மொறு மொறுப்பான மூங் தால் ஃப்ரை இனி வீட்டிலேயே செய்யலாம்.. செய்முறை விளக்கம் இதோ..!

Moong Dal Fry in Tamil

பாசிப்பருப்பு ப்ரை செய்முறை | Moong Dal Fry in Tamil

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய Crispy moong dal recipe பெரும்பாலும் கடைகளில் தான் வாங்கி உண்பார்கள். இதனை நாம் நமது வீட்டிலேயே மிக எளிதாக செய்யலாம். Moong Dal என்பது வேறு ஒன்றும் இல்லை.. பச்சைப்பயிறு மொறு மொறுப்பாக்க பொரித்து எடுப்பது தான் மூங் தால் ஃப்ரை என்று சொல்கின்றன. இதை செய்து மிகவும் எளிமையான விஷயம் தான் சரி வாங்க இந்த மூங் தால் ஃப்ரை வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்பதை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

  • பாசிப்பருப்பு – ஒரு கப்
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – 1/2 லிட்டர்

Moong Dal Fry in Tamil – மூங் தால் ஃப்ரை செய்முறை:

மூங் தால் ஃப்ரை செய்வதற்கு பாசிப்பருப்பை நன்கு சுத்தமாக கழுவவும்.

பிறகு 2 மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை நன்கு ஊறவைத்து கொள்ளுங்கள். பருப்பு சரியாக ஊற வில்லை என்றால் ஃப்ரை செய்யும்போது கடிப்பதற்கு கடினமாக இருக்கும். ஆக நன்றாக ஊறவைத்து கொள்ளுங்கள்.

பிறகு அவற்றில் உள்ள தண்ணீரை சுத்தமாக வடிகட்டி ஒரு கார்டன் துணியில் ஊறவைத்த பாசிப்பருப்பை நன்கு பரவலாக தூவி விட்டு தண்ணீர் சுத்தமாக இல்லாத அளவுக்கு நன்கு உலர்த்திக்கொள்ளுங்கள். அதாவது 1 மணி நேரம் வரை நன்கு உலர்ச்சிகொள்ளுங்கள். வெயிலில் காயவைக்க வேண்டாம்ம் நிலையிலேயே தண்ணீர் எல்லாம் வற்றும் வரை காயவைத்து எடுத்தாலே போதும்.

பிறகு அடுப்பில் ஒரு அகண்ட வாணலியை வைத்து பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் சேர்த்து நன்கு சூடுபடுத்தி கொள்ளுங்கள்.

எண்ணெய் சூடானதும் பாசிப்பருப்பை இரண்டு மூன்று பேஜாக பிரித்து எண்ணெயில் கொஞ்சம் கொஞ்சமாக பாசிப்பருப்பை பொரித்து எடுத்துக்கொள்ளுங்கள்.

பிறகு மறுபடியும் பொரித்த பாசிப்பருப்பை காட்டன் துணியிலையோ அல்லது டிசியு பேப்பரிலோ போட்டு எண்ணெய் இல்லாதவாறு துடைத்துக்கொள்ளுங்கள். பிறகு அதனை பவுலில் மாற்றி தேவையான அளவு உப்பு செய்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு கரமாக சாப்பிட பிடிக்கும் என்றால் மிளகு தூள் அல்லது மிளகாய் தூள் தேவையான அளவு சேர்த்து நன்றாக காலத்து சாப்பிடலாம். இருப்பினும் வெறும் உப்பு மட்டும் கலந்து சாப்பிட்டாலே சுவை நன்றாக தான் இருக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 10 நிமிடத்தில் லஞ்ச் சைடிஷ் செய்துவிடலாம்..!

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal