ஐந்து நிமிடத்தில் மொறுமொறு ஸ்நாக்ஸ் ரெசிபி செய்வது எப்படி..! Evening Snacks Recipes..! Tea Time Snacks..!
இட்லி மாவில் பகோடா செய்வது எப்படி..! |
snacks seivathu eppadi in tamil: நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பொதுநலம் பதிவில் ஐந்தே நிமிடத்தில் செய்யக்கூடிய ஒரு புது ரெசிபியை இன்று நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபியை உணவுகளுக்கு கூட சேர்த்து சாப்பிடலாம். இது மாறி வித்தியாசமான ரெசிபியை(Snake Gourd Recipes) வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் செய்து கொடுக்கலாம். அனைவரும் இந்த ரெசிபியை விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க இந்த ரெசிபி எப்படி செய்யலாம்னு பார்க்கலாம் வாங்க..!
மொறு மொறு ஸ்நாக்ஸ் செய்வது எப்படி – தேவையான பொருட்கள்:
- புடலங்காய் – (வட்டமாக நறுக்கியது)
- கான் ஃப்ளவர் மாவு – 2 டீஸ்பூன்
- அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்
- கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன்
- மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- இஞ்சி / பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
- ஆயில் – தேவையான அளவு
- தண்ணீர் – தேவையான அளவு
மொறு மொறுன்னு மசாலா காரப்பொரி செய்முறை..! Kara pori recipe in tamil |
சுவையான மொறு மொறு ஸ்நாக்ஸ் செய்முறை விளக்கம் 1:
Snake Gourd Recipes: முதலில் புடலங்காயை வட்டமாக நறுக்கி உள்ளே உள்ள விதைகளை நீக்கிவிட்டு ஒரு பவுலில் எடுத்துக்கொள்ளவும்.
பிறகு பவுலில் வைத்திருக்கும் புடலங்காயுடன் கான் ஃப்ளவர் மாவு 2 டீஸ்பூன் சேர்த்து கொள்ளவும்.
Evening Snacks Recipes – செய்முறை விளக்கம் 2:
Snake Gourd Recipes In Tamil: அடுத்து அரிசி மாவு 2 டேபிள் ஸ்பூன் சேர்க்கவும். அரிசி மாவு சேர்த்த பிறகு கடலை மாவு 2 டேபிள் ஸ்பூன் சேர்த்துக்கொள்ளவும்.
அடுத்து மிளகாய் தூள் 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன் அளவிற்கு சேர்க்கவும்.
இதனுடன் தேவையான அளவிற்கு அல்லது 1/2 ஸ்பூன் உப்பு சேர்த்து கொள்ளவும்.
மாலை நேர திண்பண்டம் அவல் போண்டா செய்வது எப்படி ? |
ஐந்து நிமிட காரமான ஸ்நாக்ஸ் செய்முறை விளக்கம் 3:
Evening Snacks: இப்போது எல்லாவற்றையும் கைகளால் நன்றாக கலந்து கொள்ளவும்.
நன்றாக கலந்த பிறகு ஆயில் 1 டேபிள் ஸ்பூன் சேர்த்து கொள்ளவும். இதனுடன் தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக்கூட கலந்து கொள்ளலாம்.
மொறு மொறு சிப்ஸ் செய்முறை விளக்கம் 4:
Evening Snacks Recipes: அடுத்து கடாயில் பொரித்து எடுக்க தேவையான அளவிற்கு எண்ணெயை ஹீட் செய்து கொள்ளவும்.
5 நிமிடம் இது நன்றாக ஊறிய பிறகு அதிக ஃப்ளேமில் அடுப்பை வைத்து ஒவ்வொன்றாக பொரித்து எடுக்கவும்.
எண்ணெயில் எல்லாத்தையும் சேர்த்து போடாமல் தனித்தனியாக போட்டு எடுக்க வேண்டும்.
Tea Time Snacks – செய்முறை விளக்கம் 5:
Evening Snacks Recipes in tamil: லேசாக வெந்த நிலையில் வரும்போது சிப்ஸை இருபுறமும் பிரட்டி எடுக்க வேண்டும்.
நன்றாக மொறுமொறுப்பு தன்மை வந்த பிறகு தனியாக ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.
இதனை எண்ணெயில் உடனே கூட பொரித்து எடுக்கலாம் அல்லது 5 நிமிடம் வைத்த பிறகும் பொரிக்கலாம்.
அவ்ளோதாங்க இந்த மொறு மொறு புடலங்காய் சிப்ஸ் ரெடி.
பெரும்பாலும் அனைவரும் புடலங்காயில் கூட்டு, பொரியல் இது போன்றுதான் செய்வார்கள். இன்று நாம் பார்த்த ரெசிபி அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். கண்டிப்பா எல்லாரும் இதை ட்ரை பண்ணி பாருங்க..!
நன்றி வணக்கம்..!
பானி பூரி வீட்டிலேயே செய்யலாமா ? |
இட்லி மாவில் பகோடா செய்வது எப்படி..! Evening Snacks Recipes in tamil..! Tea Time Snacks..!
10 நாள் ஆனாலும் கெடாத மொறு மொறு சிப்ஸ்..! Evening Snacks..! Rice Flour Recipes..! |
Evening Snacks: அனைவருக்கும் வணக்கம்..! இன்று பொதுநலம் பதிவில் வித்தியாசமான ரெசிபி பார்க்கப்போறோம். அது என்ன ரெசிப்பினு பாத்தோம்னா இட்லி மாவில் சுவையான பகோடா(Evening Snacks Recipes in tamil) எப்படி செய்யலாம்னு பார்க்கலாம். வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் இது மாரியான ரெசிபிகளை செய்து குடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க இந்த இட்லி மாவில் பகோடா செய்முறையை பற்றி முழுமையாக தெரிந்துக்கொண்டு நீங்களும் உங்கள் வீட்டில் செய்து அனைவரும் சாப்பிடுங்கள்..!
வேர்க்கடலையை வைத்து செய்யகூடிய வித்தியாசமான ரெசிபி..! |
சுவையான இட்லி மாவு பகோடா (Evening Snacks Recipes in tamil) – தேவையான பொருட்கள்:
- இட்லி மாவு – 1 கப்
- பெரிய வெங்காயம் – 2 (நீட்ட வடிவில் அறிந்தது)
- கொத்தமல்லி – தேவையான அளவு
- கருவேப்பிலை – தேவையான அளவு
- பச்சை மிளகாய் – 1
- உப்பு – தேவையான அளவு
- மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன்
- ஜீரகம் – 1/4 ஸ்பூன்
- எண்ணெய் – (பக்கோடா பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு)
சுவையான இட்லி மாவு பகோடா செய்முறை (Evening Snacks Recipes in tamil) Steps 1:
முதலில் 1 கப் கெட்டியான இட்லி மாவு எடுத்துக்கொள்ளவும். இட்லி மாவுடன் 2 பெரிய வெங்காயம் அறிந்து மாவுடன் சேர்த்துக்கொள்ளவும்.
சுவையான இட்லி மாவு பகோடா செய்முறை(Evening Snacks Recipes in tamil) Steps 2:
அதன்பிறகு கொத்தமல்லி, கருவேப்பிலை சேர்த்துக்கொள்ளவும். அடுத்ததாக இதனுடன் 1 பச்சை மிளகாய் நறுக்கியதை சேர்த்துக்கொள்ளவும்.
சுவையான இட்லி மாவு பகோடா செய்முறை (Evening Snacks Recipes in tamil) Steps 3:
அடுத்து தேவையான அளவுக்கு உப்பு மட்டும் 1/2 ஸ்பூன் மிளகாய் தூள் சேர்க்க வேண்டும். அடுத்து இதுல ஜீரகம் கொஞ்சம் சேர்த்துக்கோங்க. விருப்பம் இல்லாதவர்கள் ஜீரகம் சேர்க்காமல் கூட செய்யலாம். ஜீரகம் நம்ம மனதுக்கு மட்டுமே சேர்க்கிறோம்.
சுவையான இட்லி மாவு பகோடா செய்முறை (Evening Snacks Recipes in tamil) Steps 4:
பகோடா பொரித்து எடுக்க தேவையான அளவு எண்ணெய் நன்றாக காய்ந்து இருக்கணும்.
நன்றாக காய்ந்த எண்ணெயில் ரெடி பண்ண மாவை கையால் எடுத்து எண்ணெயில் உதிர்த்து போட வேண்டும்.
சிறிது நேரம் கழித்து எண்ணெயில் போட்ட பக்கோடாவை திருப்பி விடவேண்டும். உடனே திருப்பி போட்டால் மாவுடன் எல்லாம் ஒட்டி வரும் என்பதனால் சிறிது நேரம் பின்னரே எடுக்க வேண்டும்.
