப்படி செய்யலாம் என்று தெரிஞ்சிக்கலாம் வாங்க..
சிக்கன் போட்டு அசத்தலான சேமியா பிரியாணி |
சேமியா மட்டன் பிரியாணி செய்ய – தேவையான பொருள்:
- மட்டன் – அரைக் கிலோ
- சேமியா – அரைக் கிலோ
- எண்ணெய் – 100 மில்லி அளவு
- நெய் – 50 மில்லி
- இஞ்சி பூண்டு விழுது – 1 1/2 மேசைக்கரண்டி
- கரம் மசாலா – அரை தேக்கரண்டி
- சில்லி பவுடர் – 1 1/2 தேக்கரண்டி
- தயிர் – 2 மேசைக்கரண்டி
- வெங்காயம் – 150 கிராம்
- தக்காளி – 200 கிராம்
- பச்சை மிளகாய் – 3
- மல்லி,புதினா – கைப்பிடியளவு
- சிறிய எலுமிச்சை – பாதி
- தேங்காய் – பாதி (பால் எடுக்கவும்)
- உப்பு – தேவையான அளவு
மட்டன் பிரியாணி செய்முறை விளக்கம்🥗:
ஸ்டேப்: 1
முதலில் மட்டனை நன்றாக சுத்தம் செய்து கழுவி தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
ஸ்டேப்: 2
மட்டனுடன் அரை தேக்கரண்டி சில்லி பவுடர், அரை மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, 2 மேசைக்கரண்டி தயிர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிரட்டி சிறிது நேரம் ஊற வைக்கவும்.
ஸ்டேப்: 3
அடுத்து தேங்காயை துருவி தேங்காயின் பாலை தனியாக எடுத்துக் கொள்ளவும்.
ஸ்டேப்: 4
இப்போது சேமியாவை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக பொன்னிறத்திற்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
ஸ்டேப்: 5
அடுத்து வெங்காயம், தக்காளி, மல்லி, புதினா ஆகியவற்றை பொடிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை தயார் நிலையில் எடுத்துக் கொள்ளவும்.
சேமியா கேசரி செய்வது எப்படி |
ஸ்டேப்: 6
இப்போது குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சிறிது நேரம் காய்ந்ததும் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை குக்கரில் போட்டு வதக்கிக்கொள்ளவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கி 2 நிமிடம் வைக்கவும்.
ஸ்டேப்: 7
பின்பு மல்லி, புதினா, மிளகாய், தக்காளி, சில்லி பவுடர், உப்பு சேர்த்து வதக்கி எல்லாம் சேர்ந்ததும் எண்ணெய் தெளிந்து வரும். ஊற வைத்திருக்கும் மட்டனை அதனுடன் சேர்த்து குக்கரை மூடி மூன்று விசில் வைத்து திறக்கவும்.
ஸ்டேப்: 8
மட்டன் நன்றாக வெந்த பிறகு மசாலாவுடன் இருக்கும் மட்டனை வேறு பாத்திரத்தில் இப்போது மாற்றவும். ஓரளவிற்கு தண்ணீர் மட்டனில் இருக்கும்.
ஸ்டேப்: 9
மீதி தண்ணீருக்கு தேங்காய் பாலுடன் தண்ணீரை சேர்த்து அளந்து வைக்கவும். (தண்ணீர் அளவு – சேமியா ஒன்றுக்கு ஒன்றரை அளவு தண்ணீர்) எலுமிச்சை பாதி பழத்தை விதையை அகற்றிவிட்டு அதில் பிழியவும். இப்போது கொதி நிலை வந்தவுடன் அதில் வறுத்து வைத்திருக்கும் சேமியாவை சேர்க்கவும்.
ஸ்டேப்: 10
அடுத்து பாத்திரத்தை மூடி 10 நிமிடம் மிதமான சூட்டில் வைத்து சேமியாவை வேக வைக்கவும். சேமியா வெந்ததும் சிறிது நேரம் கழித்து மூடியை திறந்து ஒரு முறை கிளறி விடவும். டேஸ்டான சேமியா மட்டன் பிரியாணி ரெடி.
சுவையான சேமியா பிரியாணி செய்யலாம் வாங்க..! |
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |