வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

பீட்ரூட் இருக்கிறதா? உடனே இந்த பீட்ரூட் அல்வா செய்து பாருங்கள்..!

Updated On: October 11, 2023 12:35 PM
Follow Us:
Beetroot Halwa in Tamil
---Advertisement---
Advertisement

பீட்ரூட் அல்வா செய்வது எப்படி? – Beetroot Halwa in Tamil

பொதுவாக பீட்ருட்டை குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடமாட்டார்கள். குலதிகளை ஏன் உதாரணத்திற்கு சொல்ல வேண்டும். பெரியவர்கள் கூட சிலர் சாப்பிடமாட்டாட்கள். ஆனால் பீட்ருட்டில் தான் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இருந்தாலுமே வீட்டில் இருப்பவர்கள் எப்படியாவது சாப்பிடு என்று கட்டாயம்படுத்துவார்கள். இனி யாரும் அப்படி கட்டாயம் செய்ய வேண்டிய அவசியமே இருக்காது. பீட்ருட்டில் ஒரு சுவையான பீட்ரூட் அல்வா செய்யுங்கள். இந்த பீட்ரூட் அல்வா செய்வது மிகவும் ஈஸி அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க  பீட்ரூட் அல்வா எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

  • பீட்ரூட் – 300 கிராம் துருவியது
  • முந்திரி பருப்பு –  ஒரு கையளவு
  • உலர்திராட்சை – ஒரு கையளவு
  • ஏலக்காய் பொடி – 1/2 ஸ்பூன்
  • சர்க்கரை – 1/2 கப் முதல் 3/4
  • பால் – 1 கப்
  • நெய் – 1 டேபிள் ஸ்பூன் + 2 டேபிள் ஸ்பூன் + 2 டீஸ்பூன்

பீட்ருட் ஹல்வா செய்முறை விளக்கம்:

ஸ்டேப்: 1

முதலில் அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி முந்திரி, திராட்சையை தனி தனியாக வறுத்தெடுத்துக்கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 2

பின் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து அதே கடாயில் சிறிதளவு நெய் சேர்த்து  துருவி வைத்துள்ள பீட்ரூட்டை சேர்த்து வதக்க வேண்டும், ஓரளவு பீட்ரூட் வதங்கியது ஒரு கப் காச்சிய பசும் பாலினை ஊற்றி பீட்ருட்டை நன்கு வேக வைக்க வேண்டும்.

ஸ்டேப்: 3

பால் நன்கு சுண்டியதும் ஒரு கப்  சர்க்கரையை சேர்த்து நன்கு கிளற வேண்டும். அப்படி கிளறும் போது, பீட்ரூட் வாணலியில் ஒட்டாமல் அல்வா பதத்திற்கு வரும்.

ஸ்டேப்: 4

இந்நிலையில் மீதமுள்ள நெய் ஊற்றி நன்கு கிளறி, வறுத்த முந்திரி மற்றும் உலர் திராட்சையை சேர்த்து மீண்டும் ஒருமுறை கிளறிவிடுங்கள்.

ஸ்டேப்: 5

இறுதியை சிறிதளவு ஏலக்காய் பவுடரை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான மற்றும் ஆரோக்கியமான பீட்ருட் ஹல்வா தயார். இப்படி செய்து கொடுத்தீர்கள் என்றால் வீட்டில் உள்ள அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். குறிப்பாக பீட்ருட் பிடிக்காதவர்கள் இப்படி செய்து கொடுத்தால் வேண்டாம் என்று சொல்லவே மாட்டார்கள். ஒருமுறை ட்ரை செய்து பாருங்கள் நன்றி வணக்கம்.

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now