சைனீஸ் ஸ்பெஷல் டிராகன் சிக்கன் செய்வது எப்படி?

டிராகன் சிக்கன் ரெசிபி

டிராகன் சிக்கன் செய்வது எப்படி

சைனீஸ் உணவுகளில் மிகவும் பிரபலமான ஒன்று தான் டிராகன் சிக்கன் ரெசிபிஸ் (dragon chicken recipe). இத்தகைய சிக்கன் ரெசிபி அனைத்து சைனீஸ் ரெஸ்டாரண்ட்டுகளிலும் கிடைக்கும். மேலும் இதுவே ஸ்பெஷல் ரெசிபியும் கூட. இத்தகைய டிராகன் சிக்கன் ரெசிபியை எளிமையான முறையில் வீட்டிலேயே செய்யலாம். அதிலும் விடுமுறை நாட்களில் வித்தியாசமான ரெசிபியை முயற்சி செய்து குடும்பத்தினருடன் சாப்பிட்டால், அது இன்னும் இனிமையான அனுபவத்தைக் கொடுக்கும்.

குறிப்பாக இந்த டிராகன் சிக்கன் ரெசிபி (dragon chicken recipe) சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் அமைந்துள்ளது…

சரி, இப்போது அந்த சைனீஸ் ஸ்பெஷல் ரெசிபியான டிராகன் சிக்கன் ரெசிபி எப்படி (dragon chicken recipe) செய்வதென்று பார்ப்போம் வாங்க நண்பர்களே !!!

இதையும் படிக்கவும்  சுவையான மதுரை கறி தோசை செய்வது எப்படி ..!

டிராகன் சிக்கன் செய்ய தேவையான பொருட்கள்:

 1. எலும்பில்லாத சிக்கன் – 1 கிலோ (சற்று நீளமாக வெட்டியது)
 2. இஞ்சி – 1/2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
 3. பூண்டு – 1/2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
 4. சில்லி ப்ளேக்ஸ் – 1 1/2 டீஸ்பூன்
 5. தக்காளி சாஸ் – 8 அவுண்ஸ்
 6. சோயா சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
 7. சர்க்கரை – 1/2 டீஸ்பூன்
 8. கொத்தமல்லி – 1 கையளவு
 9. வெங்காயம் – 1 (நறுக்கியது)
 10. வெங்காயத் தாள் – 1 குச்சி
 11. வெஜிடேபிள் ஆயில் – தேவையான அளவு

ஊற வைப்பதற்கு…

 1. இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
 2. மிளகுத் தூள் – 1 1/2 டீஸ்பூன்
 3. முட்டை – 1 (வெள்ளைக்கரு மட்டும்)
 4. சோள மாவு – 2 டேபிள் ஸ்பூன்
இதையும் படிக்கவும்  பெங்களூர் ஸ்பெசல் சிக்கன் தம் பிரியாணி செய்வது எப்படி ..!

டிராகன் சிக்கன் செய்வது எப்படி – செய்முறை விளக்கம்..!

டிராகன் சிக்கன் ரெசிபி செய்முறை ஸ்டேப் 1:

முதலில் ஒரு கிண்ணத்தில் எலும்பில்லாத சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி, அதில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்றாக பிரட்டி, தனியாக 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

டிராகன் சிக்கன் ரெசிபி செய்முறை ஸ்டேப் 2:

பின்னர் அந்த சிக்கனை எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

டிராகன் சிக்கன் ரெசிபி செய்முறை ஸ்டேப் 3:

பின்பு நாண்ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் இஞ்சி, பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கி, சில்லி சாஸ் சேர்த்து கிளறி, தக்காளி சாஸ், சோயா சாஸ் மற்றும் சர்க்கரை சேர்த்து, கலவையை கொதிக்க விட வேண்டும்.

டிராகன் சிக்கன் ரெசிபி செய்முறை ஸ்டேப் 4:

கலவையானது கொதிக்க ஆரம்பித்ததும், தீயை மிதமான சூட்டில் வைத்து, அதில் பொரித்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து, மூடி வைத்து 5 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும்.

இப்போது அருமையான டிராகன் சிக்கன் ரெசிபிஸ்  ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லி மற்றும் வெங்காயத் தாள் தூவி அலங்கரித்து பரிமாறலாம்.

இதையும் படிக்கவும்  இப்படி செய்ங்க காளான் கிரேவியை – செம்ம டேஸ்ட்..!
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com