எப்போதும் இட்லி தோசையா அப்போ இந்த டிஸ் செய்து பாருங்கள்

Advertisement

சுவையான முட்டை பரோட்டா செய்வது எப்படி? – Egg Paratha Recipe in Tamil

வணக்கம்.. நாம் எப்போதும் காலை உணவாக இட்லி தோசையை மட்டுமே உணவாக எடுத்துக்கொண்டிருப்போம். அதனை சாப்பிட்டு நமக்கும் ஒருவித சலிப்பு தன்மையும் ஏற்படும். எதோ வேண்டா வெறுப்புடன் அம்மாவை திட்டிக்கொண்டே சாப்பிடுவோம். அப்படிப்பட்டவர்களுக்கானது தான் இந்த பதிவு. சப்பாத்தி மாவை பயன்படுத்தி தங்களது காலை உணவை ஒரு ருசியான மற்றும் ஆரோக்கியமான உணவை எப்படி சமைக்கலாம் என்று தான் இப்பொழுது நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க சப்பாத்தி மாவை பயன்படுத்தி ஒரு அருமையான டிஸ் செய்யலாம்.

தேவையான பொருட்கள்:

  1. கோதுமை மாவு – ஒரு கப்
  2. முட்டை – இரண்டு
  3. மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
  4. மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன்
  5. உப்பு – தேவையான அளவு
  6. பெரிய வெங்காயம் – ஒன்று (பொடிதாக நறுக்கியது)
  7. பச்சை மிளகாய் – ஒன்று (பொடிதாக நறுக்கியது)
  8. கேரட் – ஒன்று துருவியது
  9. குடைமிளகாய் – ஒன்று (பொடிதாக நறுக்கியது)
  10. கொத்தமல்லி இலை – சிறிதளவு (பொடிதாக நறுக்கியது)
  11. கரம்மசாலா தூள் – 1/4 ஸ்பூன்
  12. சீரகம் தூள் – 1/4 ஸ்பூன்
  13. மிளகு தூள் – சிறிதளவு

முட்டை பரோட்டா செய்முறை:

ஸ்டேப்: 1

ஒரு பவுலில் ஒரு கப் கோதுமை மாவு, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து சப்பாத்திக்கு மாவு பிசைவது போல் மாவினை சாப்டாக பிசைந்து கொள்ளுங்கள். பின் ஒரு ஸ்பூன் சமையல் எண்ணெய் சேர்த்து பிசைந்து மாவினை மூடி ஊறவைக்கவும் வைக்கவும்.

ஸ்டேப்: 2

மீண்டும் ஒரு சுத்தமான பவுலை எடுத்துக்கொள்ளுங்கள் அவற்றில் இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றிக்கொள்ளுங்கள். பின் இதனுடன் 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள், 1/4 மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறிக்கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 3

பின் அதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிகளாய், குடைமிளகாய், கேரட், கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து கிளற வேண்டும்.

ஸ்டேப்: 4

பின் கரம்மசாலா தூள், மிளகு தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 5

இப்பொழுது பிசைந்து வைத்துள்ளன கோதுமை மாவினை சப்பாத்தி போல் தேய்த்து வைத்துக்கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 6

அடுப்பில் தோசை கல் வைத்து சூடேற்ற வேண்டும். தேய்த்து வைத்துள்ள சப்பாத்தியை தோசை கல்லில் போட்டு, லேசாக வேகவைக்கவும். பின் கலந்து வைத்துள்ள முட்டை கலவையை ஒரு கரண்டி ஊற்றி சப்பாத்தியின் நான்கு பக்கத்தையும் மூடிவிட வேண்டும். இந்த சப்பாத்தி ஒரு பக்கம் வந்ததும் மறுபக்கத்தை பிரட்டி வேக வைக்கவும். அவ்வளவு ரெசிபி தயார். இவ்வாறு மீதமுள்ள மாவையும் தயார் செய்து கொள்ளுங்கள்.

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்
Advertisement