பத்தே நிமிஷத்துல இந்த மாதிரி ஒரு லஞ்ச் செஞ்சி சாப்பிட்டு பாருங்க சூப்பரா இருக்கும்..!

Advertisement

10 Minute Lunch Recipe

வீட்டில் இருக்கும் பெண்கள் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கும் சரி, வேலைக்கு செல்லும் பெரியவர்களுக்கும் சரி தினமும் என்ன சாப்பாடு செய்து கொடுப்பது என்று தெரியாமல் புலம்புவார்கள். தினமும் ஒரே மாதிரியாக லஞ்ச் செய்து கொடுத்த உங்களுக்கும் அலுத்து போயிருக்கும், சாப்பிட்ட அவர்களுக்கும் அலுத்து போயிருக்கும். அதனால் பத்தே நிமிடத்தில் மிகவும் சுவையான லஞ்ச் இந்த மாதிரி செய்து சாப்பிட்டு பாருங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். வாங்க நண்பர்களே அது எப்படி செய்வது என்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

10 Minute Lunch Recipe in Tamil:

  1. சாதம் – 2 கப்
  2. பெரிய வெங்காயம் – 2
  3. பச்சை பட்டாணி – 1/2 கப்
  4. மிளகு தூள் – 1 ஸ்பூன்
  5. பச்சை மிளகாய் – 3
  6. கேரட் – 2
  7. குடை மிளகாய் – 1
  8. பூண்டு 3 பற்கள்
  9. சோயா சாஸ் – 1 ஸ்பூன்
  10. தக்காளி சாஸ் – 1 ஸ்பூன்
  11. கொத்தமல்லி – சிறிதளவு
  12.  உப்பு – தேவையான அளவு
  13. எண்ணெய் – தேவையான அளவு
குழந்தைகளுக்கான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி..!

instant lunch recipes

செய்முறை -1 

முதலில் ஒரு கடாயை எடுத்து அடுப்பில் வைத்து கொள்ளவும். பின் அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ள வேண்டும். எண்ணெய் சூடானதும் அதில் பூண்டு 3 பற்கள் எடுத்து பொடிப்பொடியாக நறுக்கி அதில் போட வேண்டும்.

செய்முறை -2

பின் அதில் நாம் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கியதும் அதில் பொடிப்பொடியாக நறுக்கிய கேரட், பச்சை மிளகாய், குடை மிளகாய் இவை அனைத்தையும் போட்டு வதக்க வேண்டும்.

செய்முறை -3

இவை அனைத்தும் நன்றாக வதங்கியதும் அதில் பச்சை பட்டாணி 1/2 கப் அளவிற்கு போட்டு 5 நிமிடம் நன்றாக வதக்க வேண்டும். (பச்சை பட்டாணியை சமைப்பதற்கு முன்பு 20 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்).

வீட்டில் காய்கறி இல்லையா..? அப்போ இந்த மாதிரி செஞ்சி சாப்பிட்டு பாருங்க..!

செய்முறை -4 

பச்சை பட்டாணி வதங்கியதும் அதில் மிளகு தூள் 1 ஸ்பூன், அதனுடன் உப்பு தேவையான அளவு மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து விட வேண்டும்.

செய்முறை -5

பின் நாம் வடித்து எடுத்து வைத்துள்ள வெள்ளை சாதத்தை இதில் போட்டு கலந்து  விட வேண்டும். பின் இதில் 1 ஸ்பூன் சோயா சாஸ், 1 ஸ்பூன் தக்காளி சாஸ் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பின் கொத்தமல்லி போட்டு இரக்க வேண்டும்.

அவ்வளவு தான் நண்பர்களே பத்தே நிமிசத்துல மிகவும் சுவையான லஞ்ச் ரெடி..! நீங்களும் ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க..!

வீட்டில் சமைத்த சாதம் மீதம் இருக்கிறதா அப்போ இந்த மாதிரி செய்து சாப்பிட்டு பாருங்கள்..!

 

இதையும் படியுங்கள்=> மீதமுள்ள சாதத்தை இப்படி ட்ரை பண்ணி பாருங்க டேஸ்ட் சூப்பரா இருக்கும்

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal
Advertisement