நாவில் சுவையூட்டும் குடைமிளகாய் முட்டை பொரியல்..! Capsicum Egg Poriyal Recipe
இறைச்சி உணவுகளை விரும்பாதவர்கள் கூட முட்டையை விரும்புவார்கள். முட்டையில் நிறைய விதமான ரெசிபிக்களை செய்யலாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரெசிபி பிடிக்கும். அந்த வகையில் இன்று நாம் குடைமிளகாய் சேர்த்து முட்டை பொரியல் செய்வது எப்படி என்று தான் தெரிந்துகொள்ள போகிறோம். இந்த ரெசிபி அனைவருக்கும் மிகவும் பிடித்ததாக இருக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க இந்த குடைமிளகாய் முட்டை பொரியல் எப்படி செய்யலாம்? என்னென்ன பொருட்கள் தேவைப்படும்.. என்ற முழுமையான விவரங்களை இப்பொழுது பார்க்கலாம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇https://bit.ly/3Bfc0Gl
தேவையான பொருட்கள்:
- முட்டை – மூன்று
- பொடிதாக நறுக்கிய பெரிய வெங்காயம் – ஒரு கப்
- குடைமிளகாய் – இரண்டு (பொடிதாக நறுக்கியது)
- விதை நீக்கிய தக்காளி – இரண்டு (பொடிதாக நறுக்கியது)
- கடுகு – ஒரு ஸ்பூன்
- மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன்
- மஞ்சள் முதல் – இரண்டு சிட்டிகை
- உப்பு – தேவையான அளவு
- பூண்டு – பொடிதாக நறுக்கியது சிறிதளவு
- எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன்
- கருவேப்பிலை – இரண்டு கொத்து
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
நீங்கள் எவ்வளவோ பிரியாணி சாப்பிட்டுருந்தாலும் இந்த பிரியாணியை செய்து சாப்பிட்டு பாருங்க
குடைமிளகாய் முட்டை பொரியல் செய்முறை – Capsicum Egg Poriyal Recipe:
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். என்னை சூடானதும். கடுகு சேர்த்து தாளிக்கவும்.
கடுகு நன்கு பொரிந்து வந்தது, அதனுடன் பொடிதாக நறுக்கிவைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் கருவேப்பிலை மற்றும் பொடிதாக நறுக்கிய பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின்பு பொடிதாக நறுக்கிய குடைமிளகாயை சேர்த்து வதக்கவும்.
குடைமிளகாய் நன்கு வதங்கியதும் பொடிதாக நறுக்கி வைத்துள்ள விதை நீக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளியும் நன்கு வதங்கியதும் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கவும்.
பின்பு மூன்று முட்டையை உடைத்து ஊற்றி நன்கு சுருள சுருள நன்றாக கிளறிவிடவும். முட்டை மற்றும் அவற்றில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தும் ஒன்றா சேர்த்து நன்றாக வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கிவிடலாம்.
அவ்வளவு தான் சுவையான மற்றும் டேஸ்ட்டியான குடைமிளகாய் முட்டை பொரியல் தயார். ஒரு முறை உங்கள் வீட்டில் இந்த முறையை செய்து பாருங்கள் நாவில் சுவை மலரும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
அடை சாப்பிட்டு இருப்பீங்க..! ஆனா சோள அடை சாப்பிட்டு இருக்கீங்களா..!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |