பொங்கல் ஸ்பெஷல் மொச்சை பயறு கூட்டு செய்வது எப்படி? | Pachai Mochai Payaru Masala in Tamil
வணக்கம் நண்பர்களே நாளை தை பொங்கல்.. உங்கள் வீட்டில் என்ன ஸ்பெஷல். எங்க வீட்டுல நாங்க பொங்கல் ஸ்பெஷலாக மொச்சை பயறு பயன்படுத்தி மசாலா செய்ய போறோம். இந்த மொச்சை பயறு மசாலா வெண் பொங்கலுக்கு சைடிஷாக தொட்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த மொச்சை பயறு மசாலா செய்வது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் நாங்கள் பதிவு செய்துள்ளோம், அவற்றை பற்றி இப்பொழுது நாம் படித்தறியலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
- மொச்சை பயறு – ஒரு கப்
- தேங்காய் – 1/2 மூடி (துருவியது)
- சீரகம் – ஒரு ஸ்பூன்
- சோம்பு – ஒரு ஸ்பூன்
- பூண்டு – 5 பற்கள்
- பெரிய வெங்காயம் – இரண்டு (நறுக்கியது)
- தக்காளி – இரண்டு (நறுக்கியது)
- மிளகாய் தூள் – 1 1/2 ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- கடுகு – ஒரு ஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
- கருவேப்பிலை – சிறிதளவு
- எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
மொச்சை பயறு மசாலா செய்முறை விளக்கம்:
ஸ்டேப்: 1
முதலில் மொச்சை காயை குக்கரில் சேர்த்து ஒரு விசில் வரும் அளவிற்கு வேகவைத்து தனியாக எடுத்துக்கொள்ளுங்கள்.
ஸ்டேப்: 2
பின் மிக்ஸி ஜாரை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் தேங்காய், சோம்பு, பூண்டு, சீரகம் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.
ஸ்டேப்: 3
பின் அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் சமையல் எண்ணெயை ஒற்றி சூடேற்றவும். எண்ணெய் சூடேறியதும் அவற்றில் கடுகு, வெங்காயம், கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
ஸ்டேப்: 4
பின் நறுக்கி வைத்துள்ள தக்காளியையும் சேர்த்து வதக்க வேண்டும்.
தக்காளி நன்கு வதங்கியதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
ஸ்டேப்: 5
பின் வேகவைத்த மொச்சை பயறை சேர்த்து கிளறி விடுங்கள். கிளறிய பிறகு சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். கொதி வந்த பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து கிளறிவிடுங்கள்.
ஸ்டேப்: 6
இறுதியாக அடுப்பை மிதமான சூட்டில் வைத்து 5 நிமிடங்கள் வேகவைக்கவும். அவ்வளவு தான் சுவையான மொச்சை பயறு மசாலா தயார். இந்த சுவையான ரெசிபியை இந்த பொங்கலுக்கு செய்து அசத்துங்கள் நன்றி வணக்கம்.
21 வகை காய்கறிகள் சேர்த்து பொங்கல் குழம்பு செய்முறை |
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |