இனிப்பு அப்பம் செய்வது எப்படி?
Appam Recipe in Tamil:- அப்பம் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடித்த ரெசிபியாகும். அப்பத்தில் பல வகைகள் இருக்கின்றன. சில பேருக்கு அப்பம் செய்தால் சரியான பக்குவத்தில் வராது. அப்பமானது கல்லு போல் ஆகிவிடும். அப்படி இல்லாவிட்டால் எண்ணெயில் பிரிந்து போய் விடும். இந்த இரண்டு பிரச்சனையும் வராமல் சுலபமான முறையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய இனிப்பு அப்பம் செய்வது எப்படி? தேவையான பொருட்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
- மைதா – ஒரு கப்
- ரவை – 1/2 கப்
- ஏலக்காய் தூள் – 1/4 ஸ்பூன்
- உப்பு – ஒரு சிட்டிகை
- சர்க்கரை – 1/2 கப்
- காய்ச்சிய பால் – 1/2 கப்
- எண்ணெய் – 1/2 லிட்டர்
இனிப்பு அப்பம் செய்முறை | Inippu Appam Seivathu Eppadi Tamil
இனிப்பு அப்பம் செய்முறை – ஸ்டேப்: 1
ஒரு சுத்தமான பாத்திரத்தை எடுத்து கொள்ளுங்கள். அவற்றில் 1 கப் மைதா மாவு, ரவை 1/2 கப், ஏலக்காய் தூள் 1/4 ஸ்பூன், உப்பு ஒரு சிட்டிகை அளவு, சர்க்கரை 1/2 கப், காய்ச்சிய பால் 1/2 கப் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
Inippu Appam Seivathu Eppadi Tamil – ஸ்டேப்: 2
மாவானது இட்லி மாவு பதத்திற்கு இருக்க வேண்டும் ஆகவே தண்ணீர் ஊற்றி 5 நிமிடங்கள் நன்றாக கரண்டியால் கலந்து கொள்ளுங்கள்.
மைதா அப்பம் செய்வது எப்படி – ஸ்டேப்: 3
பின் கலந்த மாவினை 30 நிமிடம் நன்றாக ஊறவைக்க வேண்டும். அப்பொழுது தான் அப்பம் நன்கு சாப்டாக இருக்கும்.
மைதா மாவில் அப்பம் செய்வது எப்படி – ஸ்டேப்: 4
30 நிமிடங்கள் கழித்த பிறகு அடுப்பில் அகலமான பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள்.
Appam Recipe in Tamil – ஸ்டேப்: 5
எண்ணெய் நன்கு சூடேறியதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து ஒவ்வொரு கரண்டியாக மாவினை ஊற்றி வேகவைக்க வேண்டும்.
Appam Recipe in Tamil – ஸ்டேப்: 6
அப்பம் எண்ணெயில் வெந்து மேலே உப்பி வரும் அப்பொழுது எண்ணெயை கரண்டியால் எடுத்து அப்பம் மீது ஊற்றிவிடுங்கள்.
Appam Recipe in Tamil – ஸ்டேப்: 7
அப்பம் ஒரு பக்கம் நன்கு சிவந்து வந்த பிறகு மறுபக்கத்தை பிரட்டி போட்டு சிவக்க வேக வைத்து எடுத்தால் சாப்டான அப்பம் தயார். மீதம் உள்ள மாவுகளை இது போன்று வேக வைத்து எடுத்து கொள்ளுங்கள்.
ரொம்ப டேஸ்ட்டான கோதுமை மாவில் ஸ்வீட் செய்வது எப்படி? |
அவ்வளவு தாங்க சுவையான அப்பம் தயார் அனைவருக்கும் பரிமாறுங்கள் நன்றி வணக்கம்..!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |