அத்திப்பழம் அல்வா செய்வது எப்படி? | Athipalam Halwa Recipe in Tamil
அல்வா என்றாலே சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய இனிப்பு வகையாகும். அல்வாவில் கேரட் அல்வா, கோதுமை அல்வா, ரவை அல்வா போன்ற பல வகையான அல்வா வகைகள் உள்ளது. எந்த ஒரு உணவையும் நாம் செய்யும் கை பக்குவத்தில் தான் அதன் சுவையானது இடம் பெறும். ஸ்வீட் கடைகளில் நாம் நமக்கு பிடித்த கார வகைகளை வாங்கி விட்டு மறக்காமல் கடைசியாக வாங்குவது இந்த அல்வாவைதான். கடைகளில் இனி வாங்குவதை விட்டுவிட்டு வீட்டிலே உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய அத்திப்பழ அல்வா எப்படி செய்யலாம்னு பார்க்கலாம்.
கோதுமை மாவில் அல்வா செய்வது எப்படி? |
தேவையான பொருள்:
- அத்திப்பழம் – (6 ஊறவைத்தது)
- சர்க்கரை – 2 ஸ்பூன்
- நட்ஸ்
- நெய் – தேவையான அளவு
அத்திப்பழ அல்வா செய்வது எப்படி?
ஸ்டேப்: 1
முதலில் 2 மணிநேரம் ஊறவைத்த அத்திப்பழத்தை மிக்ஸி ஜாரில் போட்டு அந்த தண்ணீருடன் நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
ஸ்டேப்: 2
அரைத்த பிறகு அடுப்பை ஆன் செய்து அகலமான Pan-ல் 1 ஸ்பூன் நெய் சேர்க்கவும்.
ஸ்டேப்: 3
நெய் சூடானதும் அரைத்து வைத்த அத்திப்பழ பேஸ்டை நெய்யில் சேர்க்கவும். இப்போது நன்றாக அதை கிண்டிவிடவும்.
சுவையான ட்ரை ஃப்ரூட் ஹல்வா செய்முறை..! |
ஸ்டேப்: 4
நன்றாக கிண்டிவிட்ட பிறகு 6 அத்திப்பழத்திற்கு 2 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கிளறவும்.
ஸ்டேப்: 5
அடி பிடிக்காதவாறு நன்றாக கிண்டிவிடவும். இப்போது கெட்டியான பதத்திற்கு வந்துவிடும்.
ஸ்டேப்: 6
இப்போது அடுப்பை அணைத்து விடலாம். கிண்டி வைத்த அல்வாவை தனியாக ஒரு பிளேட்டில் மாற்றிக்கொள்ளவும்.
மீந்து போன சாதத்தில் சூப்பரான ஹல்வா செய்யலாம் வாங்க ..! |
ஸ்டேப்: 7
அடுத்து செய்து வைத்துள்ள அல்வாவில் தேவையான அளவிற்கு பாதாம், நட்ஸ் தூவி விடவும். செம டேஸ்டியான அத்திப்பழ அல்வா ரெடியாகிட்டு..
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |