கத்திரிக்காய் பிரியாணி செய்வது எப்படி.?
பிரியாணி என்றால் அனைவருக்கும் பிடித்த உணவாக இருக்கும். மூன்று வேலையும் பிரியாணி கொடுத்தாலும் முகம் சுளிக்காமல் சாப்பிடுவார்கள். ஆனால் மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, காளான் பிரியாணி, வெஜ்டேபிள் பிரியாணி, பிஷ் பிரியாணி, எக் பிரியாணி போன்றவை தான் சாப்பிட்டுருப்போம். ஒரே மாதிரி பிரியாணி சாப்பிட்டு சலித்து விட்டது என்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் இந்த பதிவில் கத்திரிக்காய் வைத்து பிரியாணி செய்ய போகிறோம். கத்திரிக்காயில் பிரியாணியா என்று பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். இதனுடைய சுவை எப்படி இருக்கும் என்றெல்லாம் யோசிப்பீர்கள். யோசித்து கொண்டே இந்த பதிவை முழுமையாக படித்து இதில் கூறியுள்ள கத்தரிக்காய் பிரியாணி செய்து சாப்பிட்டு பாருங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇https://bit.ly/3Bfc0Gl
கத்தரிக்காய் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்:
- கத்தரிக்காய்-1/4 கிலோ
- எண்ணெய்- 2 தேக்கரண்டி
- நெய்- 2 தேக்கரண்டி
- சோம்பு- 1 தேக்கரண்டி
- ஏலக்காய்- 1
- பச்சை மிளகாய்- 2
- வெங்காயம் –1
- தக்காளி- 2
- மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி
- மல்லி தூள்- 2 தேக்கரண்டி
- மிளகாய் தூள்- 1 தேக்கரண்டி
- கரம் மசாலா தூள்- 1/4 தேக்கரண்டி
- இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1 தேக்கரண்டி
- எலுமிச்சை சாறு- 2 தேக்கரண்டி
- புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை- சிறிதளவு
மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி எந்த பிரியாணியாக இருந்தாலும் இது தாங்க ஏத்த சைடிஸ்
கத்தரிக்காய் பிரியாணி செய்முறை:
அடுப்பில் குக்கர் வைத்து அதில் 1 தேக்கரண்டி நல்லெண்ணெய், 1 தேக்கரண்டி நெய் ஊற்றி கொள்ளவும். 1/ 4 தேக்கரண்டி சோம்பு, 1 ஏலக்காய், பச்சை மிளகாய், கருவேப்பிலை சிறிதளவு, கொத்தமல்லி, புதினா சிறிதளவு, நறுக்கிய வெங்காயம் 1, உப்பை தேவையான அளவு சேர்த்து வதக்கவும்,
அதில் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், நறுக்கிய தக்காளி 1, நறுக்கிய கத்தரிக்காய் 1/4 கிலோ சேர்த்து வதக்கவும். அதனுடன் 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பிறகு அதில் 1 தேக்கரண்டி மிளகாய் தூள், மல்லி தூள் 1 தேக்கரண்டி , கரம் மசாலா தூள் 1/4 தேக்கரண்டி, எலுமிச்சை பழம் சாறு 2 தேக்கரண்டி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அதனுடன் ஒரு டம்ளர் அரிசியை கழுவி 20 நிமிடம் ஊற வைத்ததை சேர்த்து கொள்ளவும். அரிசியை எந்த டம்ளரில் அளந்து எடுத்து கொண்டீர்களா அதிலேயே அளந்து 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கலந்து விட்டு 2 விசில் விட்டு இறக்கவும். அவ்ளோ தாங்க கத்தரிக்காய் பிரியாணி ரெடி.!
10 பேருக்கு காளான் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அளவுகள்
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |