வித்தியாசமான கற்றாழை பருப்பு பாயசம் செய்யும் முறை..!Katrazhai Payasam..!

Advertisement

வித்தியாசமான கற்றாழை பாயசம் செய்யும் முறை..!

Katrazhai Payasam: நம் உடலில் ஏற்படும் அனைத்து நோய்களுக்கும் கற்றாழை ஒரு சிறந்த மருந்தாக விளங்குகிறது. பொதுவாக கற்றாழையை நாம் சரும அழகை பராமரிப்பதற்காகத்தான் அதிகளவு பயன்படுத்தி உள்ளோம். இப்போது இந்த பகுதியில் கற்றாழையை வைத்து வித்தியாசமா கற்றாழை பாயசம் எப்படி வைப்பது என்று பார்ப்போமா..!

உங்களுக்காக ஒரு அருமையான மோர் குழம்பு ரெசிபி..!

கற்றாழை பாயசம் செய்ய தேவையான பொருட்கள்:

  1. பாசிப்பருப்பு – 1 கப்
  2. துருவிய வெல்லம் – 2 கப்
  3. காய்ச்சிய பால் – 2 கப்
  4. கற்றாழை – 2 (தோல் சீவி நறுக்கியது)
  5. முந்திரி – 10
  6. பாதாம் – 10
  7. ஏலக்காய்ப் பொடி – 2 சிட்டிகை
  8. நெய் – 3 டீஸ்பூன்

கற்றாழை பாயசம் செய்யும் முறை..!

கற்றாழை பாயாசம் செய்வது எப்படி ஸ்டேப்: 1

பாயாசம் வைப்பது எப்படி: இந்த கற்றாழை பாயசம்(Katrazhai Payasam) செய்வதற்கு முதலில் கற்றாழையில் இருக்கும் தோல்பகுதியை சீவி நன்றாக சுத்தம் செய்து பொடிதாக நறுக்கி கொள்ளவும்.

பின்பு பாதாம், பிஸ்தா மற்றும் முந்திரி ஆகியவற்றை நெய்விட்டு வறுத்து கொள்ளவும்.

கற்றாழை பாயாசம் செய்வது எப்படி ஸ்டேப்: 2

பாயாசம் வைப்பது எப்படி: அதன் பிறகு பாசி பருப்பபை ஒரு வாணலியில் போட்டு மிதமான சூட்டில் வறுத்து கொள்ளவும்.

பின்பு குக்கரில் நன்றாக குலையும் வரை வேகவைத்து மசித்து கொள்ளவும்.

கற்றாழை பாயாசம் செய்வது எப்படி ஸ்டேப்: 3

பிறகு அதனுடன் காய்த்து வைத்துள்ள பாலை சேர்த்து நன்ராகள் கொதிக்க வைத்து கொள்ளவும்.

பின்பு துருவி வைத்துள்ள வெல்லத்தை சேர்த்து, வெல்லம் கரையும் வரை நன்றாக கிளறிக்கொண்டே இருங்கள்.

கருப்பட்டி ராகி சமையல் செய்முறை விளக்கம்..!

கற்றாழை பாயாசம் செய்வது எப்படி ஸ்டேப்: 4

பின்னர் வெல்லம் கரைந்ததும் அவற்றில் கற்றாழையை சேர்த்து சிறிது நேரம் வரை கொதிக்க வைக்க வேண்டும்.

கற்றாழை பாயாசம் செய்வது எப்படி ஸ்டேப்: 5

கற்றாழை பாயாசம் வைப்பது எப்படி: இறுதியாக வறுத்து வைத்துள்ள பாதாம், பிஸ்தா, முந்திரி மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து இறக்கினால் ஆரோக்கியமுள்ள மற்றும் சுவையான கற்றாழை பாயசம்(Katrazhai Payasam) தயார்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அனைவருக்கும் அன்புடன் பரிமாறவும்.

கற்றாழையின் பயன்கள்: 1

தினமும் காலை வெறும் வயிற்றில் கற்றாழை ஜூன் குடித்து வந்தால் உடல் ஆரோக்கியம் பெரும்.

கற்றாழையில் உள்ள சாறை எடுத்து தேங்காய் எண்ணெயில் கலந்து 40 நாட்கள் தலை முடியில் தேயித்தால் கூந்தலின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

கற்றாழையின் பயன்கள்: 2

இரத்த அழுத்தம் உள்ளவர்கள் கற்றாழை ஜுஸை தினமும் குடித்து வந்தால் உடலின் இரத்த அழுத்தம் சீராக வைத்துக் கொள்ளலாம்.

கற்றாழை ஜெல்லியை மோரில் கலந்து குடித்தால் உடல் வெப்பம் குறையும். அலர்ஜி மற்றும் கருத்திட்டுகள் மறையும்.

கற்றாழையின் பயன்கள்: 3

கண்களில் அடிப்பட்டால் அல்லது இரத்தம் காரணமாக கண் சிவந்து வீங்கிவிடும். எனவே கற்றாழை ஜெல்லியை ஒரு துணியால் கட்டி இரவு தூங்கும் போது கண்களில் கட்டினால் வலி குறையும், மூன்று நாட்களில் நோய் குணமாகும்.

சரும நோய் உள்ளவர்கள் தினமும் கற்றாழை சாறை முகத்தில் தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.

கற்றாழையின் பயன்கள்: 4

இரவு தூங்கும் போது கற்றாழையை முகத்தில் தடவி காலை வெண்ணீரால் முகத்தை கழுவினால் முகம் பொலிவுடன் காணப்படும்.

டேஸ்டான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு!!!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்!!!
Advertisement