மிளகாய் பஜ்ஜி செய்வது எப்படி?
Chilli Bajji Recipe in Tamil:- மாலை நேரத்தில் டீ, காபி குடிக்கும் போது சற்று காரமாக, சூடாக சாப்பிட வேண்டும் என்று அனைவருமே ஆசைப்படுவோம், குறிப்பாக பஜ்ஜியும் போண்டாவும் மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிடுவதற்கு மிகவும் சிறந்த உணவு. ஆகவே எளிய பொருட்களை கொண்டு இப்பவே உங்கள் வீட்டில் மிளகாய் பஜ்ஜி செய்யலாம். சூடான காஃபி அல்லது டீயுடன் இந்த மிளகாய் பஜ்ஜிகளை செய்து ஈவினிங் ஸ்நாக்ஸாக செய்து சாப்பிட்டு என்ஜாய் பண்ணலாம் வாங்க.
மிளகாய் பஜ்ஜி செய்ய தேவையான பொருட்கள்:
- கடலை மாவு – 1 கப்
- பஜ்ஜி மிளகாய் – 4 (இரண்டாக கீறியது)
- வெங்காயம் – 2 (நறுக்கியது)
- வரமிளகாய் – 2 புளி – சிறிது
- பூண்டு – 4 பல்
- அரிசி மாவு – 1/2 கப்
- மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
- சோடா உப்பு – 1 சிட்டிகை
- பெருங்காயத் தூள் – சிறிது
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
மிளகாய் பஜ்ஜி செய்முறை – Chilli Bajji Recipe in Tamil:-
ஸ்டேப்: 1
முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, மிளகாய் தூள், சோடா உப்பு, பெருங்காயத் தூள், உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி, பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
ஸ்டேப்: 2
பின் மிக்ஸியில் நறுக்கிய வெங்காயம், வரமிளகாய், புளி, பூண்டு மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஸ்டேப்: 3
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெயை ஊற்றி, எண்ணெயை சூடேற்ற வேண்டும்.
ஸ்டேப்: 4
அதற்குள் அந்த அரைத்து வைத்துள்ள கலவையை, இரண்டாக கீறி வைத்துள்ள மிளகாயின் நடுவின் உள்ள விதைகளை நீக்கி, அதனுள் வைத்து, பின் பிரட்டி, எண்ணெயில் போட்டு நன்கு பொன்னிறமாக பொரிக்க வேண்டும்.
இதேப்போல் அனைத்து மிளகாயையும் செய்ய வேண்டும். இப்போது சூப்பரான மிளகாய் பஜ்ஜி ரெடி!!!
வீடே மணக்க மணக்க இறால் கிரேவி செய்வது எப்படி? |
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |