Chutney Recipe in Tamil
இட்டலி, தோசை என்றாலே சட்னி, சாம்பார், பொடி இவற்றில் ஏதவாது ஒன்று கண்டிப்பாக இருக்க வேண்டும். அப்போது தான் உணவை சாப்பிட முடியும். தினமும் ஒரே மாதிரி தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, பூண்டு சட்னி, கொத்தமல்லி சட்னி, புதினா சட்னி என்று ஒரே மாதிரி சட்னி செய்து சாப்பிட்டால் சலித்து விடும். அதனால் இந்த பதிவில் புதிதாக வெங்காயம், தக்காளி, தேங்காய் சேர்க்கமால் ஒரு அருமையான சட்னி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
- பூண்டு – 5
- கடலை பருப்பு – 1 தேக்கரண்டி
- உளுத்தப்பருப்பு – 1 தேக்கரண்டி
- பொட்டு கடலை –3 தேக்கரண்டி
- நிலக்கடலை – 3 தேக்கரண்டி
- காய்ந்த மிளகாய் – 5
- புளி – சிறிதளவு
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – 2 தேக்கரண்டி
- கடுகு – 1 தேக்கரண்டி
- கருவேப்பிலை – சிறிதளவு
செய்முறை:
அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி கொள்ளவும். அதில் 5 பூண்டு பற்களை தோல் உரித்து கட் செய்து சேர்த்து வதக்கவும். அதனுடன் கடலை பருப்பு 1 தேக்கரண்டி, உளுந்து 1 தேக்கரண்டி சேர்த்து சிவந்த நிறம் வரும் வரை வதக்கவும்.
இட்லி, தோசைக்கு என்று இருக்கின்றன சுவையான வெங்காய சட்னி செய்யலாம் வாங்க..!
பின் அதில் நிலக்கடலை 3 தேக்கரண்டி சேர்த்து வதக்கவும், பொட்டு கடலை 1 தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் 5 சேர்த்து வதக்கவும். முக்கியமாக இந்த பொருட்கள் சேர்த்து வதக்கும் பொழுது அடுப்பை குறைவான தீயிலே வைத்து வதக்க வேண்டும்.
வதக்கிய பொருட்கள் ஆறியதும் மிக்சி ஜாரில் சேர்த்க்கவும். அதனுடன் புளி சிறிதளவு, உப்பு தேவையான அளவு, தண்ணீர் சிறிதளவு சேர்த்து அரைக்கவும்.
அடுத்து தாளிப்பதற்கு அடுப்பில் கடாய் வைத்து அதில் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, கடுகு 1 தேக்கரண்டி சேர்த்து கடுகு பொரிந்ததும், உளுத்தப்பருப்பு 1 தேக்கரண்டி, கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். பின் அதில் அரைத்து வைத்த சட்னியை சேர்க்கவும்.
அவ்ளோ தாங்க வெங்காயம் தக்காளி சேர்க்காமல் சுவையான சட்னி ரெடி.! ஒரு முறை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள்.!
புதினா சட்னி, கொத்தமல்லி சட்னி இந்த மாதிரி செய்து பாருங்க
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |