ஒரே மாவில் 5 வையான தோசை ரெசிபி செய்முறை..!

5 வகையான தோசை செய்முறை | Dosa Varieties Tamil

Dosa Varieties Tamil – சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாக இருப்பது தோசை தான். சிலருக்கு தோசையை காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் உணவாக செய்து கொடுத்தாலும் அதனை விரும்பி சாப்பிடுவார்கள். இருப்பினும் சிலர் வீட்டில் வரும் மாவு தோசையை மட்டும் தான் ஊற்றி கொடுப்பார்கள். தோசையில் பலவகையான தோசை இருக்கிறது. அவற்றில் 5 வகையான தோசைக்கான செய்முறை விளக்கத்தை பற்றி தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம். இந்த 5 வகையான தோசையை எப்படி செய்யலாம் என்று செய்முறை விளக்கத்தை பற்றி இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்து கொண்டு உங்கள் வீட்டில் உள்ளவரக்ளுக்கு செய்து கொடுத்து அசத்துங்கள்.

கொத்தமல்லி தோசை செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

 1. கொத்தமல்லி – ஒரு கையளவு
 2. பச்சை மிளகாய் – தேவைக்கேற்ப
 3. பூண்டு – இரண்டு பல்
 4. உப்பு – சிறிதளவு
 5. சீரகம் தூள் – 1/2 ஸ்பூன்
 6. தோசை மாவு – 1/2 கப்

kothamalli dosai

கொத்தமல்லி தோசை செய்முறை – Kothamalli Dosai:

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள் அவற்றில் மொத்தமல்லி, பச்சை மிளகாய், பூண்டு, உப்பு, சீரகம் தூள் ஆகியவற்றை செய்து பேஸ்ட்டு போல் அரைத்துக்கொள்ளுங்கள்.

இவ்வாறு அரைத்த கலவையை தோசை மாவில் காலத்து தோசை ஊற்றினால் சுவையான கொத்தமல்லி தோசை தயார்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
அசைவ சாப்பாட்டினை மிஞ்சும் அளவிற்கு சுவையான பன்னீர் மசாலா கிரேவி இப்படி செய்து பாருங்கள்..!பீட்ருட் தோசை செய்வது எப்படி? | Beetroot Dosa Recipe in Tamil

தேவையான பொருட்கள்:

 1. தோசை மாவு – 1/2 கப்
 2. துருவிய பீட்ருட் – ஒரு கையளவு
 3. இஞ்சி – 1/2 துண்டு
 4. காய்ந்த மிளகாய் – 3
 5. உப்பு – தேவையான அளவு

பீட்ரூட் தோசை செய்முறை:

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள் அவற்றில் பீட்ரூட், இஞ்சி, காய்ந்த மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள்.

அரைத்த கலவையை தோசை மாவில் கலந்து தோசையாக ஊற்றினால் பீட்ரூட் தோசை தயார்.மேகி தோசை செய்வது எப்படி? | Noodles Dosa Recipe in Tamil

தேவையான பொருட்கள்:

 1. மேகி – ஒரு பாக்கெட்
 2. தக்காளி – 1
 3. பெரிய வெங்காயம் – 1
 4. கருவேப்பிலை – சிறிதளவு
 5. கொத்தமல்லி – சிறிதளவு
 6. கரம் மசாலா – 1/2 ஸ்பூன்
 7. மிளகாய் – தூள் – 1/4 ஸ்பூன்
 8. கடுகு – 1/4 ஸ்பூன்

மேகி தோசை செய்முறை:

அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும்.

எண்ணெய் சூடானதும் கடுகு சேர்த்து தாளிக்கவும், கடுகு பொரிந்து வந்ததும் பொடிதாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கருவேப்பிலையை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்கு வெந்ததும் பொடிதாக நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளுங்கள்.

தக்காளி வதங்கியதும் கரம் மசாலா, மிளகாய் தூள், மேகி மசாலா ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்கவைக்கவும், தண்ணீர் நன்கு கொதித்து வந்ததும் மேகியை உடைத்து அதனுடன் சேர்த்து கொள்ளுங்கள். மேகி வெந்து வைத்ததும் கொத்தமல்லித்தழையை தூவிவிடுங்கள்.

பிறகு அடுப்பில் தோசை ஊற்றிக்கொள்ளுங்கள் தோசை ஓரளவு வெந்து வந்ததும் அதாவது 3/4 பதத்திற்கு வெந்து வைத்ததும் செய்து வைத்துள்ள மேகியை தோசை மீது வைத்து நன்றாக செட் செய்யவும். மிக்கு 2 நிமிடம் வேகவைத்து எடுத்தால் சுவையான மேகி தோசை தயார்.கேரட் தோசை செய்வது எப்படி? | Carrot Dosa Recipe in Tamil

தேவையான பொருட்கள்:

 1. பொடிதாக நறுக்கிய – வெங்காயம் ஒரு கையளவு
 2. பச்சை மிளகாய் – 1 பொடிதாக நறுக்கியது
 3. கருவேப்பிலை – சிறிதளவு பொடிதாக நறுக்கியது
 4. மொத்தமல்லி – பொடிதாக நறுக்கியது
 5. துருவிய கேரட் – ஒரு கையளவு
 6. தோசை மாவு – 1/2 கப்
 7. இட்லி பொடி – 1/2

கேரட் தோசை செய்முறை:

இரு பவுலை எடுத்துக்கொள்ளுங்கள் அவற்றில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் ஒரு சிட்டிகை உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

பிறகு அடுப்பில் தோசை கல்லை வைத்து கல் சூடானதும் தோசை ஊற்றிக்கொள்ளுங்கள். பிறகு கலந்து வைத்துள்ள வெங்காய கலவையை தோசை மீது தூவிவிடவும். பிறகு சீவி வைத்துள்ள கேரட்டை தூவிவிடுங்கள்.

பின்பு அதனுடன் 1/2 ஸ்பூன் இட்லி பொடியை தூவி எண்ணெய் ஊற்றி மொறு மொறுனு தோசை சுட்டு எடுத்தால் கேரட் தோசை தயார்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இட்லி தோசைக்கு ஏற்ற சட்னி வகைகள் தமிழில்..!மசாலா தோசை செய்வது எப்படி? | Masala Dosa Recipe in Tamil

தேவையான பொருட்கள்:

 1. உருளைக்கிழங்கு – 1 (வேகவைத்து மசித்துக்கொள்ளுங்கள்)
 2. வெங்காயம் – 1 (நீளவாக்கில் நறுக்கி கொள்ளுங்கள்)
 3. கருவேப்பிலை – சிறிதளவு (பொடிதாக நறுக்கி கொள்ளுங்கள்)
 4. பச்சை மிளகாய் – 1 (பொடிதாக நறுக்கி கொள்ளுங்கள்)
 5. கடுகு – 1/2 ஸ்பூன்
 6. மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன்
 7. மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
 8. உப்பு – ஒரு சிட்டிகை
 9. கரம் மசாலா – 1/2 ஸ்பூன்
 10. தோசை மாவு – 1/2 கப்
 11. நெய் – ஒரு ஸ்பூன்
 12. பட்டர் – ஒரு ஸ்பூன்

மசாலா தோசை

மசாலா தோசை செய்முறை:

அடுப்பில் இரு வாணலியை வைத்து அவற்றில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும், எண்ணெய் சூடானதும் கடுகு சேர்த்து தாளிக்கவும்.

கடுகு நன்கு பொரிந்து வந்ததும் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலையை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் ஓரளவு கண்ணாடி பதத்திற்கு வந்ததும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

பிறகு வேகவைத்து மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை இவற்றுடன் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளுங்கள். இவ்வாறு வதக்கிய பின் தேவையான அளவு உப்பு மற்றும் 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக 2 நிமிடம் கிளறிவிடுங்கள். நன்கு மசாலா வெந்ததும் அடுப்பை ஆப் செய்துவிடலாம்.

பின் அடுப்பில் தோசை கல் வைத்து, தோசைக்கல் சூடானதும் மெலிதாக தோசை ஊற்றிக்கொள்ளுங்கள். தோசை 1/2 வேக்காடு வெந்ததும் தயார் செய்து வைத்துள்ள மசாலாவை தோசைமீது வைத்து நன்றாக பரப்பிவிடுங்கள்.

பிறகு அவற்றில் ஒரு ஸ்பூன் நெய்யை தோசை மீது சுற்றி ஊற்றிவிடவும். தோசை நன்கு வந்தும் ஒரு ஸ்பூன் பட்டறை தோசையின் நடுவில் வைத்து தோசையை மடக்கிவிட்டு வேறொரு பிளேட்டிற்கு தோசையை மாற்றி கொள்ளுங்கள். அவ்வளவு தான் மசாலா தோசை தயார் இந்த ஐந்து வகை தோசையை கண்டிப்பாக உங்கள் வீட்டில் ட்ரை செய்து பாருங்கள் நன்றி வணக்கம்.

 

இதுபோன்ற சுவைசுவையான சமையல் குறிப்புகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சுவைசுவையான சமையல் குறிப்புகள்