பூண்டு ஃப்ரைட் ரைஸ் (Garlic fried rice ) & காளான் கிரேவி செய்முறை..!

Advertisement

பூண்டு ஃப்ரைட் ரைஸ் (Garlic fried rice) & காளான் கிரேவி செய்முறை..!

ஃப்ரைட் ரைஸ் என்றாலே அனைவரும் விரும்பி சாப்பிடுவோம். அந்த வகையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய பூண்டு ஃப்ரைட் ரைஸ் (Garlic fried rice) மற்றும் காளான் கிரேவி செய்வது எப்படி என்று இப்போது நாம் இங்கு காண்போம் வாங்க…

100% KFC சிக்கன் செய்யும் முறை தமிழில்..!

பூண்டு ஃப்ரைட் ரைஸ்  செய்ய தேவையான பொருட்கள்:-

  1. பாஷ்மதி அரசி – 1 கப்
  2. நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
  3. பூண்டு – 20 பற்கள்
  4. வெங்காயத்தாள் வெள்ளை மற்றும் பச்சை நிறம் – சிறிதளவு
  5. வெங்காயம் – ஒரு கப்
  6. வினிகர் – 2 டேபிள் ஸ்பூன்
  7. வறுத்து ஒன்றிரண்டாக அரைத்த மிளகாய் – ஒரு தேக்கரண்டி
  8. மிளகு தூள் – சிறிதளவு
  9. உப்பு – தேவையான அளவு

பூண்டு ஃப்ரைட் ரைஸ் செய்முறை (Garlic fried rice) ஸ்டேப்: 1

முதலில் பாஷ்மதி அரிசியை உதிரி உதிரியாக வேகவைத்து, வடித்து தனியாக வைத்து கொள்ளுங்கள். (அரிசியை வைக்கும் போது தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்)

பிறகு பூண்டு, வெங்காயம், வெங்காயத்தாள் ஆகியவற்றை பொடிதாக நறுக்கி கொள்ளவும்.

பூண்டு ஃப்ரைட் ரைஸ் செய்முறை (Garlic fried rice) ஸ்டேப்: 2

பின்பு அடுப்பில் ஒரு கடாய் வைத்து, இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடேறியதும் பொடிதாக நறுக்கி வைத்துள்ள பூண்டினை முதலில் பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.

நன்றாக பூண்டு வறுபட்டவுடன், அவற்றில் பாதியளவு பூண்டை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். பின் அவற்றில் நறுக்கிய வெங்காயம் மற்றும் வெங்காயத்தாள் வெள்ளை பாகம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

இவை இரண்டு நன்றாக வதங்கியவுடன் இரண்டு ஸ்பூன் வினிகர் சேர்த்து நன்றாக கிளறிவிடுங்கள்.

காளான் 65 செய்வது எப்படி..? செய்முறை விளக்கம்..!

பூண்டு ஃப்ரைட் ரைஸ் செய்முறை (Garlic fried rice) ஸ்டேப்: 3

பின்பு இந்த கலவையுடன் வடித்து வைத்துள்ள பாஷ்மதி அரிசியை சேர்த்து நன்றாக கிளறுங்கள்.

பின் வறுத்து ஒன்றிரண்டாக அரைத்த மிளகாய் மற்றும் சிறிதளவு மிளகு தூள் ஆகியவாற்றை சேர்த்து கிளறிவிடுங்கள்.

பூண்டு ஃப்ரைட் ரைஸ் செய்முறை (Garlic fried rice) ஸ்டேப்: 4

இறுதியாக வெங்காயத்தாளின் பச்சை நிற பாகத்தை பொடிதாக நறுக்கி இந்த கலவையுடன் சேர்த்து கிளறிவிடுங்கள், அவ்வளவு தான் சுவையான பூண்டுஃப்ரைட் ரைஸ் தயார்.

இவற்றை ஒரு பிளேட்டில் மாற்றி அதன் மேல் வறுத்து தனியாக எடுத்து வைத்துள்ள பூண்டினை தூவி அனைவருக்கும் அன்பிடன் பரிமாறுங்கள்.

காளான் கிரேவி செய்முறை விளக்கம் பற்றி தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும். அவற்றில் காளான் கிரேவி செய்முறை மிக தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

இப்படி செய்ங்க காளான் கிரேவியை – செம்ம டேஸ்ட்..!

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal kurippu tamil
Advertisement