சுவையான இட்லி மாவு பகோடா செய்முறை (Evening Snacks Recipes in tamil) Steps 5:
அவ்ளோதாங்க இந்த இட்லி மாவு பகோடா ரெடிங்க. எல்லாரும் கடலை மாவுல தான் பகோடா செய்வாங்க. இது கொஞ்சம் வித்தியாசமான ரெசிப்பிங்க. இட்லி மாவுல செய்ற புது வகையான பகோடா. கண்டிப்பா இந்த சுவையான இட்லி மாவு பகோடாவ நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
இட்லி மாவில் சுவையான தேன் மிட்டாய் செய்வது எப்படி..! Snacks recipe in tamil..! |
10 நாள் ஆனாலும் கெடாத மொறு மொறு சிப்ஸ்..! Evening Snacks..! Rice Flour Recipes..!
Kara pori Recipe in Tamil..! |
Evening Snacks: வீட்டுல உள்ள பொருட்களை வைத்து குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் ஈஸி ஆன மொறு மொறு snacks எப்படி செய்யலாம்னு பாப்போம்..! குழந்தைகளுக்கு கடைல வாங்கி கொடுப்பதை தவிர்த்து வீட்டிலே நாம் இந்த Recipesஐ செய்து கொடுக்கலாம். குழந்தைகள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
அரிசி மாவு சிப்ஸ் (Rice Flour Recipes) – தேவையான பொருட்கள்:
- அரிசி மாவு – 200 கிராம் (1கப்)
- தண்ணீர் – 1 டம்ளர் அளவு
- எண்ணெய் – சிறிதளவு
- உப்பு – சிறிதளவு
மொறு மொறு அரிசி மாவு சிப்ஸ் செய்முறை/ Rice Flour Recipes:
அரிசி மாவு சிப்ஸ் செய்முறை (Evening Snacks) Steps 1:
முதலில் ஒரு கடாயை எடுத்துக்கொள்ளவும். பின் அவற்றில் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி அதன் பிறகு 1 சொட்டு எண்ணெய் மற்றும் தேவையான அளவுக்கு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
அரிசி மாவு சிப்ஸ் செய்முறை (Evening Snacks) Steps 2:
அதன் பிறகு 200 கிராம் அரிசி மாவு அதாவது 1 கப் அளவிற்கு உள்ள அரிசி மாவை அதனுள் சேர்த்து நன்றாக கிளற வேண்டும். அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கிளற வேண்டும். 2 நிமிடம் கழித்து அடுப்பில் இருந்து கடாயை இறக்கி வைக்க வேண்டும். பின் அந்த மாவை சிறிதளவு தண்ணீர் தெளித்து அதாவது இடியாப்பம் மாவு போன்று நன்றாக பிசைந்து கொள்ளுங்கள். இந்த மாவை 10 நிமிடம் மூடி வைக்கவும்.
Evening Snacks Recipes..! |
அரிசி மாவு சிப்ஸ் செய்முறை (Evening Snacks) Steps 3:
இப்பொழுது மாவு நல்லா ஆறுனதுக்கு அப்பறம் கையில் கொஞ்சம் எண்ணெய் தேய்த்து நன்றாக மாவை பிசைந்து கொள்ளுங்கள். அதன் பிறகு சப்பாத்தி கட்டையில் மாவை உருண்டையாக உருட்டி தேய்த்து கொள்ளுங்கள். ஓர பகுதிகளை கத்தி வைத்து கட் பண்ணிக்கோங்க. உங்களுக்கு எந்த வடிவத்துல வேணுமோ அது மாறி கட் பண்ணிக்கோங்க.
இந்த அரிசி மாவு சிப்ஸ் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவாங்க. இத குழந்தைகளுக்கு ஸ்கூல்க்கு கூட தாராளமா நம்ம செஞ்சி குடுக்கலாம்.
அரிசி மாவு சிப்ஸ் செய்முறை (Evening Snacks) Steps 4:
இப்பொழுது அடுப்பில் எண்ணெய் ஊற்றி கொள்ளவும். எண்ணெய் நல்லா ஹீட் ஆனதும் அடுப்பை மிதமான சூட்டில வைத்து கட் பண்ணி வெச்சிருக்க அரிசி மாவு சிப்ஸ எண்ணெய்ல போட்டு எடுத்துக்கோங்க. மிதமான கலர்ல வந்ததும் சிப்ஸ எடுத்துடுங்க.
Pori recipe in tamil..! |
கடைசியா சிப்ஸ வேற பாத்திரத்தில் கொட்டிட்டு உங்களுக்கு தேவையான அளவுக்கு மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து கொள்ளுங்கள். மிளகாய் தூளுடன் சாட் மசாலா சேர்த்து கொள்ளலாம் இன்னும் நிறைய சுவை கிடைக்கும். இது புடிக்காதவர்கள் சேர்த்து கொள்ளாமல் கூட சாப்பிடலாம். இவ்வளவு தாங்க இந்த அரிசி மாவு சிப்ஸ் தயார்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |