வேர்க்கடலையை வைத்து செய்யகூடிய வித்தியாசமான ரெசிபி..!

Easy recipes in tamil

வேர்க்கடலையை இப்படி ஒரு முறை செய்து கொடுங்க உடனே காலியாகி விடும்..!

Easy recipes in tamil – வேர்க்கடலையை வைத்து செய்ய கூடிய சுவையான மற்றும் ஆரோக்கியமான ரெசிபியை பற்றி இப்போது நாம் இங்கு தெரிந்து கொள்வோம். வேர்க்கடலையை வைத்து இப்படி ஒரு முறை செய்து கொடுங்க உடனே காலியாகி விடும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

வேர்க்கடலையை வைத்து செய்ய கூடிய வித்தியாசமான எளிய ரெசிபியின் செய்முறை விளக்கத்தை பற்றி தெரிந்து கொள்வோமா…

100% KFC சிக்கன் செய்யும் முறை தமிழில்..!

தேவையான பொருட்கள்:

  1. பச்சை வேர்க்கடலை – ஒரு கப்
  2. சோள மாவு – 1/4 கப்
  3. முட்டை – ஒன்று
  4. எள் – ஒரு ஸ்பூன்
  5. நெய் – இரண்டு ஸ்பூன்
  6. எண்ணெய் – 1/2 லிட்டர்
  7. நாட்டு சக்கரை – 100 கிராம்
  8. ஏலக்காய் தூள் – சிறிதளவு
  9. தண்ணீர் – தேவையான அளவு
  10. உப்பு – தேவையான அளவு
ஈசியா ருசியா Breakfast Recipes செய்து முடிக்கனுமா இதை பண்ணுங்க..!

வேர்க்கடலையை வைத்து வித்தியாசமான ரெசிபி செய்முறை விளக்கம்:-

Easy recipes in tamil step: 1

ஒரு பவுலில் சுத்தமாக கழுவிய வேர்க்கடலையை எடுத்து கொள்ளவும், அதனுடன் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி கொள்ளவும்.

பின்பு அதனுடன் ஒரு ஸ்பூன் எள், 4 ஸ்பூன் சோள மாவு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

வேர்க்கடலையானது ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளாதவாறு சோள மாவை அதிகம் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

Easy recipes in tamil step: 2

இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை ஊற்றி 1/2 லிட்டர் எண்ணெயைய் ஊற்றி சூடேற்ற வேண்டும். எண்ணெய் சூடேறியதும் பிசைந்து வைத்துள்ள வேர்க்கடலையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பொரித்து எடுத்து கொள்ளவும்.

இவ்வாறு அனைத்து வேர்க்கடலையும் பொரித்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

Easy recipes in tamil step: 3

பின்பு மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து அவற்றில் இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றி நெய் உருகியதும், 100 கிராம் நாட்டு சக்கரையை சேர்த்து ஒரு முறை கிளறி விடவும், பின்பு மூன்று ஸ்பூன் தண்ணீர் ஊற்றி திரும்பவும் ஒரு முறை கிளறி விடவும்.

Easy recipes in tamil step: 4

பிறகு இதனுடன் பொரித்து வைத்துள்ள வேர்க்கடலையை மற்றும் ஒரு ஸ்பூன் ஏலக்காய் பொடி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி விடவும் .

சக்கரை பாகு நன்கு சுண்டும் வரை அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கிளறிவிடவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஈசியான வேர்க்கடலை ரெசிபி தயார்.

இவற்றில் சேர்க்கப்பட்டுள்ள நாட்டு சக்கரை உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கின்றது. குறிப்பாக வேர்க்கடலையை வைத்து வித்யாசமாக செய்வதினால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

கண்டிப்பாக உங்கள் வீட்டில் இந்த வித்தியாசமான ரெசிபியை ட்ரை செய்து பாருங்கள் நன்றாக இருக்கும்.

சைனீஸ் ஸ்பெஷல் டிராகன் சிக்கன் செய்வது எப்படி?

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal kurippu tamil