புதிய சுவையில் தீபாவளி ஸ்பெஷல் லட்டு இப்படி செஞ்சி பாருங்க..!

Diwali Special Sweet Recipe in Tamil

Diwali Special Sweet Recipe in Tamil

வணக்கம் அன்பான நண்பர்களே… இன்றைய சமையல் குறிப்பு பதிவில் மிகவும் ருசியான புதிய சுவையில் தேங்காய் லட்டு செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ள போகிறோம். பண்டிகை நாட்களில் இந்த மாதிரி லட்டு செய்து சாப்பிட்டு பாருங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய இந்த தேங்காய் லட்டு புதிய சுவையில் செய்து பாருங்கள். அவ்வளவு சுவையாக இருக்கும். இந்த பதிவின் மூலம் புதிய சுவையில் தேங்காய் லட்டு செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க…

தீபாவளிக்கு இந்த மாதிரி ஸ்வீட் செஞ்சி அசத்துங்க..!

ஸ்பெஷல் தேங்காய் லட்டு செய்வது எப்படி..? 

லட்டு செய்ய தேவையான பொருட்கள்: 

  1. துருவிய தேங்காய் – 2 கப்
  2. தண்ணீர் சேர்க்காத பால் – 1 கப்
  3. அரைத்த சர்க்கரை – அரை கப்
  4. ஏலக்காய் தூள் – சிறிதளவு
  5. ஸ்டாபெரி சிரப் – 1 ஸ்பூன்
  6. பிங்க் ஃப்ரூட் கலர் – 1 ஸ்பூன்

ஸ்பெஷல் தேங்காய் லட்டு செய்முறை:

செய்முறை -1

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து கொள்ள வேண்டும். பின் அதில் நாம் துருவி வைத்துள்ள 2 கப் தேங்காயை சேர்த்து கொள்ள வேண்டும்.

செய்முறை -2

பின் அதில் காய்ச்சிய தண்ணீர் சேர்க்காத பாலை சேர்த்து கொள்ள வேண்டும். மிதமான தீயில் வைத்து அடி பிடிக்காமல் கிண்ட வேண்டும்.

செய்முறை -3

பிறகு அதில் அரை கப் அளவில் நாம் அரைத்து வைத்துள்ள சர்க்கரையை சேர்த்து நன்றாக கிண்ட வேண்டும். கெட்டியாக வரும் வரை நன்றாக கிண்ட வேண்டும்.

செய்முறை -4

பின் இதை 2 பாகமாக பிரித்து 1 பாதியை கிண்ணத்தில் எடுத்து கொள்ள வேண்டும். நாம் 2 கலர் கொண்டு லட்டு செய்வதால் இதுபோல செய்கிறோம்.

செய்முறை -5

பிறகு மீதம் கடாயில் உள்ளதில் சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்த்து கிண்ட வேண்டும்.

பின் அதில் Strawberry Syrup சேர்த்து கொள்ள வேண்டும். பிறகு அதனுடன் pink fruit color சேர்த்து நன்றாக கிண்ட வேண்டும். முழுவதுமாக கலர் மாறியதும் அடுப்பை நிறுத்தி விட வேண்டும்.

செய்முறை -6

 

பிறகு மிதமான சூட்டில் இருக்கும் போதே வெள்ளை நிறத்தில் உருண்டை பிடிக்க வேண்டும்.

பின்னர் நாம் கலர் சேர்த்துள்ள தேங்காயை தட்டையாக உருட்டி அதில் இந்த வெள்ளை உருண்டைகளை வைத்து லட்டு போல செய்ய வேண்டும். இப்பொழுது 2 வண்ணங்களில் தேங்காய் லட்டு செய்முறை முடிந்து விட்டது.

அவ்வளவு தான் நண்பர்களே ஒரு புதிய சுவையில் 2 வண்ணங்களை கொண்டு செய்த தேங்காய் லட்டு தயார் இந்த தீபாவளிக்கு இதுபோல தேங்காய் லட்டு செய்து அசத்துங்கள்..!

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal